Just In
- 3 hrs ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 5 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 7 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 7 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா... இந்திய நேரப்படி இன்றிரவு 10 மணிக்கு நேரடி ஒளிபரப்பு..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முன்பணம் செலுத்த வேண்டாம்! பராமரிப்பு, காப்பீடு செலவும் இல்லை! சென்னையிலும் மாருதி மாத சந்தா திட்டம்
சென்னை உள்பட புதிதாக 4 நகரங்களுக்கு மாருதி சுஸுகி நிறுவனத்தின் மாத சந்தா திட்டம் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களை காட்டிலும், சொந்த கார்களில் பயணம் செய்வது பாதுகாப்பானது என மக்கள் கருதுகின்றனர். ஆனால் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக சொந்தமாக கார் வாங்குவதும் ஒரு சிலரால் இயலாத காரியமாக உள்ளது.

அப்படிப்பட்டவர்களுக்கு கார் நிறுவனங்கள் வழங்கும் மாத சந்தா திட்டம் வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் புதிய காரை சொந்தமாக்காமலேயே அவற்றை பயன்படுத்த முடியும். அதாவது மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை செலுத்தி விட்டு, புதிய கார்களை பயன்படுத்தி கொள்ளலாம்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியும் வாடிக்கையாளர்களுக்கு மாத சந்தா திட்டத்தை வழங்கி வருகிறது. டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியம், பெங்களூர், ஐதராபாத் மற்றும் புனே உள்ளிட்ட நகரங்களில், வாடிக்கையாளர்களுக்கு மாத சந்தா திட்டத்தை மாருதி சுஸுகி நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டத்தில் புதிதாக 4 நகரங்களை இணைத்துள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் இன்று (நவம்பர் 24ம் தேதி) அறிவித்துள்ளது. இதன்படி அகமதாபாத், மும்பை (நவி மும்பை மற்றும் தானே உள்பட), சென்னை மற்றும் காந்திநகர் ஆகிய நகரங்களுக்கும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் மாத சந்தா திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் அரேனா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்படும் ஸ்விஃப்ட், டிசையர், விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் எர்டிகா ஆகிய கார்களையும், நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்படும் பலேனோ, சியாஸ் மற்றும் எக்ஸ்எல்6 ஆகிய கார்களையும் இந்த மாத சந்தா திட்டத்தில் தேர்வு செய்ய முடியும்.

12, 18, 24, 30, 36, 42 அல்லது 48 மாதங்கள் என்ற கால அளவுகளில் இந்த திட்டம் வழங்கப்படுகிறது. மாதந்தோறும் சந்தா செலுத்துவதன் மூலம் புதிய கார்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். வாகனத்தின் பராமரிப்பு செலவு, காப்பீடு மற்றும் பயணத்தின்போது வாகனத்தில் ஏதாவது பிரச்னை என்றால் தகுதி வாய்ந்த மெக்கானிக்குகள் மூலம் வழங்கப்படும் உதவி (Roadside Assistance) ஆகியவை இந்த கட்டணத்தில் அடங்கி விடும்.

முன் பணம் செலுத்த தேவையில்லை என்பதும் இந்த திட்டத்தின் கூடுதல் சிறப்பம்சமாகும். இந்த திட்டத்தின் மூலம் வாகனத்தின் பராமரிப்புக்கு நீங்கள் செலவிட வேண்டியதில்லை. வாகனத்தை வாங்கும்போது பதிவு கட்டணம் செலுத்துவது, காப்பீடு புதுப்பிப்பது போன்ற செலவுகளை பற்றியும் கவலைப்படாமல், புதிய காரை தொடர்ச்சியாக பயன்படுத்தலாம்.

மாத சந்தா திட்டக்காலம் முடிவடைந்ததும் வாடிக்கையாளர்களுக்கு மூன்று தேர்வுகள் வழங்கப்படும். இதன்படி அப்போதைய சந்தை விலைக்கு ஏற்ப நீங்கள் பயன்படுத்திய காரை வாங்கி கொள்ளலாம். அல்லது மாத சந்தாவை மேலும் நீட்டித்து கொள்ளலாம். அல்லது மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து வேறு ஒரு புதிய காருக்கு நீங்கள் மாறி கொள்ளலாம்.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் மாத சந்தா திட்டத்தின்படி, ஸ்விஃப்ட் எல்எக்ஸ்ஐ காரை 48 மாதங்களுக்கு பயன்படுத்த மும்பையில் 15,368 ரூபாயும், சென்னையில் 15,196 ரூபாயும், அகமதாபாத்தில் 14,665 ரூபாயும், காந்திநகரில் 14,691 ரூபாயும் மாத சந்தாவாக செலுத்த வேண்டும். மாத சந்தா கட்டணங்கள் நகரத்திற்கு நகரம் மாறுபடும்.