எலெக்ட்ரிக் கார் பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது மெர்சிடிஸ் பென்ஸ்!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் பிராண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

எலெக்ட்ரிக் கார் பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது மெர்சிடிஸ் பென்ஸ்!

இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் விற்பனையில் நம்பர்-1 இடத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பும் அதிகரித்து வருகிறது. இதனை மனதில் வைத்து, எலெக்ட்ரிக் கார் சந்தையிலும் முன்னிலை பெறுவதற்கான முயற்சிகளை கையில் எடுத்துள்ளது.

எலெக்ட்ரிக் கார் பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது மெர்சிடிஸ் பென்ஸ்!

அதன்படி, எலெக்ட்ரிக் கார்களுக்கான தனது EQ என்ற பிராண்டை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது மெர்சிடிஸ் பென்ஸ். தனது EQ எலெக்ட்ரிக் பிராண்டின் கீழ் பல்வேறு மாடல்களை கொண்டு வர இருக்கிறது.

முதல்மாடலாக EQC எலெக்ட்ரிக் சொகுசு கார் வரும் ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

எலெக்ட்ரிக் கார் பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது மெர்சிடிஸ் பென்ஸ்!

அதாவது, ஆடி உள்ளிட்ட நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்திருந்தாலும், எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் இல்லை.

எலெக்ட்ரிக் கார் பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது மெர்சிடிஸ் பென்ஸ்!

இந்தியாவில் EQ பிராண்டு அறிமுகம் செய்யப்பட்டிருப்பது குறித்து அந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குனர் மார்ட்டின் ஷ்வென்க் குறிப்பிடுகையில்,"ஆட்டோமொபைல் கண்டுபிடிப்பு நிறுவனம் என்ற பெருமையை பெற்றிருக்கும் எங்களது நிறுவனம் இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் முன்னிலை வகிக்கிறது.

எலெக்ட்ரிக் கார் பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது மெர்சிடிஸ் பென்ஸ்!

இந்தியாவில் EQ பிராண்டின் மூலமாக மின்சார வாகன போக்குவரத்துத் துறையிலும் முதன்மை பெறுவதற்கான திட்டமிட்டுள்ளோம். மேலும், இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான முதல் பிராண்டாகவும் EQ இருக்கும்," என்று தெரிவித்துள்ளார்.

எலெக்ட்ரிக் கார் பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது மெர்சிடிஸ் பென்ஸ்!

கடந்த 2016ம் ஆண்டு பாரிஸ் மோட்டார் ஷோவில் எலெக்ட்ரிக் கார்களுக்காக EQ என்ற பிரத்யேக பிராண்டை மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகப்படுத்தியது. இதன் கீழ் பல்வேறு எலெக்ட்ரிக் கார் தொழில்நுட்பங்களையும், சிறந்த நுட்பங்களையும் உருவாக்கி வருகிறது.

எலெக்ட்ரிக் கார் பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது மெர்சிடிஸ் பென்ஸ்!

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி அடிப்படையிலான மின்சார மாடலாக EQC இருக்கும். இந்த காரில் இருக்கும் மின் மோட்டார்கள் 402 பிஎச்பி பவரையும், 760 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த காரில் 80 kWh பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும். இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 5.1 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 180 கிமீ வேகம் வரை செல்லும்.

எலெக்ட்ரிக் கார் பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது மெர்சிடிஸ் பென்ஸ்!

மெர்சிடிஸ் பென்ஸ் EQ பிராண்டில் முதல் மாடலாக EQC வர இருக்கும் நிலையில், அடுத்ததாக G க்ளாஸ் அடிப்படையிலான எலெக்ட்ரிக் சொகுசு எஸ்யூவி மற்றும் வி க்ளாஸ் சொகுசு எம்பிவி கார் அடிப்படையிலான EQV எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

எலெக்ட்ரிக் கார் பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது மெர்சிடிஸ் பென்ஸ்!

இதைத்தொடர்ந்து, ஏ க்ளாஸ் காரின் அடிப்படையிலான EQA மற்றும் பி க்ளாஸ் கார் அடிப்படையிலான EQB ஆகிய விலை குறைவான எலெக்ட்ரிக் கார் மாடல்களையும் களமிறக்க உள்ளது.

எலெக்ட்ரிக் கார் பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது மெர்சிடிஸ் பென்ஸ்!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மிக பிரபலமான எஸ் க்ளாஸ் அடிப்படையிலான EQS மற்றும் இ க்ளாஸ் காரின் அடிப்படையிலான EQE ஆகிய கார் மாடலகளையும் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

எலெக்ட்ரிக் கார் பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது மெர்சிடிஸ் பென்ஸ்!

இதன்மூலமாக, இந்தியாவின் மின்சார கார் சந்தையில் பல எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கி தனது சந்தையை மிக வலுவானதாக மாற்ற திட்டமிட்டுள்ளது.

Most Read Articles

English summary
German luxury car maker, Mercedes Benz has introduced EQ electric car brand in India.
Story first published: Wednesday, January 15, 2020, 9:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X