டீலர்ஷிப்களில் மாருதி எஸ்-க்ராஸ் மாடலின் 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்... விற்பனை எப்போது ஆரம்பம்?

வெளிப்புற தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் மாருதி சுஸுகி நிறுவனத்தின் எஸ்-க்ராஸ் மாடலின் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட் டீலர்ஷிப்பிற்கு உட்பட்ட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டீலர்ஷிப்களில் மாருதி எஸ்-க்ராஸ் மாடலின் 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்... விற்பனை எப்போது ஆரம்பம்?

மாருதி சுஸுகி இந்தியா லிமிடேட் நிறுவனம் ப்ரீமியம் கார்களை மட்டுமே விற்பனை செய்ய பயன்படுத்திவரும் நெக்ஸா டீலர்ஷிப்களில் முதன்முதலாக விற்பனை செய்யப்பட்ட மாடல் தான் எஸ்-க்ராஸ். பிறகு இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் 2017ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

டீலர்ஷிப்களில் மாருதி எஸ்-க்ராஸ் மாடலின் 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்... விற்பனை எப்போது ஆரம்பம்?

ஆரம்பத்தில் 1.6 லிட்டர் டிடிஐஎஸ் 320 டீசல் என்ஜின் உடன் விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த க்ராஸ்ஓவர் கார், கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த புதிய மாசு உமிழ்வு விதியினால் இந்த டீசல் என்ஜினிற்கு மாற்றாக 1.3 லிட்டர் டிடிஐஎஸ் 200 டீசல் என்ஜினை பெற்றது.

டீலர்ஷிப்களில் மாருதி எஸ்-க்ராஸ் மாடலின் 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்... விற்பனை எப்போது ஆரம்பம்?

5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்படுகின்ற இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 90 பிஎச்பி பவரை வெளிப்படுத்துகிறது. இந்த நிலையில் தான் விட்டாரா பிரெஸ்ஸாவின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் புதியதாக பெற்றுள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தேர்வை எஸ்-க்ராஸ் மாடலுக்கும் வழங்கும் திட்டத்தை மாருதி சுஸுகி நிறுவனம் கையில் எடுத்துள்ளது.

டீலர்ஷிப்களில் மாருதி எஸ்-க்ராஸ் மாடலின் 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்... விற்பனை எப்போது ஆரம்பம்?

இந்த ஆண்டு துவக்கத்தில் 2020 விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி மாடலில் வழங்கப்பட்ட இந்த பெட்ரோல் என்ஜின் எஸ்எச்விஎஸ் தொழிற்நுட்பத்துடன் பொருத்தப்படுகிறது. இதன் காரணமாக காரின் எரிபொருள் திறனும் அதிகரிக்கும். ஆனால் இந்த தொழிற்நுட்பம் விட்டாரா பிரெஸ்ஸாவில் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டில் மட்டும் தான் வழங்கப்படுகிறது.

டீலர்ஷிப்களில் மாருதி எஸ்-க்ராஸ் மாடலின் 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்... விற்பனை எப்போது ஆரம்பம்?

ஆனால் எஸ்-க்ராஸ் மாடலில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு விதமான ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளிலும் என்ஜின் உடன் இந்த ஸ்மார்ட் ஹைப்ரீட் தொழிற்நுட்பம் இணைக்கப்படவுள்ளது. இதன் மூலமாக எஸ்-க்ராஸ் புதிய பெட்ரோல் என்ஜினால் 4-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வை பெறவுள்ளதை அறியலாம்.

டீலர்ஷிப்களில் மாருதி எஸ்-க்ராஸ் மாடலின் 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்... விற்பனை எப்போது ஆரம்பம்?

இந்த 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 104.7 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மேலும் காடிவாடி செய்தி தளம் தற்போது வெளியிட்டுள்ள ஸ்பை படங்கள் 2020 எஸ்-க்ராஸ் மாடலில் பின்புற டிஸ்க் ப்ரேக்குகள் வழங்கப்பட்டிருப்பதையும் வெளிக்காட்டுகின்றன.

டீலர்ஷிப்களில் மாருதி எஸ்-க்ராஸ் மாடலின் 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்... விற்பனை எப்போது ஆரம்பம்?

மற்றப்படி வெளிப்புற தோற்றத்தில் வேறெந்த மாற்றத்தையும் ஏற்காத இந்த 2020 மாடலில் புதியதாக பின்புற டெயில்கேட்டில் மட்டும் ஸ்மார்ட் ஹைப்ரீட் தொழிற்நுட்பம் வழங்கப்பட்டுள்ளதை குறிக்கும் விதமாக எஸ்எச்விஎஸ் முத்திரை பொருத்தப்பட்டுள்ளது. இத்தகைய பெட்ரோல் என்ஜின் உடன் எஸ்-க்ராஸ் மாடல் தற்போது டீலர்ஷிப்களை சென்றடைய துவங்கியுள்ளதால் மிக விரைவில் விற்பனையை துவங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Maruti S-Cross 1.5L Petrol Spotted At Dealer Yard; Launch Soon
Story first published: Tuesday, August 4, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X