பவர்ஃபுல் ஏஎம்ஜி கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய பென்ஸ் முடிவு!

அதிசெயல்திறன் மிக்க ஏஎம்ஜி கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்ய மெர்சிடிஸ் பென்ஸ் முடிவு செய்துள்ளது. இதனால், மிக சரியான விலையில் ஏஎம்ஜி கார்களை இந்திய வாடிக்கையாளர்கள் பெறுவதற்கான வழிவகை ஏற்பட உள்ளது.

பவர்ஃபுல் ஏஎம்ஜி கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய பென்ஸ் முடிவு!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சாதாரண கார்களின் அடிப்படையில் அதிசெயல்திறன் மிக்க மாடல்கள் ஏஎம்ஜி பிராண்டில் உருவாக்கப்பட்டு விற்பனையில் வைக்கப்பட்டுள்ளன. ஏஎம்ஜி கார்களுக்கு உலக அளவில் அதிக மதிப்பை பெற்றுள்ளன. சாதாரண பென்ஸ் சொகுசு கார்களைவிட தோற்றத்தில் மிரட்டலான பல கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் அதிசெயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வுகளும் கொடுக்கப்படுகின்றன.

பவர்ஃபுல் ஏஎம்ஜி கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய பென்ஸ் முடிவு!

இந்த நிலையில், ஏஎம்ஜி கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்ய மெர்சிடிஸ் பென்ஸ் முடிவு செய்துள்ளது. முதல் மாடலாக ஏஎம்ஜி பிராண்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஜிஎல்சி 43 4-மேட்டிக் கூப கார் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட உள்ளதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பவர்ஃபுல் ஏஎம்ஜி கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய பென்ஸ் முடிவு!

புதிய ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே காரின் அசெம்பிள் செய்யும் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளதாகவும், அடுத்த மாதம் இந்த புதிய கார் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது.

பவர்ஃபுல் ஏஎம்ஜி கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய பென்ஸ் முடிவு!

ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே பிஎஸ்4 மாடலானது ரூ.75 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், பிஎஸ்6 மாடலானது ரூ.1 கோடி விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட உள்ளதால், ரூ.80 லட்சத்தில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

பவர்ஃபுல் ஏஎம்ஜி கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய பென்ஸ் முடிவு!

எஸ்யூவி வகை மற்றும் செடான் கார்களின் அம்சங்களை பிரதிபலிக்கும் க்ராஸ்ஓவர் ஸ்டைலில் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 4மேட்டிக் கூபே கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 3.0 லிட்டர் வி6 பை டர்போ எஞ்சின் பொருத்தப்படும் என தெரிகிறது. இந்த எஞ்சின் அதிகபடச்மாக 385 பிஎச்பி பவரையும், 520 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும்.

பவர்ஃபுல் ஏஎம்ஜி கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய பென்ஸ் முடிவு!

இந்தியாவிலேயே ஏஎம்ஜி பிராண்டு கார்கள் அசெம்பிள் செய்யப்படும் பணிகள் துவங்குவதன் மூலமாக விலை கணிசமாக குறையும். இதனால், இந்திய வாடிக்கையாளர்கள் மிகச் சரியான விலையில் ஏஎம்ஜி கார்களை வாங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பவர்ஃபுல் ஏஎம்ஜி கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய பென்ஸ் முடிவு!

மஹாராஷ்டிர மாநிலம் புனே அருகில் உள்ள சகன் தொழிற்பேட்டையில் உள்ள தனது கார் ஆலையில் 10 சொகுசு கார் மாடல்களை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அசெம்பிள் செய்து விற்பனை செய்து வருகிறது. இதே ஆலையில் இனி ஏஎம்ஜி கார்களும் அசெம்பிள் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Mercedes-Benz has announced that the company will start assemble AMG car models in India very soon.
Story first published: Tuesday, October 20, 2020, 17:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X