Just In
- 2 hrs ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 8 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 9 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
- 11 hrs ago
பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா?
Don't Miss!
- News
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொத்துக்கொத்தாக மரணம்.. பீதியை கிளப்பும் கொரோனா
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கொரோனா பரவுவதை தடுக்கும்... மாருதி அறிமுகம் செய்த தயாரிப்புக்கு செம ரெஸ்பான்ஸ்... ரேட் ரொம்ப கம்மி
கொரோனா பரவுவதை தடுப்பதற்காக, மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள தயாரிப்பிற்கு, நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.

உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது கோர தாண்டவம் ஆடி வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில், இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி கொண்டுள்ளது.

ஆனால் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு இந்தியாவில் தற்போது ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே நீண்ட நாட்களாக முடங்கி கிடந்த தொழில்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு வருகின்றன. இதில், ஆட்டோமொபைல் துறை மிகவும் முக்கியமானது.

இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் அன்று முதல் இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் வாகன உற்பத்தி நடைபெறவில்லை. அத்துடன் ஷோரூம்களும் தற்காலிகமாக மூடப்பட்டன. ஆனால் அரசு வழங்கிய தளர்வுகள் காரணமாக கடந்த மே 4ம் தேதி முதல் மீண்டும் வாகன உற்பத்தி தொடங்கியது. அத்துடன் டீலர்ஷிப்களும் திறக்கப்பட்டன.

இந்தியாவின் மற்ற நிறுவனங்களை போன்று, மாருதி சுஸுகி நிறுவனமும் தனது அன்றாட செயல்பாடுகளை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. ஆனால் அரசு வழங்கிய பாதுகாப்பு நெறிமுறைகளை மாருதி சுஸுகி தீவிரமாக பின்பற்றி வருகிறது. அதன் தொழிற்சாலைகளிலும், டீலர்ஷிப்களிலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
MOST READ: மலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்!

ஆனால் ஊழியர்கள் மட்டுமின்றி, தனது வாடிக்கையாளர்கள் நலனிலும் மாருதி சுஸுகி நிறுவனம் அக்கறை செலுத்த தொடங்கியுள்ளது. இதன்படி கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தேவைப்படும் அவசியமான தயாரிப்புகளை மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த தயாரிப்புகள் மாருதி ஜென்யூன் ஆக்ஸஸெரீஸ்களாக கிடைக்கும்.

மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள தயாரிப்புகளில், கார் கேபின் ப்ரொடெக்டிவ் பார்ட்டீசியன் (Car Cabin Protective Partition) முக்கியமானது. இது பிளாஸ்டிக் சீட் ஆகும். வெல்க்ரோ மூலமாக இதனை அட்டாச் செய்து கொள்ள முடியும். முன் மற்றும் பின் பகுதியில் அமர்ந்திருக்கும் பயணிகளை பிரிப்பதற்கு இந்த பிளாஸ்டிக் சீட் பயன்படும்.

எர்டிகா, எக்ஸ்எல்6, சியாஸ், எஸ்-க்ராஸ், பழைய வேகன்ஆர், ரிட்ஸ், டிசையர் டூர், செலிரியோ மற்றும் ஆல்டோ உள்ளிட்ட கார்களுக்கு இந்த பிளாஸ்டிக் சீட் கிடைக்கிறது. ரூ.549 மற்றும் ரூ.649 ஆகிய விலைகளில் இந்த பிளாஸ்டிக் சீட் கிடைக்கும். தற்போது இந்த பிளாஸ்டிக் சீட் இந்தியா முழுக்க பிரபலமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த பிளாஸ்டிக் ஸ்க்ரீன் மூலமாக காரின் இன்டீரியரை தனித்தனி கேபின்களாக பிரித்து கொள்ள முடியும். எனவே தற்போதைய நிலையில் மிகவும் அத்தியாவசியமானதாக கருதப்படும் சமூக இடைவெளியையும் உறுதி செய்து கொள்ளலாம். குறிப்பாக வாடகைக்கு கார் ஓட்டுபவர்களுக்கு இந்த பிளாஸ்டிக் ஸ்க்ரீன் உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு சில கார் மாடல்களின் கேபின்களுக்கு ஏற்ற வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பிளாஸ்டிக் சீட் வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. இருமல், தும்மல் மற்றும் பேசுவதன் மூலம் வெளிப்படும் திரவ துளிகள், காரின் கேபினுக்குள் பரவுவதை இந்த ஸ்க்ரீன் தடுக்கிறது. இதன் மூலம் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும்.

அதிவேகத்தில் பயணம் செய்தாலும் கழன்று விடாதபடி அதிக ஒட்டுதல் திறன் கொண்ட வெல்க்ரோ மூலமாக இந்த பிளாஸ்டிக் ஸ்க்ரீனை அட்டாச் செய்து கொள்ளலாம். விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஈக்கோ உள்ளிட்ட மாடல்களுக்கும் இந்த பிளாஸ்டிக் ஸ்க்ரீன் வெகு விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர கொரோனா வைரஸிடம் இருந்து தற்காத்து கொள்வதற்காக இன்னும் ஒரு சில தயாரிப்புகளையும் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி ஃபேஸ் வைசரையும் (Face Visor) மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலையை மாருதி சுஸுகி நிறுவனம் 55 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.

அத்துடன் 20 ரூபாய் என்ற விலையில் கையுறைகளையும் (Hand Gloves), 149 ரூபாய் என்ற விலையில் என்95 முக கவசங்களையும் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து டீம்-பிஎச்பி செய்தி வெளியிட்டுள்ளது.