Just In
- 1 hr ago
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
- 9 hrs ago
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- 10 hrs ago
2021 சஃபாரியின் வருகையில் எந்த தாமதமும் இல்லை!! மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்
- 11 hrs ago
2021 ஸ்கோடா சூப்பர்ப் செடான் கார் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.31.99 லட்சம்
Don't Miss!
- News
கொரோனா தடுப்பூசி யாருக்கெல்லாம் போடப்படும்?.. பக்க விளைவுகள் என்ன?.. முழு விவரம்!
- Movies
சத்தியமங்கலத்தில் ஷுட்டிங்.. வெற்றிமாறன் இயக்கும் படம்.. சூரி ஜோடியாக இவர்தான் நடிக்கிறாராமே?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
செல்டோஸ் மார்க்கெட்டிற்கு குறி... மாருதி - டொயோட்டா கூட்டணியில் உருவாகும் புத்தம் புதிய எஸ்யூவி!
கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா கார்களுக்கு போட்டியாக புதிய மிட்சைஸ் எஸ்யூவியை மாருதி - டொயோட்டா கூட்டணி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்திய கார் சந்தையில் மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா கார் நிறுவனங்கள் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன. புதிய கார்களை உருவாக்குவதற்கான முதலீடுகளை வெகுவாக குறைக்கும் வகையில் இந்த கூட்டணி அமைக்கப்பட்டது. முதலீட்டை குறைத்து லாபத்தை அதிகரிப்பதற்கும், புதிய மாடல்களை உருவாக்கும் கால அளவை குறைப்பதற்கும் இது வழிவகுத்துள்ளது.

இந்த கூட்டணியில் முதல்கட்டமாக, மாருதி நிறுவனத்தின் பலேனோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா கார்களை டொயோட்டா கார் நிறுவனம் ரீபேட்ஜ் செய்து முறையே க்ளான்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் என்ற பெயர்களில் விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், அடுத்தக்கட்டமாக புத்தம் புதிய மிட்சைஸ் எஸ்யூவியை மாருதி - டொயோட்டா கூட்டணி உருவாக்கி வருவதாக ஆட்டோகார் இந்தியா தள செய்தி தெரிவிக்கிறது. இதன்படி, டொயோட்டா ஆலையில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு பதிலாக புதிய மிட்சைஸ் எஸ்யூவியை உற்பத்தி செய்வதற்கு மாருதி - டொயோட்டா கூட்டணி முடிவு செய்திருப்பதுடன், இதற்கான அரசு அனுமதிக்கும் விண்ணப்பம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெங்களூர் அருகே பிடதியில் டொயோட்டா நிறுவனம் இரண்டு கார் ஆலைகளில் கார் உற்பத்தி செய்து வருகிறது. முதல் ஆலையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர் ஆகிய மாடல்களும், இரண்டாவது ஆலையில் யாரிஸ், கேம்ரி ஹைப்ரிட் ஆகிய மாடல்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், மாருதி - டொயோட்டா கூட்டணியில் உருவாகும் புதிய மிட்சைஸ் எஸ்யூவியானது டொயோட்டாவின் பிடதி கார் ஆலையில் உற்பத்தி செய்வதற்கு முடிவு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

புதிதாக உருவாக்கப்படும் மிட்சைஸ் எஸ்யூவியானது மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா பிராண்டுகளில் விற்பனைக்கு செல்லும். இந்த புதிய மாடல் டொயோட்டா நிறுவனத்தின் DGNA எனப்படும் கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த புதிய மாடலில் இடம்பெற இருக்கும் எஞ்சின் குறித்த எந்த தகவலும் இல்லை. ஆனால், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அல்லது டர்போ சார்ஜர் துணையுடன் செயல்படும் பெட்ரோல் எஞ்சின் தேர்வு இடம்பெற வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இந்த புதிய மாடல் குறித்த அதிகாரப்பூர்வ விபரங்கள் அடுத்த ஆண்டு வரும் என்று எதிர்பார்க்கலாம்.
குறிப்பு: மாதிரிக்காக டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.