பிஎம்டபிள்யூ எம் கார்களின் ஸ்டிக்கருடன் மாடிஃபைடு மாருதி ஸ்விஃப்ட்... மொத்தம் இவ்வளவு தான் செலவானதா?

மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் மாடல் கஸ்டம் பாடிகிட்களுடன் மாடிஃபைடு செய்து வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து காடிவாடி செய்தி தளம் வெளியிட்டுள்ள செய்தியினை இனி பார்ப்போம்.

பிஎம்டபிள்யூ எம் கார்களின் ஸ்டிக்கருடன் மாடிஃபைடு மாருதி ஸ்விஃப்ட்... மொத்தம் இவ்வளவு தான் செலவானதா?

மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மாடல் அதன் காம்பெக்ட் மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றத்தை மலிவான எக்ஸ்ஷோரூம் விலையுடன் கொண்டிருப்பதால் மட்டும் சந்தையில் பிரபலமான மாடலாக இல்லை. மாறாக மாடிஃபைடு மாற்றங்களுக்கு மிக எளிதாக ஒத்து போகக்கூடிய அதன் தன்மையும் தான் அதனை வாடிக்கையாளர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற வைத்துள்ளது.

பிஎம்டபிள்யூ எம் கார்களின் ஸ்டிக்கருடன் மாடிஃபைடு மாருதி ஸ்விஃப்ட்... மொத்தம் இவ்வளவு தான் செலவானதா?

இதன் காரணமாக கடந்த ஆண்டுகளில் மாருதி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் காரின் அசத்தலான கஸ்டமைஸ்ட் வெர்சன்களை பார்த்திருப்போம். அதுவும் 2018ல் வெளியான இதன் லேட்டஸ்ட் வெர்சன் கஸ்டமைஸ்ட் மாற்றங்களுக்கு உட்படுத்துவதற்காகவே வெளியிடப்பட்டதுபோல் உள்ளது.

பிஎம்டபிள்யூ எம் கார்களின் ஸ்டிக்கருடன் மாடிஃபைடு மாருதி ஸ்விஃப்ட்... மொத்தம் இவ்வளவு தான் செலவானதா?

ஏனெனில் இளம் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்ற ஸ்விஃப்ட்டின் தற்போதைய தலைமுறை கார் பல முறை மாடிஃபைடு மாற்றங்களை சந்தித்து இருப்பதை பார்த்திருப்போம். இந்த நிலையில் கோயம்புத்தூரை சேர்ந்த பிரபல மாடிஃபைடு நிறுவனமான கிட்அப் ஆட்டோமோட்டிவ் புதிய பாடிகிட்களுடன் ஸ்விஃப்ட் மாடலை கஸ்டமைஸ்ட் செய்து வெளியிட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ எம் கார்களின் ஸ்டிக்கருடன் மாடிஃபைடு மாருதி ஸ்விஃப்ட்... மொத்தம் இவ்வளவு தான் செலவானதா?

இந்த கஸ்டமைஸ்ட் மாற்றங்களுக்கு உட்படுத்திய இந்த ஸ்விஃப்ட் காரின் உரிமையாளர் அதன் புகைப்படங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் இந்த மொத்த கஸ்டமைஸ்ட் மாற்றங்களுக்கு ரூ.1 லட்சம் அளவில் தான் செலவானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிஎம்டபிள்யூ எம் கார்களின் ஸ்டிக்கருடன் மாடிஃபைடு மாருதி ஸ்விஃப்ட்... மொத்தம் இவ்வளவு தான் செலவானதா?

வெளியிடப்பட்டுள்ள இந்த படங்களை பார்க்கும்போது காரின் முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ள மூன்று நிறங்களிலான ஸ்டிக்கர் பிஎம்டபிள்யூ எம் வரிசை கார்களில் இருந்து பெறப்பட்டிருப்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. காரின் வெள்ளை நிறத்திற்கு மிகவும் எடுப்பாக இருக்கும் இந்த ஸ்ட்ரிப்ஸ் பெனெட்டின் ஆரம்பத்தில் இருந்து முன்புற க்ரில் வரை கொடுக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ எம் கார்களின் ஸ்டிக்கருடன் மாடிஃபைடு மாருதி ஸ்விஃப்ட்... மொத்தம் இவ்வளவு தான் செலவானதா?

அதேபோல் இந்த ஸ்ட்ரிப்ஸை காரின் முன்புற ஃபாக் விளக்கு க்ளஸ்ட்டர் மற்றும் பக்கவாட்டு பகுதிகளிலும் பார்க்க முடிகிறது. காரின் முன்புறம், பின்புறம் மற்றும் பக்கவாட்டுகளில் வழங்கப்பட்டுள்ள பாடிகிட் காரின் மொத்த தோற்றத்தையும் சற்று தாழ்வாக காட்டுகிறது.

பிஎம்டபிள்யூ எம் கார்களின் ஸ்டிக்கருடன் மாடிஃபைடு மாருதி ஸ்விஃப்ட்... மொத்தம் இவ்வளவு தான் செலவானதா?

A,B மற்றும் C பில்லர்கள் கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இதில் A பில்லரின் அருகே கண்ணாடியில் சுசுகி என்ற வார்த்தை ஆங்கிலத்தில் ஒட்டப்பட்டுள்ளது. இவற்றுடன் காரில் கஸ்டமைஸ்ட் மாற்றங்களாக கொண்டுவரப்பட்டுள்ள ரெட் போல்ட் ஹைலைட்டுடன் அலாய் சக்கரங்களை தவிர்த்து மற்றப்படி காரில் வேறெந்த மாற்றமும் இல்லை.

பிஎம்டபிள்யூ எம் கார்களின் ஸ்டிக்கருடன் மாடிஃபைடு மாருதி ஸ்விஃப்ட்... மொத்தம் இவ்வளவு தான் செலவானதா?

காரின் முன் கதவில் முன் சக்கரங்களுக்கு பின்னால் வெவ்வேறு விதமான ப்ராண்ட்களின் பெயர்கள் ஸ்டிக்கர்களாக ஒட்டப்பட்டுள்ளன. இந்தியாவில் ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மாடலில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

பிஎம்டபிள்யூ எம் கார்களின் ஸ்டிக்கருடன் மாடிஃபைடு மாருதி ஸ்விஃப்ட்... மொத்தம் இவ்வளவு தான் செலவானதா?

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் மாடலுடன் நேரடியாக விற்பனையில் போட்டியிட்டு வரும் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மாடலின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.5.19 லட்சத்தில் இருந்து ரூ.8.02 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாருதி நிறுவனம் ஸ்விஃப்ட் மாடலின் புதிய ஹைப்ரீட் வெர்சனை 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Modified Maruti Suzuki Swift With BMW M Stripes Add Distinction
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X