மஸேரட்டி எம்சி20 ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்: ரேஸ் வெர்ஷனிலும் வருகிறது

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மஸேரட்டி நிறுவனத்தின் புதிய எம்சி20 ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இத்தாலியில் நடந்த வண்ணமயமான நிகழ்ச்சியில் இந்த புதிய கார் இன்று முறைப்படி பொது பார்வைக்கு வந்தது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் எம்சி20 ஸ்போர்ட்ஸ் அறிமுகப்படுத்தியது மஸேரட்டி!

இத்தாலியை சேர்ந்த மஸேரட்டி நிறுவனம் அதிசெயல்திறன் மிக்க கார் மாடல்களுக்கு உலக அளவில் பெயர் பெற்று விளங்குகிறது. இந்த நிலையில், தனது கார் வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான திட்டத்தை இன்று அறிவித்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் எம்சி20 ஸ்போர்ட்ஸ் அறிமுகப்படுத்தியது மஸேரட்டி!

அதன்படி, புத்தம் புதிய ஸ்போர்ட்ஸ் கார் மாடல் அறிமுகத்துடன் தனது புதிய அத்யாயத்தை துவங்கி இருக்கிறது. அத்துடன் மீண்டும் மோட்டார் பந்தயங்களில் பங்கேற்ப இருப்பதாகவும் அறிவித்துள்ளது. இத்தாலியிலுள்ள பாரம்பரியம் மிக்க மொடேனா மோட்டார் பந்தய களத்தில் மஸேரட்டியின் புதிய அத்யாய துவக்க நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி பிரத்யேக இணையப் பக்கம் மூலமாக நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் எம்சி20 ஸ்போர்ட்ஸ் அறிமுகப்படுத்தியது மஸேரட்டி!

புதிய அத்யாயத்தில் அடி எடுத்து வைப்பதற்கு ஏதுவாக புத்தம் புதிய எம்சி20 ஸ்போர்ட்ஸ் கார் மாடலையும் மஸேரட்டி இந்த நிகழ்ச்சியின் மூலமாக உலக அளவில் பொது பார்வைக்கு கொண்டு வந்தது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் எம்சி20 ஸ்போர்ட்ஸ் அறிமுகப்படுத்தியது மஸேரட்டி!

கடந்த 2004ம் ஆண்டு மஸேரட்டி அறிமுகம் செய்த எம்சி12 சூப்பர் காருக்கு மாற்றாக அதிநவீன தொழில்நுட்பத்துடன் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், மஸேரட்டி எம்சி12 கார் ஃபெராரி என்ஸோ கார் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் எம்சி20 ஸ்போர்ட்ஸ் அறிமுகப்படுத்தியது மஸேரட்டி!

ஆனால், இந்த கார் மஸேரட்டி நிறுவனத்தின் 100 சதவீத சொந்த தொழில்நுட்பம் மற்றும் கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மீண்டும் கார் பந்தய களத்தில் மஸேரேட்டி இந்த காருடன் நுழைய இருக்கிறது. அதாவது, எம்சி12 கார் போன்றே, இந்த கார் சாலையில் செல்லத்தக்கதாகவும், பந்தய களங்களில் பயன்படுத்துவதற்கான ரேஸ் வெர்ஷன் என இரண்டு மாடல்களில் வர இருக்கிறது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் எம்சி20 ஸ்போர்ட்ஸ் அறிமுகப்படுத்தியது மஸேரட்டி!

புதிய மஸேரட்டி எம்சி20 காரில் 3.0 லிட்டர் வி6 ட்வின் டர்போ எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. நெப்டியூன் என்று குறிப்பிடப்படும் இந்த எஞ்சின் அதிகபட்சமாக 621 பிஎச்பி பவரையும், 730 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த காரில் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான வாய்ப்பும் இருப்பதால், விரைவில் ஹைப்ரிட் மாடலிலும் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் எம்சி20 ஸ்போர்ட்ஸ் அறிமுகப்படுத்தியது மஸேரட்டி!

ஃபார்முலா-1 உள்ளிட்ட பல்வேறு கார் பந்தயங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப அம்சங்களை இந்த கார் பெற்றிருக்கிறது. கார்பன் சேஸீயுடன் கட்டமைக்கப்பட்டு இருக்கும் இந்த காரில் முதல்முறையாக பட்டர்ஃப்ளை வடிவத்தில் திறக்கும் கதவுகள் அமைப்பை மஸேரட்டி பயன்படுத்தி உள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் எம்சி20 ஸ்போர்ட்ஸ் அறிமுகப்படுத்தியது மஸேரட்டி!

மிகவும் தாழ்வான தோற்றத்துடன் மஸேரட்டியின் முத்தாய்ப்பான ரேடியேட்டர் க்ரில் அமைப்பு, பெரிய ஏர் இன்டேக்குகளுடன் முகப்பு வசீகரிக்கிறது. பக்கவாட்டில் பெரிய அலாய் சக்கரங்கள், வலிமையான தோற்றத்தை தரும் பின்புற வடிவமைப்புடன் கவர்கிறது.

இந்த காரில் 10.1 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. மஸேரட்டியின் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பத்துடன், மேம்படுத்தப்பட்ட ஓட்டுதல் அனுபவத்தை தரும் தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் எம்சி20 ஸ்போர்ட்ஸ் அறிமுகப்படுத்தியது மஸேரட்டி!

இந்த ஸ்போர்ட்ஸ் கார் மாடலானது மஸேரட்டியின் விலே சிரோ மெனோட்டி கார் ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்த ஆலை நவீன தொழில்நுட்ப கட்டுமானம், எஞ்சின் ஆய்வுப் பிரிவு மற்றும் பெயிண்ட்டிங் பிரிவுடன் மேம்படுத்தப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு இந்த புதிய ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்திக்கு செல்ல இருக்கிறது. இந்த காரின் கேப்ரியோலே உள்ளிட்ட மாடல்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2 லட்சம் டாலர்கள் விலையில் இந்த கார் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #மஸராட்டி #maserati
English summary
Maserati has unveiled all-new mid-engine sports car MC20 in Italy today.
Story first published: Thursday, September 10, 2020, 1:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X