கொரோனா பிரச்சனையிலும் இந்தியாவை வந்தடைந்தது மாருதி ஸ்விஃப்ட்டின் புதிய ஸ்போர்ட் வெர்சன்..!

சுசுகி ஸ்விஃப்ட் மாடலின் புதிய ஸ்போர்ட் வெர்சன் கார் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் வாயிலாக இந்தியாவில் இறக்குமதியான போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு மறைப்பும் இன்றி காட்சியளித்த புதிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட் காரின் இந்த ஸ்பை புகைப்படங்களின் மூலம் வெளிவந்த தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

கொரோனா பிரச்சனையிலும் இந்தியாவை வந்தடைந்தது மாருதி ஸ்விஃப்ட்டின் புதிய ஸ்போர்ட் வெர்சன்..!

இந்த ஸ்பை புகைப்படங்களின் மூலம் தற்போதைய மாடலில் இருந்து இந்த ஸ்போர்ட் வெர்சனில் சிறிய அளவிலான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருப்பது தெரிய வருகிறது. மேலும் மாருதி சுசுகி நிறுவனம் தற்போது இறக்குமதியாகியுள்ள ஸ்விஃப்ட் ஸ்போர்ட் மாடலை உள் சோதனை மற்றும் ஒத்திசைவு செயல்முறைகளுக்கு உட்படுத்தவுள்ளது.

கொரோனா பிரச்சனையிலும் இந்தியாவை வந்தடைந்தது மாருதி ஸ்விஃப்ட்டின் புதிய ஸ்போர்ட் வெர்சன்..!

சிறப்பான முறையில் உருவாக்கப்பட்ட ஹேட்ச்பேக் மாடலாக சந்தைக்கு வரும் இந்த காரை, தற்போதைய ஸ்விஃப்ட் மாடல்கள் தயாரிக்கப்பட்டு வரும் அதே ஹார்டெக் ப்ளாட்ஃபாரத்தில் தான் சுசுகி நிறுவனம் கட்டமைத்து வருகிறது. இந்த புதிய ஸ்போர்ட் வெர்சன் காரில் இந்நிறுவனத்தின் 1.4 லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ-பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது.

கொரோனா பிரச்சனையிலும் இந்தியாவை வந்தடைந்தது மாருதி ஸ்விஃப்ட்டின் புதிய ஸ்போர்ட் வெர்சன்..!

இந்த டர்போ-பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 5,500 ஆர்பிஎம்-ல் 138 பிஎச்பி பவரையும், 2,500- 3,500 ஆர்பிஎம்-ல் 230 என்எம் டார்க் திறனை 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வெளிப்படுத்தவல்லது. இந்த ட்ரான்ஸ்மிஷன் ஆற்றலை முன் சக்கரங்களுக்கு வழங்கும்.

கொரோனா பிரச்சனையிலும் இந்தியாவை வந்தடைந்தது மாருதி ஸ்விஃப்ட்டின் புதிய ஸ்போர்ட் வெர்சன்..!

0-விலிருந்து 100 kmph என்ற வேகத்தை வெறும் 8 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த ஸ்விஃப்ட் ஸ்போர்ட் வெர்சன் காரின் அதிகப்பட்ச வேகம் 210 kmph ஆகும். இந்த ஹேட்ச்பேக் கார் சிபியூ முறையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ளதால் எக்ஸ்ஷோரூம் விலையை சற்று கூடுதலாக எதிர்பார்க்கலாம்.

கொரோனா பிரச்சனையிலும் இந்தியாவை வந்தடைந்தது மாருதி ஸ்விஃப்ட்டின் புதிய ஸ்போர்ட் வெர்சன்..!

இந்த புதிய ஸ்போர்ட்ஸ் வெர்சன் காருடன் மாருதி சுசுகி நிறுவனம் தற்சமயம் ஜிம்னி மாடலை இந்திய சந்தைக்கு கொண்டுவரும் பணியிலும் ஈடுப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்த கார் இந்தியாவிற்கு இந்த வருட இறுதியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பிரச்சனையிலும் இந்தியாவை வந்தடைந்தது மாருதி ஸ்விஃப்ட்டின் புதிய ஸ்போர்ட் வெர்சன்..!

5 கதவுகளை கொண்ட எஸ்யூவி மாடலாக சந்தைக்கு வரவுள்ள இந்த காரில் மாருதி சுசுகி நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்காக சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ஜிப்ஸி என்ற பெயருடன் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படும் ஜிம்னி மாடலின் இந்த புதிய பெயர் குறித்த எந்தவொரு தகவலையும் மாருதி நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

கொரோனா பிரச்சனையிலும் இந்தியாவை வந்தடைந்தது மாருதி ஸ்விஃப்ட்டின் புதிய ஸ்போர்ட் வெர்சன்..!

ஸ்விஃப்ட் ஸ்போர்ட் மாடலை போன்று ப்ரீமியம் ரக காராக விற்பனைக்கு வரவுள்ள புதிய மாருதி ஜிம்னி கார் இந்நிறுவனத்தின் நெக்ஸா டீலர்ஷிப்கள் மூலமாக இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த புதிய எஸ்யூவி காரில் கொண்டுவரப்படவுள்ள மாற்றங்களை கீழேயுள்ள லிங்கின் மூலமாக விரிவாக அறிந்து கொள்க.

கொரோனா பிரச்சனையிலும் இந்தியாவை வந்தடைந்தது மாருதி ஸ்விஃப்ட்டின் புதிய ஸ்போர்ட் வெர்சன்..!

செயல்திறன்மிக்க கார்களின் தயாரிப்பு மற்றும் விற்பனையில் மாருதி சுசுகி நிறுவனம் மிகவும் சிறப்பாக செயலாற்றி வருகிறது. இருப்பினும் கிஸாஷி மற்றும் பலேனோ ஆர்எஸ் போன்ற மாருதி கார்களின் விற்பனை போதிய வரவேற்பின்மையால் இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளது. இதில் இருந்து பாடம் கற்றுகொண்டுள்ள மாருதி நிறுவனம் புதிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட் மாடலின் விற்பனையை கவனமாக கையாளும் என்பது நிச்சயம்.

Source: BW Autoworld

Most Read Articles
English summary
Suzuki Swift Sport Spotted Undisguised At Delhi Airport: Spy Pics & Details
Story first published: Tuesday, April 7, 2020, 19:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X