கடைசி ஆசை... விலை உயர்ந்த பென்ஸ் காரில் வைத்து அடக்கம் செய்யப்பட்ட கார் காதலர்

அரசியல்வாதியின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் ஊர் மக்கள் ஒன்றுகூடி விலையுயர்ந்த பென்ஸ் காரை, இறந்த அரசியல்வாதியின் உடலுடன் சேர்த்து நல்லடக்கம் செய்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

அரசியல்வாதியின் கடைசி ஆசை... விலையுயர்ந்த பென்ஸ் காரை ஒன்று கூடி புதைத்த ஊர் மக்கள்..

சர்ச்சைகளுக்கும், வித்தியாசங்களுக்கும் பெயர்போனவர்கள் அரசியல்வாதிகள். இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் இதேநிலைதான் காணப்படுகின்றது. அந்தவகையில், இங்கு ஓர் அரசியல் கட்சி தலைவரின் இறுதி ஊர்வலம் மிகவும் வித்தியாசமான முறையில் அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தெற்கு ஆப்பிரிக்காவில் அரங்கேறியிருப்பதாக தகல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல்வாதியின் கடைசி ஆசை... விலையுயர்ந்த பென்ஸ் காரை ஒன்று கூடி புதைத்த ஊர் மக்கள்..

தென் ஆப்பிரிக்காவின் மிகவும் பிரபலமான அரசியல்வாதிகளில் ஒருவர் ஷெக்டே பப்டன் பிட்சோ (Tshekede Bufton Pitso). இவர் இம்மாதத்தின் இறுதியில் வயது மூப்பின் காரணமாக காலமானார்.

இவரின் இறுதிச் சடங்குகுறித்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. காரணம், அரசியல்வாதியின் இறுதி ஊர்வலத்தில் விலையுயர்ந்த பென்ஸ் கார், அவரின் இறந்த சடலத்துடன் சேர்த்தே புதைக்கப்பட்டுள்ளது.

MOST READ: அவர்களை ரொம்ப கஷ்டப்படுத்தாதீங்க... உங்கள் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் இந்த கார்கள்தான் பெஸ்ட்...

அரசியல்வாதியின் கடைசி ஆசை... விலையுயர்ந்த பென்ஸ் காரை ஒன்று கூடி புதைத்த ஊர் மக்கள்..

இதனை, அந்த அரசியல் இறப்பதற்கு முன்பாகவே தனது கடைசி ஆசையாக இதை நிறைவேற்றுங்கள் என அவரது தொண்டர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, இம்மாதம் ஆரம்பத்தில் நடைபெற்ற ஷெக்டே பப்டன் பிட்சோவின் உறுதி ஊர்வலத்தில் அவரது காருடனயே நல்லடக்கம் செய்யப்பட்டார்.

அரசியல்வாதியின் கடைசி ஆசை... விலையுயர்ந்த பென்ஸ் காரை ஒன்று கூடி புதைத்த ஊர் மக்கள்..

இவர் ஓர் அரசியல்வாதி மட்டுமல்ல மிக சிறந்த தொழிலதிபராகவும் இருந்து வந்துள்ளார். இதனாலயே அவரிடத்தில் பல விலையுயர்ந்த சொகுசு கார்கள் இருந்திருக்கின்றன. ஆனால், அவற்றைக் காட்டிலும் மெர்சிடிஸ் பென்ஸ் இ500 காரைதான் அவருக்கு மிகவும் பிடிக்கும் என கூறப்படுகின்றது.

MOST READ: மேகி நூடுல்ஸைபோல் விரைவாக தயாராகும் மின்சார கார்.. 5 நிமிஷம் போதும் 50 கிமீ ஊர் சுற்றலாம்..

அரசியல்வாதியின் கடைசி ஆசை... விலையுயர்ந்த பென்ஸ் காரை ஒன்று கூடி புதைத்த ஊர் மக்கள்..

இதனாலயே, இறுதி ஊர்வலத்தையும் அந்த காரில் வைத்தே அவரது உறவினர்கள் செய்திருக்கின்றனர். தொடர்ந்து, அவரது உடலுடன் சேர்த்து அந்த காரையும் தகனம் செய்துள்ளனர்.

அதேசமயம், இவரிடத்தில் இருந்த அனைத்து விலையுயர்ந்த கார்களையும் நாட்டின் பெரும் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக, முன்னரே அவர் விற்றுவிட்டதாக கூறப்படுகின்றது.

அரசியல்வாதியின் கடைசி ஆசை... விலையுயர்ந்த பென்ஸ் காரை ஒன்று கூடி புதைத்த ஊர் மக்கள்..

