அரிதினும் அரிதான உருவத்திற்கு மாறிய பட்ஜெட் கார்... இதற்கான செலவை கேட்டு ஆச்சரியப்படும் மக்கள்...

மாருதி சுசுகி நிறுவனத்தின் பட்ஜெட் கார்களில் ஒன்றான வேகன்ஆர் கார் அரிதினும் அரிதான தோற்றத்திற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அரிதினும் அரிதான உருவத்திற்கு அப்கிரேட் ஆகிய பட்ஜெட் கார்... இதற்கான செலவை கேட்டு ஆச்சரியப்படும் மக்கள்...

நாட்டின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் ஆர் கார் உள்ளது. இந்த காரையே சாய் ஆட்டோ எனும் வாகன கஸ்டமைசேஷன் நிறுவனம் ஜிடி ரக கார்களுக்கு இணையாக மாற்றியமைத்துள்ளது. இந்தியர்களுக்கு மிகவும் பிடித்தமான காராக மாருதி வேகன் ஆர் இருக்கின்றது.

அரிதினும் அரிதான உருவத்திற்கு அப்கிரேட் ஆகிய பட்ஜெட் கார்... இதற்கான செலவை கேட்டு ஆச்சரியப்படும் மக்கள்...

எனவேதான் இக்காருக்கு வழங்கப்பட்டிருக்கும் தனித்துவமான தோற்றத்திற்கு வாகன ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. மாருதி நிறுவனம் வேகன் ஆர் காரின் தற்போதைய புதிய தலைமுறையை 2019ம் ஆண்டில்தான் அறிமுகப்படுத்தியது. புதிய வடிவமைப்பு மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இக்காரை மாருதி களமிறக்கியது.

அரிதினும் அரிதான உருவத்திற்கு அப்கிரேட் ஆகிய பட்ஜெட் கார்... இதற்கான செலவை கேட்டு ஆச்சரியப்படும் மக்கள்...

இதன் காரணத்தால்தான் முந்தையக் காலக்கட்டத்தைக் காட்டிலும் தற்போது கூடுதல் விற்பனையை மாருதி வேகன்ஆர் பெற்று வருகின்றது. இம்மாதிரியான நிலையிலேயே மிகவும் வழக்கமான ஹேட்ச்பேக் காரை ஜிடி வெர்ஷனுக்கு சாய் ஆட்டோ அப்கிரேட் செய்திருக்கின்றது. இதற்காக பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்கள் அக்காரில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

அரிதினும் அரிதான உருவத்திற்கு அப்கிரேட் ஆகிய பட்ஜெட் கார்... இதற்கான செலவை கேட்டு ஆச்சரியப்படும் மக்கள்...

கார்குறித்து வெளியாகியிருக்கும் வீடியோவில், மாருதி வேகன் ஆர் மிகக் கடுமையாக மாற்றியமைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக காரின் முன் பகுதியில் செய்யப்பட்டிருக்கும் மாற்றம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. முகப்பு பகுதி கிரில், எல்இடி உள்ளிட்டவை ஆஃப்டர் மார்க்கெட்டில் இருந்து பெறப்பட்டு பொருத்தப்பட்டிருக்கின்றன. இத்துடன், கூடுதலாக சிவப்பு நிற ஸ்டிக்கர்கள் பானட்டில் ஒட்டப்பட்டிருக்கின்றன.

அரிதினும் அரிதான உருவத்திற்கு அப்கிரேட் ஆகிய பட்ஜெட் கார்... இதற்கான செலவை கேட்டு ஆச்சரியப்படும் மக்கள்...

இவையனைத்தும் சேர்ந்தே மாருதி வேகன் ஆர் காருக்கு ஜிடி தோற்றம் வழங்கியிருக்கின்றது. இதேபோன்று, காரின் முன்பக்க கிரில் பகுதியில் வேகன்ஆர் எனும் பெரிய எழுத்துடைய பேட்ஜ்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இதைத்தொடர்ந்து, நம்பர் பிளேட்டிற்கு அடிப்பகுதியிலும் வேகன்ஆர் எனும் பேட்ஜ் ஒட்டப்பட்டுள்ளது. இவையே ஜிடி லைன் தோற்றத்திற்கான முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன.

