கொரோனா ரணகளத்திலும் மாருதிக்கு கிளுகிளுப்பூட்டிய புதிய விட்டாரா பிரெஸ்ஸா!

கொரோனா பிரச்னையால் ஊரே முடங்கிய நிலையிலும், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி சிறப்பான புக்கிங்கை பெற்று அசத்தி உள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனாவை புறந்தள்ளிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா... புக்கிங்கில் அசத்தல்!

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிதான் விற்பனையில் நம்பர்-1 மாடலாக இருந்து வருகிறது. வடிவமைப்பு, வசதிகள், எஞ்சின், விலை உள்ளிட்டவற்றுடன் மாருதியின் பரந்து விரிந்த சர்வீஸ் மையங்கள் இந்த எஸ்யூவிக்கு மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறது.

கொரோனாவை புறந்தள்ளிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா... புக்கிங்கில் அசத்தல்!

இந்த நிலையில், பிஎஸ்- 6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஒப்பாக மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மேம்படுத்தப்பட்டது. ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் விலக்கப்பட்டு,பெட்ரோல் எஞ்சினுக்கு மாறியது. மேனுவல் கியர்பாக்ஸ் தேர்விலும், ஏற்கனவே வழங்கப்பட்ட ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுக்கு பதிலாக 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் அறிமுகம் செய்யப்பட்டது.

கொரோனாவை புறந்தள்ளிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா... புக்கிங்கில் அசத்தல்!

கடந்த பிப்ரவரியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டபோதே, பார்வையாளர்களையும், வாடிக்கையாளர்களையும் ஈர்த்தது. அதாவது, பிஎஸ்- 6 எஞ்சின் மட்டுமல்லாமல், புதிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் வந்தது.

கொரோனாவை புறந்தள்ளிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா... புக்கிங்கில் அசத்தல்!

இதனால், இந்த எஸ்யூவியை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் ஆயத்தமாக இருந்தார்கள். அவர்களது எதிர்பார்ப்பை விரைவாக பூர்த்தி செய்யும் விதத்தில், கடந்த பிப்ரவரி மாதம் 24ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

கொரோனாவை புறந்தள்ளிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா... புக்கிங்கில் அசத்தல்!

எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், 16 அங்குல அலாய் வீல்கள், 7.0 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், லெதர் உறையுடன் ஸ்டீயரிங் வீல் என பல சிறப்பம்சங்களுடன் வந்தது. அத்துடன், முன்புற க்ரில் அமைப்பு உள்ளிட்டவற்றிலும் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

கொரோனாவை புறந்தள்ளிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா... புக்கிங்கில் அசத்தல்!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.5 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 134 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

கொரோனாவை புறந்தள்ளிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா... புக்கிங்கில் அசத்தல்!

ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த டீசல் எஞ்சின் மிகச் சிறப்பான வரவேற்பை வாடிக்கையாளர் மத்தியில் பெற்றிருந்தது. காரணம், டீசல் மாடலானது அதிக எரிபொருள் சிக்கனத்தை தர வல்லதாக இருந்தது. ஆனால், பெட்ரோல் மாடல் மைலேஜ் சற்று குறைவாக இருக்கிறதே என்ற கருத்து இருந்தது. ஆனால், நம்பகமான சுஸுகியின் பெட்ரோல் எஞ்சின், மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் போன்றவை இந்த காருக்கு தொடர்ந்து வரவேற்பை தக்கவைத்துள்ளது.

கொரோனாவை புறந்தள்ளிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா... புக்கிங்கில் அசத்தல்!

ஆம், அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை 25,000 முன்பதிவுகளை புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி பெற்றிருப்பதாக கார் அண்ட் பைக் தளத்திடம் பேசியுள்ள மாருதி விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவு தலைவர் ஷசாங்க் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.

கொரோனாவை புறந்தள்ளிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா... புக்கிங்கில் அசத்தல்!

கொரோனா பிடியில் உலகமே சிக்கித் தத்தளித்து வரும் நிலையில், மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு சிறப்பான புக்கிங் கிடைத்திருக்கிறது. கொரோனா பிரச்னை இல்லையெனில், புக்கிங் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். எனினும், காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் தொடர்ந்து நம்பர்-1 மாடலாக தக்க வைக்கும் வாய்ப்பை இந்த புக்கிங் எண்ணிக்கை வழங்கும் என்று கருதலாம்.

Most Read Articles
English summary
Maruti Suzuki has received 25,000 bookings for new Vitara Brezza SUV since it launched in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X