50 வருடங்களை கடந்தும் கெத்தாக வலம் வரும் கார்... இதுல மினி பார் வசதி இருக்குனு சொன்னா நம்புவீங்களா!

50 ஆண்டுகளுக்கும் மேல் பழைய காரொன்று தற்போதும் புதிய உருவத்தில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

50 வருடங்களை கடந்தும் கெத்தாக வலம் வரும் கார்... இதுல மினி பார் வசதி இருக்குனு சொன்னா நம்புவீங்களா..?

50 வருடங்கள் பழமை வாய்ந்த பென்ஸ் நிறுவனத்தின் அரிய வகை கார் ஒன்று புத்துயிர் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அது, இப்போதைய நவீனகால கார்களையே தோற்கடிக்குமளவிற்கு புதிய வசதிகளுடன் உருவாகியிருக்கின்றது. இது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 600 மாடல் ஆகும்.

50 வருடங்களை கடந்தும் கெத்தாக வலம் வரும் கார்... இதுல மினி பார் வசதி இருக்குனு சொன்னா நம்புவீங்களா..?

இது ஓர் அல்ட்ரா லக்சூரியஸ் மாடல். மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் விற்பனைக்கு களமிறக்கிய அதிக சொகுசு நிறைந்த கார்களில் இதுவும் ஒன்றாக இருக்கின்றது. இக்காரை 1963ஆம் ஆண்டு முதல் 1981ம் ஆண்டு வரை அந்நிறுவனம் விற்பனையில் ஈடுபடுத்தி வந்தது. அப்போது, பென்ஸ் நிறுவனத்தின் மூலம் விற்பனைச் செய்யப்பட்ட மிக மிக விலையுயர்ந்த கார் இதுவே ஆகும்.

50 வருடங்களை கடந்தும் கெத்தாக வலம் வரும் கார்... இதுல மினி பார் வசதி இருக்குனு சொன்னா நம்புவீங்களா..?

மேலும், குறுகிய வீல்பேஸ் உடைய செடான் மற்றும் நீளமான வீல்பேஸ் உடைய புல்மேன் லிமோசைன் ஆகிய இரு விதமான வேரியண்டுகளில் இக்கார் அப்போது விற்பனைக்குக் கிடைத்தது. இந்த சிறப்பு வாய்ந்த காரையே அதன் உரிமையாளர் தற்போது மாடர்ன் கார்களுக்கு இணையாக மாற்றியமைத்திருக்கின்றார்.

50 வருடங்களை கடந்தும் கெத்தாக வலம் வரும் கார்... இதுல மினி பார் வசதி இருக்குனு சொன்னா நம்புவீங்களா..?

பென்ஸ் 600 புல்மேன் லிமோசைன் கார் தற்போது ஒரு சிலருடைய கராஜிலேயே விண்டேஜ் காராக அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது. அவ்வாறு இத்தனை நாட்களாக கராஜை மட்டுமே அலங்கரித்து வந்த பென்ஸ் 600தான் தற்போது சாலையையும் அலங்கரிக்கின்ற வகையில் புதிய அம்சங்களுடன் புத்துயிர் பெற்றிருக்கின்றது.

50 வருடங்களை கடந்தும் கெத்தாக வலம் வரும் கார்... இதுல மினி பார் வசதி இருக்குனு சொன்னா நம்புவீங்களா..?

புதிய பெயிண்ட், கூடுதல் லக்சூரி அம்சம், மாற்றியமைக்கப்பட்ட தொழில்நுட்பம் ஆகியவற்றுடன் இக்கார் புதிய அவதாரத்தையேப் பெற்றிருக்கின்றது. இந்த மாற்றம் குறித்த புகைப்படங்களே தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு, வைரலாகும் அனைத்து படங்களும் அக்கார்குறித்த தகவலை தெளிவாக கூறும்வகையில் 'பேசும் படங்களாக' அமைந்திருக்கின்றன.

டிரைவ்டிரைப் எனும் தளமே இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

50 வருடங்களை கடந்தும் கெத்தாக வலம் வரும் கார்... இதுல மினி பார் வசதி இருக்குனு சொன்னா நம்புவீங்களா..?

இதன்படி, பென்ஸ் 600 கார், மேபேக் 62 லிமோசைன் கார்களுக்கு இணையாக மாற்றியமைக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இதன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸடல், பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட அம்சங்கள் இதை எடுத்துரைக்கும் வகையிலேயே அமைந்திருக்கின்றது. இதுமட்டுமின்றி கூடுதலாக பல்வேறு பிரிமியம் அம்சங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கின்றன.

50 வருடங்களை கடந்தும் கெத்தாக வலம் வரும் கார்... இதுல மினி பார் வசதி இருக்குனு சொன்னா நம்புவீங்களா..?

லெதர் போர்வைப் போர்த்தப்பட்ட மிருதுவான இருக்கை (காற்றோட்டம் நிறைந்தது), ஆம்பிசியண்ட் மின் விளக்குகள், டால்பி ஆடியோ, ப்ளூடூத் வசதி, ஃபிரிட்ஜ் மற்றும் மினி பார் வசதி உள்ளிட்ட ஏராளமான பிரிமியம் அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், முன் மற்றும் பின்பக்க கேமிரா, பெரிய டிவிடி ஸ்கிரீன் மற்றும் திரை போன்ற சிறப்பு வசதிகளும் அதில் நிறுவப்பட்டிருக்கின்றன.

50 வருடங்களை கடந்தும் கெத்தாக வலம் வரும் கார்... இதுல மினி பார் வசதி இருக்குனு சொன்னா நம்புவீங்களா..?

இந்த ஒட்டுமொத்த மாற்றத்திற்கும் அதன் உரிமையாளர் 3.23 மில்லியன் டாலர்களை செலவழித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆம், இது இந்தியாவில் செய்யப்பட்ட மாற்றம் அல்ல. இருப்பினும், அனைத்து நாட்டைச் சேர்ந்த வாகன பிரியர்களின் ஆர்வத்தையும் தூண்டும் வகையில் அமைந்திருக்கின்றது.

50 வருடங்களை கடந்தும் கெத்தாக வலம் வரும் கார்... இதுல மினி பார் வசதி இருக்குனு சொன்னா நம்புவீங்களா..?

தற்போது செய்யப்பட்டிருக்கும் செலவானது இந்திய மதிப்பில் ரூ. 24.50 கோடியாக உள்ளது. இது மிக மிக அதிக பெரிய தொகையாகும். இந்த தொகைக்கு புதிய அதிக சொகுசு வசதிகள் கொண்ட காரையே வாங்கியிருக்க முடியும். ஆனால், அது இந்த விண்டேஜ் காரைப் போன்று வராது என அதன் உரிமையாளர் மிகவும் பெருமிதத்துடன் தெரிவிக்கின்றார்.

50 வருடங்களை கடந்தும் கெத்தாக வலம் வரும் கார்... இதுல மினி பார் வசதி இருக்குனு சொன்னா நம்புவீங்களா..?

இக்காரில், 6.3 லிட்டர் வி8 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது, அதிகபட்சமாக 250 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டதாகும். இதில், 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதி வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும், இக்கார் பின் வீல் இயக்கத்தைக் கொண்டதாக இருப்பது கூடுதல் சிறப்பு தகவலாக உள்ளது.

Most Read Articles

English summary
Mercedes-Benz 600 Pullman Limousine Restored. Read In Tamil.
Story first published: Thursday, August 13, 2020, 18:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X