குறைவான பாதுகாப்பு மதிப்பெண்கள் ஒன்றும் செய்யவில்லை!! விற்பனையில் மீண்டும் கலக்கியுள்ள மாருதி சுஸுகி

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தை காட்டிலும் கடந்த 2020 நவம்பரில் மாருதி சுஸுகி நிறுவனம் கணிசமான விற்பனை எண்ணிக்கையை இந்திய சந்தையில் பதிவு செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

குறைவான பாதுகாப்பு மதிப்பெண்கள் ஒன்றும் செய்யவில்லை!! விற்பனையில் மீண்டும் கலக்கியுள்ள மாருதி சுஸுகி

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தம் 153,233 கார் மாதிரிகளை உலகம் முழுக்க விற்பனை செய்துள்ளது. இது 2019 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.7 சதவீதம் அதிகமாகும்.

குறைவான பாதுகாப்பு மதிப்பெண்கள் ஒன்றும் செய்யவில்லை!! விற்பனையில் மீண்டும் கலக்கியுள்ள மாருதி சுஸுகி

ஏனெனில் அப்போது 150,630 மாருதி கார்கள் தான் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. மொத்த விற்பனையான 153,223 கார்களில் 144,219 கார்கள் இந்தியாவிலும் மீதி 9,004 கார்கள் வெளிநாட்டு சந்தைகளிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

குறைவான பாதுகாப்பு மதிப்பெண்கள் ஒன்றும் செய்யவில்லை!! விற்பனையில் மீண்டும் கலக்கியுள்ள மாருதி சுஸுகி

இந்தியாவில் விற்பனையான மாருதி கார்களிலும் 5,263 யூனிட்கள் வேறு நிறுவனங்கள் உதவியுடன் விற்பனை செய்யப்பட்டவையாகும். மற்ற நிறுவனங்களை போல் கொரோனாவினால் கொண்டுவரப்பட்ட ஊரடங்குகளினால் மாருதியின் விற்பனையும் பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்தது.

குறைவான பாதுகாப்பு மதிப்பெண்கள் ஒன்றும் செய்யவில்லை!! விற்பனையில் மீண்டும் கலக்கியுள்ள மாருதி சுஸுகி

இருப்பினும் ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் இந்திய ஆட்டோமொபைல் துறை இயல்பு நிலைக்கு வேகமாக திரும்ப மிகவும் உதவியாக இருந்தது. இதில் மாருதி சுஸுகியும் தனது பழைய முதலிடத்திற்கு மீண்டும் முன்னேறி வருகிறது.

குறைவான பாதுகாப்பு மதிப்பெண்கள் ஒன்றும் செய்யவில்லை!! விற்பனையில் மீண்டும் கலக்கியுள்ள மாருதி சுஸுகி

இதற்கு இந்நிறுவனத்தின் சப்-காம்பெட் மற்றும் பி-பிரிவு பயன்பாட்டு வாகனங்களின் விற்பனைதான் பெரிதும் உதவியாக இருந்தது என்றால் அது மிகையில்லை. ஏனெனில் கடந்த மாதத்தில் மட்டும் 76,630 காம்பெக்ட் வாகனங்களையும், 23,753 பி-பிரிவு பயன்பாட்டு வாகனங்களையும் இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

குறைவான பாதுகாப்பு மதிப்பெண்கள் ஒன்றும் செய்யவில்லை!! விற்பனையில் மீண்டும் கலக்கியுள்ள மாருதி சுஸுகி

ஏ-பிரிவு காம்பெக்ட் வாகனங்களாக வேகன்ஆர், ஸ்விஃப்ட், செலிரியோ, இக்னிஸ், பலேனோ, டிசைர், டூர் எஸ் உள்ளிட்ட கார் மாடல்களையும், பி-பிரிவு பயன்பாட்டு வாகனங்களாக ஜிப்ஸி, எர்டிகா, விட்டாரா பிரெஸ்ஸா, எக்ஸ்எல்6, எஸ்-க்ராஸ் என்ற கார்களையும் மாருதி நிறுவனம் விற்பனை செய்துவருகிறது. அதேநேரம் ஆம்னி, ஈக்கோ போன்ற மாருதி வேன்களும் கடந்த மாதத்தில் 11,183 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

குறைவான பாதுகாப்பு மதிப்பெண்கள் ஒன்றும் செய்யவில்லை!! விற்பனையில் மீண்டும் கலக்கியுள்ள மாருதி சுஸுகி

மிட்-சைஸ் செடான் காரான சியாஸின் விற்பனையில் 29.1 சதவீத முன்னேறத்தை 2019 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகை மாருதி சுஸுகி நிறுவனம் கண்டுள்ளது. இந்த நிலை இந்த 2020 டிசம்பர் மாதத்திற்கும் தொடரும் என நம்புவதாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷஷாங்க் ஸ்ரீவஸ்தாவா கூறியுள்ளார்.

குறைவான பாதுகாப்பு மதிப்பெண்கள் ஒன்றும் செய்யவில்லை!! விற்பனையில் மீண்டும் கலக்கியுள்ள மாருதி சுஸுகி

2020 நவம்பர் மாத விற்பனை தொடர்பான அறிக்கையில், பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிப்பதாகவும், வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்த கடுமையாக உழைத்து வருவதாகவும் மாருதி அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.

Most Read Articles

English summary
Maruti Suzuki sales in November 2020
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X