புதிய எஸ்-க்ராஸ் பெட்ரோல் காரின் அப்டேட்கள் என்னென்ன? டிவிசி வீடியோ மூலம் தெளிவுபடுத்தியுள்ள மாருதி

சமீபத்தில் சந்தையில் அறிமுகமான மாருதி எஸ்-க்ராஸ் ப்ரீமியம் க்ராஸ்ஓவர் மாடலின் டெலிவிஷன் கமர்ஷியல் (டிவிசி) வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தயாரிப்பு நிறுவானம் கூறவந்துள்ள தகவலை இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய எஸ்-க்ராஸ் பெட்ரோல் காரின் அப்டேட்கள் என்னென்ன? டிவிசி வீடியோ மூலம் தெளிவுபடுத்தியுள்ள மாருதி

மாருதி சுஸுகி நிறுவனம் நீண்ட காலமாக திட்டமிட்டு வந்த எஸ்-க்ராஸ் மாடலின் புதிய பிஎஸ்6 பெட்ரோல் வெர்சனை சில தினங்களுக்கு முன்பு சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்த பெட்ரோல் மாடலின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.8.39 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய எஸ்-க்ராஸ் பெட்ரோல் காரின் அப்டேட்கள் என்னென்ன? டிவிசி வீடியோ மூலம் தெளிவுபடுத்தியுள்ள மாருதி

இது இதன் பிஎஸ்4 வெர்சனை காட்டிலும் கிட்டத்தட்ட ரூ.11 ஆயிரம் குறைவாகும். ரூ.8.39 லட்சத்தில் இருந்து இந்த க்ராஸ்ஓவர் மாடல் அதிகப்பட்சமாக ரூ.12.39 லட்சம் வரையில் விற்பனை செய்யப்படவுள்ளது. இதற்கிடையில் தான் மாருதி சுஸுகியின் நெக்ஸா டீலர்ஷிப்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த காரின் டிவிசி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

நெக்ஸா எக்ஸ்ப்ரீயன்ஸ் யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் காரில் புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் தான் முக்கியமாக சுட்டி காட்டப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த புதிய மாற்றங்களால் எஸ்-க்ராஸ் கார் வழக்கமாக கொண்டிருக்கும் வெளிப்புற மற்றும் உட்புற தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை.

புதிய எஸ்-க்ராஸ் பெட்ரோல் காரின் அப்டேட்கள் என்னென்ன? டிவிசி வீடியோ மூலம் தெளிவுபடுத்தியுள்ள மாருதி

மாறாக ப்ரோஜெக்டர் தரத்தில் ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்இடி டிஆர்எல்களுடன் முன்புறத்தை சற்று முரட்டுத்தனமாக பெற்றுள்ளது. முன்பக்க க்ரில்லில் கொடுக்கப்பட்டுள்ள க்ரோம் கார்னிஷ் மொத்த காருக்கும் சற்று ப்ரீமியம் தோற்றத்தை வழங்குகிறது.

புதிய எஸ்-க்ராஸ் பெட்ரோல் காரின் அப்டேட்கள் என்னென்ன? டிவிசி வீடியோ மூலம் தெளிவுபடுத்தியுள்ள மாருதி

உட்புறத்தில் கார் ப்ரீமியம் தரத்திலான லெதர் இருக்கைகள், மாருதியின் ஸ்மார்ட் ஸ்டூடியோ சிஸ்டத்தால் அப்டேட் செய்யப்பட்ட தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. இவை மட்டுமின்றி க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் எஸ்எச்விஎஸ் ஸ்மார்ட் ஹைப்ரீட் தொழிற்நுட்பம் உள்ளிட்டவற்றையும் பார்க்க முடிகிறது.

புதிய எஸ்-க்ராஸ் பெட்ரோல் காரின் அப்டேட்கள் என்னென்ன? டிவிசி வீடியோ மூலம் தெளிவுபடுத்தியுள்ள மாருதி

இவை காரின் எரிபொருள் திறனை மேம்படுத்த உதவும். மற்ற அம்சங்களாக மழை வருவதை உணர்ந்து செயல்படும் வைப்பர்கள், எலக்ட்ரிக் மூலமாக கண்ட்ரோல் செய்யக்கூடிய ஓஆர்விஎம்கள் போன்றவை உள்ளன. எஸ்-க்ராஸ் மாடலுக்கு முன்பு வழங்கப்பட்டிருந்த 1.3 லிட்டர் டீசல் என்ஜினின் விற்பனை ஏற்கனவே நிறுத்தப்பட்டுவிட்டது.

புதிய எஸ்-க்ராஸ் பெட்ரோல் காரின் அப்டேட்கள் என்னென்ன? டிவிசி வீடியோ மூலம் தெளிவுபடுத்தியுள்ள மாருதி

இதனால் சமீபத்தில் அறிமுகமான புதிய பிஎஸ்6 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தேர்வில் மட்டும் தான் இந்த கார் தற்போதைக்கு கிடைக்கும். சுசுகி நிறுவனத்தின் தொழிற்சாலையிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்ற இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 112 பிஎச்பி மற்றும் 134 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

புதிய எஸ்-க்ராஸ் பெட்ரோல் காரின் அப்டேட்கள் என்னென்ன? டிவிசி வீடியோ மூலம் தெளிவுபடுத்தியுள்ள மாருதி

மேலும் இந்த பெட்ரோல் என்ஜின் மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா, சியாஸ், எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 மாடல்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. காரில் கொண்டுவரப்பட்டுள்ள மற்றொரு முக்கியமான மாற்றமாக இந்த பெட்ரோல் என்ஜினிற்கு ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக வழக்கமாக வழங்கப்பட்டு வந்த மேனுவல் கியர்பாக்ஸ் உடன் தற்போது புதியதாக 4-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்படுகிறது.

புதிய எஸ்-க்ராஸ் பெட்ரோல் காரின் அப்டேட்கள் என்னென்ன? டிவிசி வீடியோ மூலம் தெளிவுபடுத்தியுள்ள மாருதி

முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கவிட்டு நடைபெற்று வருவதால் மாருதி எஸ்-க்ராஸ் பெட்ரோல் மாடலின் டெலிவிரி பணிகளை விரைவில் எதிர்பார்க்கலாம். விற்பனையில் இந்த காருக்கு போட்டியாக ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ரெனால்ட் டஸ்டர் மற்றும் நிஸான் கிக்ஸ் போன்ற காம்பெக்ட் எஸ்யூவி மாடல்கள் உள்ளன.

Most Read Articles

English summary
Maruti Suzuki released new tvc for new S-Cross petrol.
Story first published: Saturday, August 8, 2020, 13:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X