மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரில் பவர்ஃபுல் டீசல் எஞ்சின் மீண்டும் அறிமுகம்!

மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரில் கொடுக்கப்பட்டு வந்த பவர்ஃபுல் டீசல் எஞ்சின் தேர்வு மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரில் பவர்ஃபுல் டீசல் எஞ்சின் மீண்டும் அறிமுகம்!

இந்தியாவில் அதிகம் விற்பனையான சொகுசு கார் மாடல் என்ற பெருமை மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காருக்கு உண்டு. டிசைன், சொகுசு அம்சங்கள், இடவசதி, செயல்திறன் மிக்க எஞ்சின், விலை ஆகிய அனைத்திலும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை இந்த கார் கச்சிதமாக பூர்த்தி செய்து வருகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரில் பவர்ஃபுல் டீசல் எஞ்சின் மீண்டும் அறிமுகம்!

இந்த நிலையில், மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரில் பிஎஸ்6 தரத்திற்கு இணையான 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 4.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால், 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

MOST READ: இந்தியாவில் கார் ஹோம் டெலிவிரி திட்டத்தை கையில் எடுத்தது பென்ஸ்!

மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரில் பவர்ஃபுல் டீசல் எஞ்சின் மீண்டும் அறிமுகம்!

கடந்த 1ந் தேதி முதல் புதிய பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தற்போது பிஎஸ்6 தரத்திற்கு இணையாக 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுவிட்டது. இந்த 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் E 350d என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரில் பவர்ஃபுல் டீசல் எஞ்சின் மீண்டும் அறிமுகம்!

இந்த மாடலில் இருக்கும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் 6 சிலிண்டர்கள் துணையுடன் அதிகபட்சமாக 286 எச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. பழைய 3.0 லிட்டர் வி6 டீசல் எஞ்சினைவிட இந்த பிஎஸ்6 தரத்திற்கு இணையான 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிக சக்தியை வெளிப்படுத்தும் விதத்தில் வந்திருப்பது வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக இருக்கும்.

MOST READ: இந்தியாவின் எதிர்கால பைக் யமஹா டபிள்யூஆர் 155ஆர்... இதன் அதிகப்பட்ச வேகம் என்ன தெரியுமா..?

மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரில் பவர்ஃபுல் டீசல் எஞ்சின் மீண்டும் அறிமுகம்!

இந்த எஞ்சினுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. எஞ்சின் சக்தி பின்சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது. இந்த மாடல் 0 - 100 கிமீ வேகத்தை 5.7 வினாடிகளில் எட்டிவிடும்.

மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரில் பவர்ஃபுல் டீசல் எஞ்சின் மீண்டும் அறிமுகம்!

இந்த 3.0 லிட்டர் டீசல் மாடலின் மற்றொரு முக்கிய அம்சமாக ஏர் சஸ்பென்ஷன் சிஸ்டம் இடம்பெற்றிருப்பதை குறிப்பிடலாம். இது நிச்சயமாக மிக சொகுசான பயண அனுபவத்தை ஒவ்வொரு முறையும் வழங்கும்.

MOST READ: ரூ.10 லட்சத்தில் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்குகிறது எம்ஜி மோட்டார்!

மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரில் பவர்ஃபுல் டீசல் எஞ்சின் மீண்டும் அறிமுகம்!

இந்த மாடலில் பெரிய அளவிலான 18 அங்குல அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இதன்மூலமாக, பிற வேரியண்ட்டுகளில் இருந்து இது எளிதாக வேறுபடுத்தப்படுகிறது. அதேபோன்று, உட்புறத்தில் விசேஷமான கருப்பு வண்ண இன்டீரியர் தீம் மற்றும் மர அலங்கார வேலைப்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரில் பவர்ஃபுல் டீசல் எஞ்சின் மீண்டும் அறிமுகம்!

இந்த காரில் முன் இருக்கைகளுக்கான மெமரி வசதி, முன், பின் வரிசை இரு்கைகளில் தனித்தனியாக வயர்லெஸ் போன் சார்ஜர், 360 டிகிரி கேமரா, கனெக்டெட் கார் தொழில்நுட்பம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

MOST READ: அதிகாரிகள் அனுமதி அளித்தனர்... தொழிற்சாலைகளை திறக்கும் பஜாஜ் ஆட்டோ...

மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரில் பவர்ஃபுல் டீசல் எஞ்சின் மீண்டும் அறிமுகம்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் இ350டீ என்ற இந்த புதிய டீசல் மாடலுக்கு ரூ. 75.29 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பிஎம்டபிள்யூ 530டீ மற்றும் 630டீ ஜிடி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். ஆடி ஏ6 கார் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமே கிடைத்தாலும், போட்டியை கொடுக்கும்.

Most Read Articles

English summary
Mercedes-Benz has launched the E 350d variant of the E-Class with BS6 compliant emission standards in India.
Story first published: Friday, April 24, 2020, 14:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X