மினி கூப்பருக்கே சவால்விடும் தோற்றத்தில் மாடிஃபைடு மாருதி சுசுகி ஸ்விஃப்ட்...

மாருதி சுசுகி நிறுவனத்தின் ஹேட்ச்பேக் ரக காரான ஸ்விஃப்ட்-ஐ பலர் மாடிஃபைடு செய்துள்ளதை பார்த்திருப்போம். இந்த வகையில் தற்போது இங்கிலாந்து கொடியின் டிசைனில் டெயில்லைட்களுடன் இந்த கார் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மினி கூப்பருக்கே சவால்விடும் தோற்றத்தில் மாடிஃபைடு மாருதி சுசுகி ஸ்விஃப்ட்...

மாருதி நிறுவனம் தற்சமயம் மூன்றாம் தலைமுறை ஸ்விஃப்ட் மாடலை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த மூன்றாம் தலைமுறை கார் மாடிஃபைடு பணிகளுக்கு உட்படுத்தப்படுவதற்காகவே வெளியிடப்பட்டதுபோல் உள்ளது.

மினி கூப்பருக்கே சவால்விடும் தோற்றத்தில் மாடிஃபைடு மாருதி சுசுகி ஸ்விஃப்ட்...

ஏனெனில் மற்ற மாருதி தயாரிப்புகளை காட்டிலும் ஸ்விஃப்ட் மாடலே அதிகளவில் கஸ்டமைஸ்ட் மாற்றங்களுக்கு வாடிக்கையாளர்களால் உட்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் இந்த காரின் தோற்றமும், சிறப்பான என்ஜின் அமைப்பும், வேகமான செயல்படக்கூடிய ஸ்டேரிங் சக்கரமே ஆகும்.

மினி கூப்பருக்கே சவால்விடும் தோற்றத்தில் மாடிஃபைடு மாருதி சுசுகி ஸ்விஃப்ட்...

இதனால் குறைந்தது மாதத்திற்கு ஒரு முறையாவது மாடிஃபைடு மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்ட ஸ்விஃப்ட் மாடலை பற்றி பார்த்து விடுகிறோம். இந்த வகையில் தற்போது யூனியன் ஜாக் என அழைக்கப்படும் இங்கிலாந்து நாட்டு கொடியின் டிசைனில் டெயில்லைட்களுடன் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மாடல் அசத்தலான தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

மினி கூப்பருக்கே சவால்விடும் தோற்றத்தில் மாடிஃபைடு மாருதி சுசுகி ஸ்விஃப்ட்...

இவ்வாறான டிசைனில் டெயில்லேம்ப்களை பிரிட்டிஷ் ப்ராண்ட்டான மினி கூப்பரில் பார்த்திருப்போம். ஸ்விஃப்ட் மாடலில் இத்தகைய கஸ்டமைஸ்ட் பணிகளை டெல்லியை சேர்ந்த என் வோக் ஆட்டோ டிசைன்ஸ் என்ற நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

மினி கூப்பருக்கே சவால்விடும் தோற்றத்தில் மாடிஃபைடு மாருதி சுசுகி ஸ்விஃப்ட்...

முழு எல்இடி தரத்தில் டெயில்லைட்களை இந்த கஸ்டமைஸ்ட் நிறுவனம் எல்இடி ட்யூப்களுடன் பொருத்தியுள்ளது. டெயில்லேம்ப் அமைப்பில் ஆடி கார்களில் உள்ளதை போன்ற சதுர வடிவிலான டர்ன் இண்டிகேட்டர்களும் உள்ளன.

மினி கூப்பருக்கே சவால்விடும் தோற்றத்தில் மாடிஃபைடு மாருதி சுசுகி ஸ்விஃப்ட்...

இதனால் இந்த மாடிஃபைடு காரை பின்னால் இருந்து பார்ப்பவர்கள் முதலில் டெயில்லைட்டை தான் கவனிக்கப்பார்கள், அதன்பின்பு தான் காரின் நிறத்தையே பார்ப்பார்கள் என்று சொல்ல வேண்டும். டெயில்லேம்ப்களை தவிர்த்து பார்த்தோமேயானால், 17-இன்ச்சில் மல்டி ஸ்போக் அலாய் சக்கரங்கள் ஹேட்ச்பேக் மாடல்களுக்கே உண்டான அகலமான டயர்களுடன் உள்ளன.

மினி கூப்பருக்கே சவால்விடும் தோற்றத்தில் மாடிஃபைடு மாருதி சுசுகி ஸ்விஃப்ட்...

காருக்கு நைட்ப்ளூ நிறத்தில் பெயிண்ட் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்றப்படி ஸ்விஃப்ட் காரின் என்ஜின் அமைப்புகளில் எந்த மாற்றத்தையும் இந்த மாடிஃபைடு நிறுவனம் கொண்டுவரவில்லை.தற்சமயம் ஸ்விஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்பட்டு வருகிறது.

மினி கூப்பருக்கே சவால்விடும் தோற்றத்தில் மாடிஃபைடு மாருதி சுசுகி ஸ்விஃப்ட்...

அதிகப்பட்சமாக 83 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜினிற்கு ஏஎம்டி கியர்பாக்ஸும் கூடுதல் ட்ரான்ஸ்மிஷன் தேர்வாக கொடுக்கப்படுகிறது. மாருதி நிறுவனம் இந்த பெட்ரோல் என்ஜினை காட்டிலும் 7 பிஎச்பி ஆற்றலை கூடுதலாக வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் மல்டிஜெட் என்ஜினை ஸ்விஃப்ட் காரில் பொருத்துவதற்காக தயாரிக்கும் பணியிலும் ஈடுப்பட்டு வருகிறது.

மினி கூப்பருக்கே சவால்விடும் தோற்றத்தில் மாடிஃபைடு மாருதி சுசுகி ஸ்விஃப்ட்...

ரூ.5.19 லட்சத்தில் இருந்து அதிகப்பட்சமாக ரூ.8.02 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற ஸ்விஃப்ட் மாடலுக்கு சந்தையில் போட்டியாக ஃபோர்டு ஃபிகோ, டாடா டியாகோ, ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் போன்ற ஹேட்ச்பேக் கார்கள் உள்ளன.

Most Read Articles
English summary
This Modified Maruti Suzuki Swift Aspires To Be A Mini Cooper
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X