மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் காரின் முக்கிய அம்சங்கள்!

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் காரின் முக்கிய அம்சங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் காரின் முக்கிய அம்சங்கள்!

இந்திய சொகுசு கார் சந்தையில் விற்பனையில் முதலிடத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இருந்து வருகிறது. இதற்காக, பல்வேறு வகை சொகுசு கார் மாடல்களை வரிசை கட்டி வைத்திருப்பதுடன், தொடர்ந்து புதிய மாடல்களையும் அறிமுகம் செய்து வருகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் காரின் முக்கிய அம்சங்கள்!

அந்த வகையில், தற்போது ஆரம்ப ரக சொகுசு செடான் கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடந்த சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில், இந்த கார் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் காரின் முக்கிய அம்சங்கள்!

அப்போதே சொகுசு கார் பிரியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆனால், இந்த காரின் முழுமையான விபரங்கள் அப்போது வெளியிடப்படவில்லை.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் காரின் முக்கிய அம்சங்கள்!

ந்த நிலையில், இந்த கார் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் நிலையில், தற்போது விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் பெட்ரோல், டீசல் மற்றும் ஏஎம்ஜி பெட்ரோல் என மூன்று விதமான மாடல்களில் வர இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் காரின் முக்கிய அம்சங்கள்!

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் பெட்ரோல் மாடலில் 163 பஎச்பி பவரை வழங்கும் 1.3 லிட்டர் டர்போ எஞ்சின், டீசல் மாடலில் 190 எச்பி பவரை வழங்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் காரின் முக்கிய அம்சங்கள்!

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த ஏ35 ஏஎம்ஜி வெர்ஷனில் 306 எச்பி பவரை 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். சாதாரண ஏ க்ளாஸ் லிமோசின் மாடலில் 2 வீல் டிரைவ் சிஸ்டமும், ஏஎம்ஜி மாடலில் 4 வீல் டிரைவ் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் காரின் முக்கிய அம்சங்கள்!

இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், பனோரமிக் சன்ரூஃப், எல்இடி டெயில் லைட்டுகள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, MBUX செயலியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் காரின் முக்கிய அம்சங்கள்!

பர்ம்ஸ்டெர் ஆடியோ சிஸ்டம், நப்பா லெதர் உறையுடன் ஸ்டீயரிங் வீல், புஷ் பட்டன் ஸ்டார்ட், கீ லெஸ் என்ட்ரி, டியூவல் சைலென்சர் ஆகியவை காரின் முக்கிய அம்சங்களாக இருக்கும். இந்த காரில் கருப்பு, பீஜ் மற்றும் பழுப்பு வண்ண இன்டீரியர் தேர்வுகள் வழங்கப்படும். 5 விதமான வண்ணத் தேர்வுகளில் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் விற்பனைக்கு வர இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் காரின் முக்கிய அம்சங்கள்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் செடான் கார் இதுவரையில் விற்பனையில் இருந்து வந்த மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ காருக்கு மாற்றாக எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.35 லட்சத்தை ஒட்டிய எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் காரின் முக்கிய அம்சங்கள்!

சொகுசு கார் மார்க்கெட்டில் விலை குறைவான ஆரம்ப ரக செடான் கார் மாடலாக எதிர்பார்க்கப்படுதால், ஆடி ஏ3, பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஆகிய செடான் கார்களுக்கு இது போட்டியாக இருக்கும். நிச்சயம் இந்த காருக்கு இந்தியாவில் குறிப்பிடத்தக்க வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
German luxury car maker, Mercedes-Benz has revealed the Indian spec and features details of the A-Class limousine luxury sedan ahead of its launch.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X