விற்பனையில் 147 சதவீதம் முன்னேற்றம்... மாருதிக்கு தக்க சமயத்தில் உதவும் இக்னிஸ்...

விற்பனையில் மாருதி இக்னிஸ் மாடல் புதிய உச்சத்தை தொட்டு ஆச்சிரியப்படுத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

விற்பனையில் 147 சதவீதம் முன்னேற்றம்... மாருதிக்கு தக்க சமயத்தில் உதவும் இக்னிஸ்...

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக உள்ள மாருதி சுஸுகியின் வேகன்-ஆர், ஸ்விஃப்ட் மற்றும் பலேனோ கார்களுடன் ஒப்பிடும்போது இக்னிஸ் மாதந்தோறும் சற்று குறைவான விற்பனை எண்ணிக்கைகளை பதிவு செய்யும் மாடலாக உள்ளது.

விற்பனையில் 147 சதவீதம் முன்னேற்றம்... மாருதிக்கு தக்க சமயத்தில் உதவும் இக்னிஸ்...

இருப்பினும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அனைவரையும் ஆச்சிரியப்படுத்தும் விதமாக 3,262 இக்னிஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு இதே ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும் சுமார் 146.74 சதவீதம் அதிகமாகும்.

விற்பனையில் 147 சதவீதம் முன்னேற்றம்... மாருதிக்கு தக்க சமயத்தில் உதவும் இக்னிஸ்...

ஏனெனில் அப்போது வெறும் 1,322 யூனிட் இக்னிஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதேபோல் 2020 ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த ஆகஸ்ட் மாத விற்பனை 47.369 சதவீதம் அதிகமாகும்.

விற்பனையில் 147 சதவீதம் முன்னேற்றம்... மாருதிக்கு தக்க சமயத்தில் உதவும் இக்னிஸ்...

இக்னிஸின் இந்த தொடர் விற்பனை முன்னேற்றம் நிச்சயம் மாருதி நிறுவனத்திற்கு தற்போதைய சூழலில் பெரிதும் உதவிகரமாக இருக்கும். இக்னிஸின் இத்தகைய வளர்ச்சிக்கு இந்த ஆண்டு துவக்கத்தில் இந்த மாடலில் தயாரிப்பு நிறுவனம் கொண்டுவந்திருந்த ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

விற்பனையில் 147 சதவீதம் முன்னேற்றம்... மாருதிக்கு தக்க சமயத்தில் உதவும் இக்னிஸ்...

சில கவனிக்கத்தக்க காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் கொண்டுவரப்பட்ட இந்த ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் மட்டுமின்றி இக்னிஸிற்கான சந்தைப்படுத்துதல் உத்தியையும் மாருதி நிறுவனம் மாற்றியுள்ளது. அதாவது முன்பு வேகன்-ஆர் போல் உயரம் அதிகமான ஹேட்ச்பேக் காராக விற்பனை செய்யப்பட்டு வந்த இக்னிஸ் தற்போது காம்பெக்ட் அர்பன் எஸ்யூவியாக வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்யப்படுகிறது.

விற்பனையில் 147 சதவீதம் முன்னேற்றம்... மாருதிக்கு தக்க சமயத்தில் உதவும் இக்னிஸ்...

ஏனெனில் இந்திய சந்தை தற்சமயம் எஸ்யூவி கார்களுக்கு தான் பரீட்சையமானதாக உள்ளது. மாருதி இக்னிஸின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.4.89 லட்சமாக உள்ளது. இந்த விலை இதன் மற்ற போட்டி கார்களை காட்டிலும் மலிவானதாகும். அதேநேரம் இக்னிஸின் டாப் வேரியண்ட் ரூ.7.19 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விற்பனையில் 147 சதவீதம் முன்னேற்றம்... மாருதிக்கு தக்க சமயத்தில் உதவும் இக்னிஸ்...

ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்பை கொண்ட 7-இன்ச் தொடுத்திரையுடன் மாருதியின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்ப்ளே இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா இக்னிஸில் முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகின்றன.

விற்பனையில் 147 சதவீதம் முன்னேற்றம்... மாருதிக்கு தக்க சமயத்தில் உதவும் இக்னிஸ்...

இவற்றுடன் பயணிகளின் பாதுகாப்பிற்கு இரட்டை முன்பக்க காற்றுப்பைகள், ஏபிஎஸ், இபிடி, மைய லாக்கிங், குழந்தை இருக்கைக்கான பாதுகாப்பு ஹேங்கர், கார் திருடு போவதை தடுக்கும் அலாரம், விபத்தை உணர்த்து தானாக திறந்து பயணிகளை காப்பாற்றும் வசதி மற்றும் பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்டவற்றையும் இந்த மாருதி தயாரிப்பு கொண்டுள்ளது.

விற்பனையில் 147 சதவீதம் முன்னேற்றம்... மாருதிக்கு தக்க சமயத்தில் உதவும் இக்னிஸ்...

இவை மட்டுமில்லாமல் சாவியில்லாமல் காருக்குள் நுழையும் வசதி, வாகனத்தை ஸ்டார்ட் செய்ய மற்றும் நிறுத்த அழுத்தும் பொத்தான் மற்றும் தானியங்கி க்ளைமேட் கண்ட்ரோல் போன்றவற்றுடனும் வழங்கப்படுகின்ற இக்னிஸில் இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 1.2 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

விற்பனையில் 147 சதவீதம் முன்னேற்றம்... மாருதிக்கு தக்க சமயத்தில் உதவும் இக்னிஸ்...

அதிகப்பட்சமாக 83 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. தற்போதைக்கு இக்னிஸில் சிஎன்ஜி வேரியண்ட் வழங்கப்படுவதில்லை, ஆனால் இந்த வேரியண்ட்டை மாருதி நிறுவனம் எதிர்காலத்தில் கொண்டுவரவுள்ளது.

Most Read Articles
English summary
Maruti Suzuki Ignis sales grow by 147 percentage in 2020 august. Read in Telugu.
Story first published: Monday, September 7, 2020, 13:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X