மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுகமாக உள்ள தேதி குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்!

அண்மையில் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை டீசல் எஞ்சின் தேர்வில் மட்டுமே கிடைத்து வந்த மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி புதிய மாசு உமிழ்வு விதி காரணமாக, பெட்ரோல் எஞ்சினுக்கு மாற உள்ளது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்!

மேலும், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்டு வரும் மாடலானது, டிசைனிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் வர இருப்பதும் உறுதியானது. ஆனால், ஆட்டோ எக்ஸ்போவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டாலும், விலை அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்!

இந்த நிலையில், வரும் 24ந் தேதி புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி விற்பனைக்கு வர இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, வரும் திங்கட்கிழமை இந்த புதிய மாடல் சந்தைக்கு முறைப்படி கொண்டு வரப்பட இருப்பதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்!

இதுவரை பயன்படுத்தப்பட்ட 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைத்து வந்தது. ஆனால், புதிய பெட்ரோல் எஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்!

புதிய புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய க்ரில் மற்றும் பம்பர் அமைப்பு, அகலமான ஏர் இன்டேக் பகுதிகளுடன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த காரில் 16 அங்குல அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. கருப்பு வண்ண பில்லர்கள், எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்!

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் தொடுதிரையுடன் கூடிய புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். நிகழ்நேர நேவிகேஷன், வாய் உத்தரவுகளை உணர்ந்து செயல்படும் வசதிகளும் உள்ளன.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்!

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி கார் சற்றே கூடுதலான விலையில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளுடன் போட்டி போடும்.

Source: Gaadiwaadi

Most Read Articles
English summary
Maruti Suzuki India Limited (MSIL) is likely to launch the updated Vitara Brezza in the in India on February 24, 2020.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X