அவதார் ஜேம்ஸ் கேமரூன் வடிவமைப்பில் உருவாகும் தானியங்கி கார்... பென்ஸின் அட்டகாசமான மின்சார கார்..!

அவதார் திரைப்பட இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன், அப்படத்தில் காட்சியளிக்கும் சில தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு பென்ஸ் நிறுவனத்திற்கான மின்சார காரை தயாரித்துள்ளார்.

அவதார் ஜேம்ஸ் கேமரூன் வடிவமைப்பில் உருவாகும் தானியங்கி கார்... பென்ஸின் அட்டகாசமான மின்சார கார்..!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புத்தம் புதிய தானியங்கி கார் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அந்த காரின் கான்செப்ட் மாடலை 2020ஆம் ஆண்டிற்கான லாஸ் வேகாஸ் சிஇஎஸ் நிகழ்ச்சியில் அந்நிறுவனம் காட்சிப்படுத்தியது.

ஏவிடிஆர் என்ற புனைப்பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் பல்வேறு அட்வான்ஸ்ட் தொழில்நுட்பங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

அவதார் ஜேம்ஸ் கேமரூன் வடிவமைப்பில் உருவாகும் தானியங்கி கார்... பென்ஸின் அட்டகாசமான மின்சார கார்..!

குறிப்பாக, அவதார் திரைப்பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இணைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார், அந்த படத்தின் கதாபாத்திரங்களைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தோற்றம் மற்றும் நவீன தொழில்நுட்பம் இதுவரை கண்டிராத அளவிலான பிரத்யேக அமைப்பினைப் பெற்றிருக்கின்றது.

மெர்சிடிஸின் இந்த விஷன் ஏவிடிஆர் காரின் பின்பக்கத்தில் 33 அசையும் செதில்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை, மல்டி டைரக்சனில் இயங்கக்கூடியவை.

அவதார் ஜேம்ஸ் கேமரூன் வடிவமைப்பில் உருவாகும் தானியங்கி கார்... பென்ஸின் அட்டகாசமான மின்சார கார்..!

இந்த செதில்கள் வெளியே உள்ளவர்களுடன் தொடர்பு கொள்வதற்கு உதவும். மேலும், ஏவிடிஆர் காரின் வீல்களில் அவதார் ஆன்மாக்களின் மரங்களில் காணப்படுவதைப் போன்ற விதைகள் காணப்படுகின்றது. இது காரின் இயக்கத்தின்போது அசைந்து, சுருங்கி விரியும்.

மற்றுமொரு சிறப்பம்சமாக இந்த காரில் ஸ்டியரிங் வீல் நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக தானாகவே இயங்கும் தொழில்நுட்ப வசதி இணைக்கப்பட்டுள்ளது.

அவதார் ஜேம்ஸ் கேமரூன் வடிவமைப்பில் உருவாகும் தானியங்கி கார்... பென்ஸின் அட்டகாசமான மின்சார கார்..!

ஆகையால், இந்த காரை இயக்க ஓட்டுநர் தேவைப்படாது. அதேசமயம், இந்த காரை கன்ட்ரோல் செய்ய முட்டை வடிவிலான ஓர் அமைப்பும் வழங்கப்பட்டுள்ளது. இது எதிர்கால கார் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த அமைப்பு உள்ளது. அதற்கேற்ப காரின் பல கன்ட்ரோல்கள் இந்த ஓவல் அமைப்பிலேயே உள்ளது.

இதுதவிர இந்த ஓவல் வடிவமுள்ள கன்ட்ரோல்லரை இயக்கி தன் கையால் பிடிக்கையில், அவரின் இதய துடிப்பைக் கொண்டு அது அதிரச் செய்யும்.

அவதார் ஜேம்ஸ் கேமரூன் வடிவமைப்பில் உருவாகும் தானியங்கி கார்... பென்ஸின் அட்டகாசமான மின்சார கார்..!

முக்கோண வடிவில் உள்ள அந்த காரின் இருக்கைகள் அவதார் திரைப்படத்தில் வரும் உயிர் கொடுக்கும் எந்திரங்களின் இருக்கையை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அதன் ஒவ்வொரு பாகமும் பார்த்து பார்த்து அவதார் படத்துடன் ஒத்திசைந்து இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அவதார் ஜேம்ஸ் கேமரூன் வடிவமைப்பில் உருவாகும் தானியங்கி கார்... பென்ஸின் அட்டகாசமான மின்சார கார்..!

இதுதவிர, காரில் சிறுவர்கள் பயணிப்பார்களேயானால் அவர்களைக் கவர்கின்ற வகையில் படிப்பறிவை வழங்கும் கேம்கள் மற்றும் விளையாட்டு சம்பந்தமான பாடங்களைக் காண்பிக்கின்ற வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

அவதார் ஜேம்ஸ் கேமரூன் வடிவமைப்பில் உருவாகும் தானியங்கி கார்... பென்ஸின் அட்டகாசமான மின்சார கார்..!

இந்த காரில் கிரஃபேன் பேஸ்ட் ஆர்கானிக் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. ஆகையால், இதற்கு பூமியின் தாதுக்கள் தேவைப்படாது. இது, 110kWh திறன் கொண்ட பேட்டரியாகும். இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 700 கிமீ தூரம் வரை செல்லும்.

அவதார் ஜேம்ஸ் கேமரூன் வடிவமைப்பில் உருவாகும் தானியங்கி கார்... பென்ஸின் அட்டகாசமான மின்சார கார்..!

இதன் மின்மோட்டார் 470 குதிரை திறனை வெளிப்படுத்தும் வகையில் செயலாற்றலைப் பெற்றிருக்கின்றது. இத்துடன், இந்த காரின் இன்டீரியரில் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்ட்டிக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இதன் இருக்கைக்கு "தினம்கா" லெதர் வழங்கப்பட்டுள்ளது.

அவதார் ஜேம்ஸ் கேமரூன் வடிவமைப்பில் உருவாகும் தானியங்கி கார்... பென்ஸின் அட்டகாசமான மின்சார கார்..!

இத்துடன், இந்த காரின் தரை தளம் கருண் என்ற மரத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மரங்கள் ஸ்பெஷலாக இந்தோனேசியாவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் இந்த கார் எதிர்கால மின்சார கார் அனைவரின் மத்தியிலும் பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்செப்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த கார் விரைவில் விற்பனைக்கான உற்பத்தியை தொடங்களாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவதார் ஜேம்ஸ் கேமரூன் வடிவமைப்பில் உருவாகும் தானியங்கி கார்... பென்ஸின் அட்டகாசமான மின்சார கார்..!

அதேசமயம், இதன் விற்பனைக்கான உற்பத்தி எப்போது தொடங்கப்படும் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இருப்பினும், எதிர்காலத்தில் நிச்சயம் இந்த காரின் உற்பத்தி பணியை பென்ஸ் நிறுவனம் தொடங்கலாம் என கூறப்படுகின்றது. இதன் பின்னரே இந்திய வருகை பற்றிய தகவலும் வெளியாகும்.

Most Read Articles
English summary
Mercedes AVTR Autonomous Concept Car. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X