விரைவில் வருகிறது மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் செடான் கார்!

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் செடான் கார் மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுபற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

 விரைவில் வருகிறது மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் செடான் கார்!

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஏ க்ளாஸ் செடான் கார் மாடலின் லிமோசின் வேரியண்ட்டை காட்சிப்படுத்தி இருந்தது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஆரம்ப ரக சொகுசு செடான் கார் மாடலாக இருந்ததால், இந்தியர்கள் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தியது. கொரோனா காரணமாக, இந்த காரின் அறிமுகம் தள்ளி வைக்கப்பட்டு வருகிறது.

 விரைவில் வருகிறது மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் செடான் கார்!

இந்த நிலையில், இந்த மாத இறுதியில் இந்த புதிய கார் மாடலை மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ஆட்டோகார் இந்தியா தளத்தின் செய்தி கூறுகிறது. அதாவது, தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக இந்த கார் களமிறக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

 விரைவில் வருகிறது மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் செடான் கார்!

முதலாவதாக மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் காரின் AMG A35 என்ற செயல்திறன் மிக்க விசேஷ மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது. சாதாரண வேரியண்ட்டுகள் பின்னர் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

 விரைவில் வருகிறது மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் செடான் கார்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் ஏஎம்ஜி ஏ35 கார் சாதாரண மாடலைவிட அதிக வசீகரமான அம்சங்களுடன், சக்திவாய்ந்த எஞ்சின் தேர்வில் வர இருக்கிறது. ஏஎம்ஜி கார்களில் வழங்கப்படும் கூடுதல் வசீகரம் தரும் ஆக்சஸெரீகள் இந்த காரின் தோற்றத்தை சிறப்பாக மாற்றுகிறது. தனித்துவமான பம்பர், பெரிய அலாய் வீல்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. இந்த காரில் பூட்லிட் ஸ்பாய்லர், க்ரோம் பூச்சுடன் கூடிய புகைப்போக்கி குழல்கள் பின்புறத்தின் வசீகரத்தை அதிகரிக்கிறது.

 விரைவில் வருகிறது மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் செடான் கார்!

உட்புறத்திலும் அசத்தலாக இருக்கிறது. அழகிய வடிவமைப்பில் ஏசி வென்ட்டுகள், இரண்டு மின்னணு திரைகளுடன் கூடிய டேஷ்போர்டு, கவர்ச்சியான ஸ்டீயரிங் வீல் என, பக்கெட் இருக்கைகள் என உட்புறம் மிகவும் பிரிமீயமாக உள்ளது.

 விரைவில் வருகிறது மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் செடான் கார்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் ஏஎம்ஜி ஏ35 காரில் பர்ம்ஸ்டெர் சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், எல்இடி ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், பெரிய சன்ரூஃப் அமைப்பு, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டருக்காக இரண்டு 10.25 அங்குலத்திலான திரைகள், செயற்கை நுண்ணறிவு திறன் தொழில்நுட்பத்துடன் கூடிய எம்பியூஎக்ஸ் செயலி ஆகியவை இதன் முக்கிய சிறப்பம்சங்களாக உள்ளன.

 விரைவில் வருகிறது மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் செடான் கார்!

புதிய ஏ க்ளாஸ் ஏஎம்ஜி ஏ35 காரில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 304 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் மூலமாக முன்சக்கரங்களுக்கு எஞ்சின் சக்தி செலுத்தப்படுகிறது.

 விரைவில் வருகிறது மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் செடான் கார்!

சாதாரண ஏ க்ளாஸ் செடான் வேரியணட்டுகளில் 162 பிஎச்பி பவரை வழங்கும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 115 பிஎச்பி பவரை அளிக்கும் டீசல் எஞ்சின் இடம்பெறும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

 விரைவில் வருகிறது மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் செடான் கார்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் செடான் கார் அண்மையில் வந்த பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே காருக்கு போட்டியாக இருக்கும். மேலும், இதே ரகத்தில் ஆடி கார் நிறுவனமும் புதிய ஏ2 காரை களமிறக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Mercedes-Benz India showcased its entry-level sedan model at the 2020 Auto Expo earlier this year called the A-Class Limousine. The new model was expected to be launched right after its showcase at the expo in the Indian market.
Story first published: Saturday, October 17, 2020, 16:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X