மாருதி சுசுகி வேகன்ஆர் மாடலின் பிஎஸ்6 எஸ்-சிஎன்ஜி வேரியண்ட் ரூ.5.25 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்

மாருதி சுசுகி நிறுவனத்தில் இருந்து பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்ட புதிய வேகன்ஆர் சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் ஆரம்ப விலை எக்ஸ்ஷோரூம்களில் ரூ.5.25 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி வேகன்ஆர் மாடலின் பிஎஸ்6 எஸ்-சிஎன்ஜி வேரியண்ட் ரூ.5.25 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்...!

LXi மற்றும் LXi (O) என்ற இரு வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய பிஎஸ்6 மாடலின் டாப் வேரியண்ட் ரூ.5.32 லட்சம் வரையில் விற்பனை செய்யப்படவுள்ளது. மற்றப்படி இதன் சிஎன்ஜி ட்ரிம்கள் அதே 1.0 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜினை தான் பெற்றுள்ளன.

மாருதி சுசுகி வேகன்ஆர் மாடலின் பிஎஸ்6 எஸ்-சிஎன்ஜி வேரியண்ட் ரூ.5.25 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்...!

இந்த சிஎன்ஜி என்ஜின், வழக்கமான பெட்ரோல் என்ஜினை விட சிறிது குறைவான, காருக்கு தேவையான ஆற்றல் மற்றும் டார்க் திறனை மட்டுமே வெளிப்படுத்தும். வேகன்ஆர் மாடலின் சிஎன்ஜி வேரியண்ட் அதிகப்பட்சமாக 5500 ஆர்பிஎம்-ல் 58 பிஎச்பி பவரையும் 3500 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்குகிறது.

மாருதி சுசுகி வேகன்ஆர் மாடலின் பிஎஸ்6 எஸ்-சிஎன்ஜி வேரியண்ட் ரூ.5.25 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்...!

இதன் சிஎன்ஜி என்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்பட்டுள்ள இந்த என்ஜினின் தற்போதைய மைலேஜ் 32.52 km / kg ஆகும். மேலும் இந்த புதிய சிஎன்ஜி வேரியண்ட்டில் 60 லிட்டர் கொள்ளவு கொண்ட மிக பெரிய அளவிலான எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி வேகன்ஆர் மாடலின் பிஎஸ்6 எஸ்-சிஎன்ஜி வேரியண்ட் ரூ.5.25 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்...!

இந்த புதிய பிஎஸ்6 சிஎன்ஜி மாடலின் அறிமுகம் குறித்து மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் நிர்வாக இயக்குனர் ஷஷாங்க் ஸ்ரீவஸ்தாவா கூறுகையில், தடையற்ற இயக்கத்திற்கான வாகனங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் மாருதி சுசுகி நிறுவனம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

மாருதி சுசுகி வேகன்ஆர் மாடலின் பிஎஸ்6 எஸ்-சிஎன்ஜி வேரியண்ட் ரூ.5.25 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்...!

இதற்கிடையில் பசுமையான போக்குவரத்திற்கான அறிவிப்பு வெளிவந்ததால், இந்தியா முழுவதும் பசுமை போக்குவரத்தை அமல்படுத்துவதில் எங்களை நாங்களே ஈடுப்படுத்தி கொண்டுள்ளோம். வேகன்ஆர் மாடலின் தற்போதைய மூன்றாம் தலைமுறை கார் 24 லட்ச வாடிக்கையாளர்களுடன் தனித்துவமான பயணத்திற்கு ஏற்ற வாகனமான சந்தையில் தொடரவுள்ளது.

மாருதி சுசுகி வேகன்ஆர் மாடலின் பிஎஸ்6 எஸ்-சிஎன்ஜி வேரியண்ட் ரூ.5.25 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்...!

மிகுந்த ஆற்றல் கொண்டதாக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேகன்ஆர் சிஎன்ஜி வேரியண்டில் சிறந்த ட்ரைவிங் திறன், அதிக எரிபொருள் திறன் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை சரியான சமநிலையில் வழங்கப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.

மாருதி சுசுகி வேகன்ஆர் மாடலின் பிஎஸ்6 எஸ்-சிஎன்ஜி வேரியண்ட் ரூ.5.25 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்...!

ஷஷாங்க் கூறியதுபோல், வேகன்ஆர் ஹேட்ச்பேக் தான் மாருதி நிறுவனத்தின் தற்போதைய தயாரிப்பு லைன்-அப்பில் மிக பிரபலமான மாடலாக விளங்குகிறது. வழக்கம்போல், பெரிய அளவிலான உருவத்தை கொண்டுள்ள இந்த புதிய ஹேட்ச்பேக் மாடலில் வெளிப்புறத்திற்கு ஏற்றாற்போல் பெரியதாக உட்புற கேபின் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி வேகன்ஆர் மாடலின் பிஎஸ்6 எஸ்-சிஎன்ஜி வேரியண்ட் ரூ.5.25 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்...!

இதனால் காரின் ஜன்னல்களும் பெரியதாக உள்ளன. மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தை மூன்றாம் தலைமுறை காரின் மூலம் ஏற்கனவே பெற்றிருந்த வேகன்ஆரின் இந்த புதிய சிஎன்ஜி வேரியண்ட்டில் விலைக்கு தகுந்த வகையில் தொழிற்நுட்பங்களும், கவர்ச்சிகரமான பேக்கேஜ்களும் வழங்கப்பட்டுள்ளன.

மாருதி சுசுகி வேகன்ஆர் மாடலின் பிஎஸ்6 எஸ்-சிஎன்ஜி வேரியண்ட் ரூ.5.25 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்...!

தற்போது வேகன்ஆர் மாடலில் கொடுக்கப்பட்டுள்ள பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட்டை மாருதி சுசுகி நிறுவனம் எண்ட்ரி-லெவல் ஆல்டோ மாடலில் இருந்து எர்டிகா எம்பிவி வரையில் தனது பெரும்பாலான தயாரிப்பு கார்களில் வழங்கியுள்ளது. மாருதி வேகன்ஆர் மாடலுக்கு சந்தையில் போட்டியாக உள்ள ஹூண்டாய் சாண்ட்ரோ இந்த புதிய பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் உடனும் விற்பனை போட்டியை தொடரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Maruti Suzuki WagonR S-CNG BS6 Launched In India: Prices Start At Rs 5.25 Lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X