எனவே, அவரிடத்தில் கடைசியாக மெர்சிடிஸ் பென்ஸ் இ500 கார் மட்டுமே இருந்திருக்கின்றது. ஆனால், கராஜில் எஞ்ஜியிருந்த இந்த விலையுயர்ந்த காரையும் ஷெக்டே பப்டன் பிட்சோ கடைசி ஆசையின்படி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதி வாழ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

MOST READ: ஆம்புலன்ஸ் பற்றாக்குறை: பைக்குகளையே உயிர்காக்கும் வாகனமாக மாற்றிய ஹீரோ... ரியல் ஹீரோ சார் நீங்க..

அரசியல்வாதியின் கடைசி ஆசை... விலையுயர்ந்த பென்ஸ் காரை ஒன்று கூடி புதைத்த ஊர் மக்கள்..

பொதுவாக வெளிநாடுகளில் மரப் பெட்டிகள் மூலமாகவே உடலை நல்லடக்கம் செய்வார்கள். காரின் மூலம் நல்லடக்கம் செய்வதும் அவ்வப்போது வெளிநாடுகளில் அரங்கேறிய வண்ணம் இருக்கின்றது. அந்தவகையில், முந்தைய கால சம்பவங்களைப் போலவே இதுவும் தற்போது சர்ச்சையில் சிக்கியில் இருக்கின்றது.

அரசியல்வாதியின் கடைசி ஆசை... விலையுயர்ந்த பென்ஸ் காரை ஒன்று கூடி புதைத்த ஊர் மக்கள்..

ஷெக்டே பப்டன் பிட்சோ, இந்த காரை கடந்த 1990ம் ஆண்டில் வாங்கியதாகக் கூறப்படுகின்றது. இதனை செகண்ட் ஹேண்டில் வாங்கியது குறிப்பிடத்தகுந்தது. அப்போதுமுதல் இந்த காரே அவரது பிரியமான காராக மாறியுள்ளது. எனவே, எங்கு சென்றாலும் இந்த காரிலேயே அவர் வலம் வந்த வண்ணம் இருந்துள்ளார். மேலும், வீட்டில் இருக்கும் இந்த காரில் அமர்ந்தபடி பாடலை ரசிப்பது உள்ளிட்ட செயல்பாடுகளில் அவர் ஈடுபட்டுள்ளார். அந்த அளவிற்கு பென்ஸ் இ500 கார்மீது அளவுகடந்த பிரியத்தை வைத்துள்ளார்.

MOST READ: ஆக்டிவா ஸ்கூட்டருக்குள் புகுந்த நாக பாம்பு... ஊரடங்கால் கிளம்பும் புதிய பிரச்னை...

அரசியல்வாதியின் கடைசி ஆசை... விலையுயர்ந்த பென்ஸ் காரை ஒன்று கூடி புதைத்த ஊர் மக்கள்..

இதனாலயே அவரது விருப்பத்தின்படி ஊர் மக்கள் ஒன்றுகூடி அந்த காரை அவருடன் சேர்த்து நல்லடக்கம் செய்துள்ளனர். தற்போது, தெற்கு ஆப்பிரிக்காவிலும் கொரோனா வைரசின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கின்றது. எனவே, ஷெக்டே பப்டன் பிட்சோ நல்லடக்க ஊர்வலத்தில் குறைந்த மக்களே கலந்து கொண்டனர். பெரும்பாலும் அவரது உறவினர்கள் மட்டுமே இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.

முன்னதாக இதேபோன்று காருடன் நல்லடக்கம் செய்யப்பட்ட ஏறக்குறைய 5 வருடங்களுக்கு முன்பு நைஜீரியாவில் அரங்கேறியிருந்தது. இங்கு அந்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், அவரது தாயாருக்கு மரியாதைச் செலுத்தும் விதமாக விலையுயர்ந்த ஹம்மர் எஸ்யூவி காருடன் நல்லடக்கம் செய்திருந்தார். இதேபோன்று மற்றுமொரு நாட்டிலும் தனது இறந்த தாயை பிஎம்டபிள்யூ எக்ஸ்5 சொகுசு காரில் வைத்து தொழிலதிபர் ஒருவர் அடக்கம் செய்திருந்தார். இவ்வாறு, உலகின் பல மூலைகளில் இதுபோன்று காருடன் வைத்து நல்லடக்கம் செய்யும் சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Image Courtesy: Facebook

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mercedes Benz E500 Buried With Politician. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more