மாருதி ஆலை அருகே ஜிம்னி எஸ்யூவி சோதனை ஓட்டம்... இந்திய அறிமுகம் உறுதியாகிறது?

முதல்முறையாக சுஸுகி ஜிம்னி எஸ்யூவி இந்தியாவில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் வீடியோ ஒன்று வெளியாகி ஆஃப்ரோடு பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மாருதி ஆலை அருகே ஜிம்னி எஸ்யூவி சோதனை ஓட்டம்... இந்திய அறிமுகம் உறுதியாகிறது?

சுஸுகி நிறுவனத்தின் ஜிம்னி எஸ்யூவி பல்வேறு நாடுகளில் ஆஃப்ரோடு பிரியர்களுக்கு சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. குறிப்பாக, இதன் பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கு தோதுவாக இருப்பதும் அதிக வரவேற்பை பெற காரணமாக உள்ளது. இந்த நிலையில், ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்பனையில் இருக்கும் சுஸுகி ஜிம்னி எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மாருதி ஆலை அருகே ஜிம்னி எஸ்யூவி சோதனை ஓட்டம்... இந்திய அறிமுகம் உறுதியாகிறது?

இதற்கு தக்கவாறு கடந்த பிப்ரவரி மாதம் சுஸுகி ஜிம்னி எஸ்யூவியை ஆட்டோ எக்ஸ்போவில் வைத்து இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வந்தது மாருதி நிறுவனம். இதைத்தொடர்ந்து, இந்த புதிய எஸ்யூவி மீதான ஆவல் இந்திய கார் பிரியர்கள் மத்தியில் அதிகரித்தது.

இந்த சூழலில், கடந்த மாதம் சுஸுகி ஜிம்னி எஸ்யூவியின் உற்பத்தி இந்தியாவில் சோதனை முறையில் துவங்கப்பபட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து, தற்போது மாருதியின் குர்கான் ஆலை அமைந்துள்ள பகுதிக்கு அருகில் சுஸுகி ஜிம்னி எஸ்யூவி சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது. முதல்முறையாக இந்தியாவில் சுஸுகி சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

மாருதி ஆலை அருகே ஜிம்னி எஸ்யூவி சோதனை ஓட்டம்... இந்திய அறிமுகம் உறுதியாகிறது?

இதனால், சுஸுகி ஜிம்னி எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது உறுதியாகி இருக்கிறது. அடுத்த ஆண்டு இந்தியாவில் சுஸுகி ஜிம்னி எஸ்யூவி மாருதி பிராண்டில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி ஆலை அருகே ஜிம்னி எஸ்யூவி சோதனை ஓட்டம்... இந்திய அறிமுகம் உறுதியாகிறது?

நான்காம் தலைமுறை மாடலாக விற்பனையில் வைக்கப்பட்டு இருக்கும் சுஸுகி ஜிம்னி எஸ்யூவி 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவி 3,550 மிமீ நீளமும், 1,645 மிமீ அகலமும், 1,730 மிமீ உயரமும் பெற்றுள்ளது. இந்த எஸ்யூவி 2,250 மிமீ வீல்பேஸ் கொண்டது.

மாருதி ஆலை அருகே ஜிம்னி எஸ்யூவி சோதனை ஓட்டம்... இந்திய அறிமுகம் உறுதியாகிறது?

இந்தியாவில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் சுஸுகி ஜிம்னி எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வர வாய்ப்புள்ளது. ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்ப 4 வீல் டிரைவ் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது.

மாருதி ஆலை அருகே ஜிம்னி எஸ்யூவி சோதனை ஓட்டம்... இந்திய அறிமுகம் உறுதியாகிறது?

புதிய சுஸுகி ஜிம்னி எஸ்யூவி ரூ.9 லட்சம் முதல் ரூ.15 லட்சம் இடையிலான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது. புதிய மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு மிக நேரடி போட்டியை கொடுக்கும்.

Source:Kar DIY

Most Read Articles
English summary
Suzuki Jimny SUV spotted testing near Maruti's Gurugram car plant.
Story first published: Monday, October 19, 2020, 10:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X