பவர்ஃபுல் மஸேரட்டி ட்ரோஃபியோ சூப்பர் செடான் கார்களுக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கியது!

மஸேரட்டி ட்ரோஃபியோ சூப்பர் செடான் கார்களுக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. இதுபற்றிய கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

பவர்ஃபுல் மஸேரட்டி ட்ரோஃபியோ கார்களுக்கு இந்தியாவில் முன்பதிவு!

மஸேரட்டி நிறுவனம் தனது அதிசக்திவாய்ந்த கார் மாடல்களை ட்ரோஃபியோ என்ற பிராண்டில் விசேஷ அம்சங்களுடன் அறிமுகம் செய்து வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு மஸேரட்டி லெவன்ட்டே எஸ்யூவியின் ட்ரோஃபியோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

பவர்ஃபுல் மஸேரட்டி ட்ரோஃபியோ கார்களுக்கு இந்தியாவில் முன்பதிவு!

இந்த நிலையில், தற்போது ட்ரோஃபியோ பிராண்டில் தனது கிப்லி, குவாட்ரோபோர்ட்டோ சூப்பர் செடான் கார்களின் செயல்திறன்மிக்க மாடல்களையும் வெளியிட்டுள்ளது. இதில் மற்றொரு மகிழ்ச்சியான செய்தி, லெவன்ட்டே எஸ்யூவி மட்டுமின்றி, இந்த சூப்பர் செடான் கார் மாடல்களுக்கும் இந்தியாவில் முன்பதிவும் துவங்கப்பட்டு இருக்கிறது.

பவர்ஃபுல் மஸேரட்டி ட்ரோஃபியோ கார்களுக்கு இந்தியாவில் முன்பதிவு!

மஸேரட்டி லெவன்ட்டே காரில் பயன்படுத்தப்படும் அதே வி8 எஞ்சின்தான் இந்த சூப்பர் செடான் கார்களிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த சக்திவாய்ந்த வி8 எஞ்சின் ஃபெராரி சூப்பர் கார் நிறுவனத்திடம் இருந்து சப்ளை பெறப்படுகிறது என்பதும் மற்றொரு சுவாரஸ்யமான விஷயம்.

பவர்ஃபுல் மஸேரட்டி ட்ரோஃபியோ கார்களுக்கு இந்தியாவில் முன்பதிவு!

மஸேரட்டி கிப்லி, குவாட்ரோபோர்ட்டே சூப்பர் செடான் கார்களில் இடம்பெற்றிருக்கும் ட்வின் டர்போசார்ஜர்கள் கொண்ட 3.8 லிட்டர் வி8 எஞ்சின் அதிகபட்சமாக 572 பிஎச்பி பவரையும், 730 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இசட்எஃப் நிறுவனத்தின் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

பவர்ஃபுல் மஸேரட்டி ட்ரோஃபியோ கார்களுக்கு இந்தியாவில் முன்பதிவு!

இதே எஞ்சின் குவாட்ரோபோர்ட்டே ஜிடிஎஸ் கார் மாடலிலும் கொடுக்கப்பட்டு இருந்தாலும், குவாட்ரோபோர்ட்டே ட்ரோஃபியோ கார் கூடுதல் சக்தியை வெளிப்படுத்தும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டு வந்துள்ளதுதான் சிறப்பான விஷயம்.

பவர்ஃபுல் மஸேரட்டி ட்ரோஃபியோ கார்களுக்கு இந்தியாவில் முன்பதிவு!

மஸேரட்டி கிப்லி, குவாட்ரோபோர்ட்டே ட்ரோஃபியோ மாடல்கள் 0 - 100 கிமீ வேகத்தை முறையே 4.3 வினாடிகளிலும், 4.5 வினாடிகளிலும் எட்டிவிடும். இந்த இரண்டு கார்களும் மணிக்கு 326 கிமீ வேகத்தை எட்டும் திறன் படைத்ததாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கிப்லி காரில் முதல்முறையாக வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பவர்ஃபுல் மஸேரட்டி ட்ரோஃபியோ கார்களுக்கு இந்தியாவில் முன்பதிவு!

சாதாரண கிப்லி, குவாட்ரோபோர்ட்டே கார்களிலிருந்து ட்ரோஃபியோ மாடல்களை வேறுபடுத்தும் விதத்தில், தோற்றத்தில் சில கூடுதல் சிறப்புகளை சேர்த்துள்ளது மஸேரட்டி நிறுவனம். கிப்லி, குவாட்ரோபோர்ட்டே ட்ரோஃபியோ மாடல்களில் 21 அங்குல அலுமினியம் ஓரியோன் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேநேரத்தில், லெவன்ட்டே ட்ரோஃபியோ எஸ்யூவியில் 22 அங்குல ஓரியோன் சக்கரங்கள் உள்ளன.

பவர்ஃபுல் மஸேரட்டி ட்ரோஃபியோ கார்களுக்கு இந்தியாவில் முன்பதிவு!

இந்த அதிவேகமான கார்களை கட்டுப்படுத்தும் விதமாக, லெவன்ட்டே காரில் இருக்கும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப முறையில் வாகனத்தை கட்டுப்படுத்தும் ஐவிசி சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, ஓட்டுனர் மிகச் சிறந்த கையாளுமை, கட்டுப்படுத்தும் வாய்ப்பை பெற முடியும். மேம்பட்ட பாதுகாப்பான அனுபவத்தை தரும்.

பவர்ஃபுல் மஸேரட்டி ட்ரோஃபியோ கார்களுக்கு இந்தியாவில் முன்பதிவு!

இந்த இரண்டு சூப்பர் செடான் கார்களிலும் கார்ஸா என்ற விசேஷ டிரைவிங் மோடு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த டிரைவிங் மோடில் வைத்து இயக்கும்போது, அதிகபட்ச செயல்திறனை இந்த இரண்டு கார்களின் எஞ்சின் வெளிப்படுத்தும். நகரப்புற சாலை மற்றும் நெடுஞ்சாலைகளில் சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தை பெறுவதற்காக ஏடிஏஎஸ் என்ற சிறப்பு தொழில்நுட்பமும் உள்ளது.

பவர்ஃபுல் மஸேரட்டி ட்ரோஃபியோ கார்களுக்கு இந்தியாவில் முன்பதிவு!

இந்த காரில் 10.1 அங்குல திரையுடன் கூடிய மல்டிமீடியா சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. கனெக்டெட் கார் தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளது. இந்த கார்கள் இந்தியாவிலும் அதிக வரவேற்பை பெறும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #மஸராட்டி #maserati
English summary
Maserati has started accepting pre bookings for Ghibli & Quattroporte Trofeo super sedans in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X