மாருதி எஸ் க்ராஸ் பெட்ரோல் மாடல் விரைவில் அறிமுகமாகிறது!

மாருதி எஸ் க்ராஸ் காரின் பெட்ரோல் மாடல் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 மாருதி எஸ் க்ராஸ் பெட்ரோல் மாடல் விரைவில் அறிமுகமாகிறது!

மாருதி நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்போடு மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் களமிறக்கிய மாடல்தான் எஸ் க்ராஸ். ஆனால், க்ராஸ்ஓவர் ரகத்தில் வந்த எஸ் க்ராஸ் இந்தியர்களிடம் எடுபடவில்லை. மேலும், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி களமிறக்கப்பட்டதால், எஸ் க்ராஸ் காரின் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாத நிலை இருந்து வருகிறது.

 மாருதி எஸ் க்ராஸ் பெட்ரோல் மாடல் விரைவில் அறிமுகமாகிறது!

அதேநேரத்தில், மாருதி கார் பிரியர்களுக்கு மிட்சைஸ் எஸ்யூவி ரகத்தில் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த கார் மாருதியின் நெக்ஸா ஷோரூம் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.

 மாருதி எஸ் க்ராஸ் பெட்ரோல் மாடல் விரைவில் அறிமுகமாகிறது!

போட்டி மாடல்களில் அதிக சக்திவாய்ந்த எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும் நிலையில், இந்த காரில் வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் அளவுக்கான திறன் கொண்ட எஞ்சின் இல்லை என்பது மிகப்பெரிய குறையாக இருந்து வந்தது.

 மாருதி எஸ் க்ராஸ் பெட்ரோல் மாடல் விரைவில் அறிமுகமாகிறது!

மாருதி எஸ் க்ராஸ் காரில் ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த எஞ்சின் 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருந்தது. பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகளால் இந்த எஞ்சின் தேர்வு நிறுத்தப்பட்டுள்ளது.

 மாருதி எஸ் க்ராஸ் பெட்ரோல் மாடல் விரைவில் அறிமுகமாகிறது!

இந்த நிலையில், மாருதி எஸ் க்ராஸ் கார் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையா பெட்ரோல் எஞ்சின் தேர்வில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

 மாருதி எஸ் க்ராஸ் பெட்ரோல் மாடல் விரைவில் அறிமுகமாகிறது!

மாருதி எஸ் க்ராஸ் கார் பெட்ரோல் மாடலில் 1.5 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

 மாருதி எஸ் க்ராஸ் பெட்ரோல் மாடல் விரைவில் அறிமுகமாகிறது!

மாருதி எஸ் க்ராஸ் காரின் பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும். பழைய மாடலைவிட அதிக சக்திவாய்ந்த எஞ்சினுடன் வர இருக்கிறது. ஆனால், மைலேஜ் குறைவாக இருக்கும்.

Most Read Articles
English summary
Maruti Suzuki has released teaser of S Cross with BS6 petrol engine option and will be launched in India very soon.
Story first published: Thursday, April 2, 2020, 14:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X