அரிதினும் அரிதான உருவத்திற்கு அப்கிரேட் ஆகிய பட்ஜெட் கார்... இதற்கான செலவை கேட்டு ஆச்சரியப்படும் மக்கள்...

இதேபோன்று காரின் வீல்களிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது, சந்தைக்கு பிறகான வீல்கள் இதில் பொருத்தப்பட்டிருக்கின்றன. இத்துடன், இந்த வீலை கூடுதலாக அலங்கரிக்கும் விதமாக அதன் ஆர்ச்சுகளில் சிவப்பு நிற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இதைத் தொடர்ந்து, பக்கவாட்டு கதவின் பீடிங்கில் குரோம் பூச்சுக்கொண்ட இன்செர்ட்டுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

அரிதினும் அரிதான உருவத்திற்கு அப்கிரேட் ஆகிய பட்ஜெட் கார்... இதற்கான செலவை கேட்டு ஆச்சரியப்படும் மக்கள்...

இதுமட்டுமின்றி, ரூஃப் ரெயில்கள் மற்றும் ஓஆர்விஎம்கள் உள்ளிட்டவை கருப்பு நிறத்தில் பொருத்தப்பட்டிருக்கின்றன. முன் மற்றும் பக்கவாட்டு பகுதியில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்களைப் போலவே பின் பகுதியிலும் கணிசமான மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அதாவது, கிளாஸ் கருப்பு நிறம் கொண்ட டெயில் மின் விளக்குகள் பின் பகுதியில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

அரிதினும் அரிதான உருவத்திற்கு அப்கிரேட் ஆகிய பட்ஜெட் கார்... இதற்கான செலவை கேட்டு ஆச்சரியப்படும் மக்கள்...

தொடர்ந்து, ஃபாவுக்ஸ் டிஃப்யூசர் சேர்க்கப்பட்ட பம்பர், ரெஃப்ளெக்டர், எல்இடி மின் விளக்கு மற்றும் ஃபாக்ஸ் குவாட் எக்ஸாஸ்ட் உள்ளிட்டவையும் பொருத்தப்பட்டிருக்கின்றன. வெளிப்புற தோற்றத்தைப் போலவே காரின் கேபினுக்குள்ளும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அதாவது கூடுதலாக பிரீமியம் வசதி வழங்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் ஒட்டுமொத்த காரின் உட்பகுதிக்கும் நிலக்கடலை நிறம் வழங்கப்பட்டிருக்கின்றது. இதைத்தொடர்ந்து, ஆங்காங்கே மரத்தலான பேனல்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய மாற்றமாக ஆன்ட்ராய்டு டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் அப்கிரேஷன் இருக்கின்றது. இதன் மூலம் ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா போன்ற சிறப்பம்சங்களைக் கையாள முடியும்.

அரிதினும் அரிதான உருவத்திற்கு அப்கிரேட் ஆகிய பட்ஜெட் கார்... இதற்கான செலவை கேட்டு ஆச்சரியப்படும் மக்கள்...

இதேபோன்று மிகப்பெரிய மாற்றமாக ஸ்பீக்கர், இல்லுமினேடட் ஸ்கஃப் பிளேட்டுகள், ஃப்ளூர் மேட்கள் மற்றும் ஸ்டியரிங் வீல் உள்ளிட்டவை கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ஒட்டுமொத்த மாற்றத்திற்குமே ரூ. 65 ஆயிரம் மட்டுமே செலவாகியிருப்பது நம்மை கூடுதல் ஆச்சரியத்தில் மூழ்க வைத்துள்ளது.

Most Read Articles
English summary
Maruti WagonR Converted Into 'GT Edition' Car. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X