மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பிஎஸ்-6 மாடல் குறித்த புதிய தகவல்கள்!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பிஎஸ்-6 மாடல் குறித்த புதிய தகவல்கள்!

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிதான் முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருப்பதால், பிஎஸ்-6 எஞ்சின் தேர்வில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பிஎஸ்-6 மாடல் குறித்த புதிய தகவல்கள்!

தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் 1.3 லிட்டர் ஃபியட் டீசல் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் காரணமாக, பயன்பாட்டில் இருந்து விலக்கப்பட இருக்கிறது. இதையடுத்து, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியானது பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் வர இருக்கிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பிஎஸ்-6 மாடல் குறித்த புதிய தகவல்கள்!

ஏற்கனவே, மாருதி எர்டிகா, சியாஸ் கார்களில் பயன்படுத்தப்படும் இந்த பெட்ரோல் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஒப்பாக மேம்படுத்தப்பட்டு விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் பயன்படுத்தப்படும்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பிஎஸ்-6 மாடல் குறித்த புதிய தகவல்கள்!

தவிரவும், இந்த பெட்ரோல் எஞ்சின் சுஸுகியின் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வர இருக்கிறது. அத்துடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வர இருக்கிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பிஎஸ்-6 மாடல் குறித்த புதிய தகவல்கள்!

ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வில் வரும் என்று தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது சாதாரண 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் வர இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பிஎஸ்-6 மாடல் குறித்த புதிய தகவல்கள்!

இந்த பெட்ரோல் எஞ்சின் ஸ்டார்ட் - ஸ்டாப் தொழில்நுட்ப வசதியுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன்மூலமாக, சிறப்பான எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைவான மாசு உமிழ்வு திறனை இந்த கார் பெறும்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பிஎஸ்-6 மாடல் குறித்த புதிய தகவல்கள்!

புதிதாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக மேம்படுத்தப்படுவதால், பவரை வெளிப்படுத்தும் திறனில் பெரிய வித்தியாசம் இருக்காது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பிஎஸ்-6 மாடல் குறித்த புதிய தகவல்கள்!

இந்த நிலையில், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருப்பதால், விலையும் கணிசமாக உயர்த்தப்படும். ஏனெனில், 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட கார்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இருந்தால் மட்டுமே வரிச்சலுகை பெற முடியும்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பிஎஸ்-6 மாடல் குறித்த புதிய தகவல்கள்!

பிஎஸ்-6 எஞ்சின் மட்டுமின்றி, வடிவமைப்பில் சிறிய மாற்றங்களும், கூடுதல் வசதிகளும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், போட்டியாளர்களைவிட மதிப்பு மிக்க மாடலாக நிலைநிறுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பிஎஸ்-6 மாடல் குறித்த புதிய தகவல்கள்!

அடுத்த மாதம் நடக்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும்.

Source: ACI

Most Read Articles
English summary
According to reports, Maruti Brezza BS6 model is likely will feature a mild-hybrid system and be offered with a 5 speed manual and 4-speed AT option in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X