ரேஸ் கார்களுக்கே சவால்விடும் தோற்றத்தில் சுஸுகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார்!! உரிமையாளரை தான் பாராட்டனும்..

சட்டப்பூர்வமாக சாலையில் இயங்க அனுமதி பெற்ற ரேஸ் காரின் தோற்றத்திற்கு இணையாக சுஸுகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார் ஒன்று கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த காரை பற்றிய விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ரேஸ் கார்களுக்கே சவால்விடும் தோற்றத்தில் சுஸுகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார்!! உரிமையாளரை தான் பாராட்டனும்..

மாருதி ஸ்விஃப்ட் இந்தியாவில் பிரபலமான ஹேட்ச்பேக் கார் என்பது அனைவருக்கும் தெரியும். சர்வதேச சந்தையில் இதன் செயல்திறன்மிக்க மாடல் ஸ்விஃப்ட் ஸ்போர்ட் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ரேஸ் கார்களுக்கே சவால்விடும் தோற்றத்தில் சுஸுகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார்!! உரிமையாளரை தான் பாராட்டனும்..

இந்த வகையில் மெக்ஸிகோவில் விற்பனை செய்யப்படும் ஸ்விஃப்ட் ஸ்போர்ட்டின் கஸ்டமைஸ்ட் வெர்சனை பற்றிதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். இந்த காரின் உரிமையாளரின் பெயர் எரிக் குட்டரெஸ். இவர் தான் ரேஸ்-ஸ்டைல் தொகுப்புகளுடன் தனது ஸ்விஃப்ட் ஸ்போர்ட் காரை மாடிஃபை பணிகளுக்கு உட்படுத்தியுள்ளார்.

ரேஸ் கார்களுக்கே சவால்விடும் தோற்றத்தில் சுஸுகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார்!! உரிமையாளரை தான் பாராட்டனும்..

இந்த கஸ்டமைஸ்ட் கார் சற்று வித்தியாசமான தோற்றத்தில் முன்பக்கத்தை கொண்டுள்ளது. கிடைமட்டமாக க்ரில் அமைப்பில் வழங்கப்படும் பார் நீக்கப்பட்டுள்ளது. மூடுபனி விளக்குகள் மற்றும் அவற்றிற்கான குழிகளில் கை வைக்கப்படவில்லை.

ரேஸ் கார்களுக்கே சவால்விடும் தோற்றத்தில் சுஸுகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார்!! உரிமையாளரை தான் பாராட்டனும்..

ஹெட்லேம்ப்கள், புதிய ப்ரோஜெக்டர் செட்அப்-ஐ ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி டிஆர்எல் வளையல்கள் மற்றும் எல்இடி இண்டிகேட்டர்களுடன் பெற்றுள்ளன. ஹெட்லேம்ப்பின் மேற்புறம் வின்யெல் மூலமாக மறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹெட்லேம்ப் அமைப்பு வழக்கமானதை காட்டிலும் கூர்மையானதாக காட்சியளிக்கிறது.

ரேஸ் கார்களுக்கே சவால்விடும் தோற்றத்தில் சுஸுகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார்!! உரிமையாளரை தான் பாராட்டனும்..

ப்ரேஸ் லிங்க் உடன் புதிய பிரிப்பான் முன்பக்கத்திற்கு அடியில் பொருத்தப்பட்டுள்ளது. இதே பிரிப்பான் பக்கவாட்டு வழியாக காரின் பின்புறம் வரையில் செல்கிறது. அலாய் சக்கரங்கள் புதியதாக கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. சக்கரங்களில் ஃபால்கன் அஸனிஸ் ரப்பர் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ரேஸ் கார்களுக்கே சவால்விடும் தோற்றத்தில் சுஸுகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார்!! உரிமையாளரை தான் பாராட்டனும்..

பின்பக்கத்தில் மேற்கூரையில் புதிய ஸ்பாய்லரை தவிர்த்து வேறெந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. சுஸுகி நிறுவனத்தின் முத்திரையுடன் காரை சுற்றிலும் ஏகப்பட்ட லோகோக்களை பார்க்க முடிகிறது. உரிமையாளர் பெயரின் முதலெழுத்து ஜன்னல் கண்ணாடியில் வழங்கப்பட்டுள்ளது.

ரேஸ் கார்களுக்கே சவால்விடும் தோற்றத்தில் சுஸுகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார்!! உரிமையாளரை தான் பாராட்டனும்..

முன்பக்க விண்ட்ஷீல்டை காட்டிலும் பக்கவாட்டு கண்ணாடிகளில் டிண்ட் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. மற்றப்படி என்ஜின் அமைப்பில் மாற்றமில்லை. அதே 1.4 லிட்டர் ‘பூஸ்டர்ஜெட்' என்ஜின் தான் இருக்கும். ஸ்விஃப்ட்டின் இந்திய வெர்சனில் 1.2 லிட்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட், இன்லைன்-4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
This Customised Suzuki Swift Sport Looks Like A Road-Legal Race Car
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X