இந்தியாவின் முதல் சொகுசு எலெக்ட்ரிக் கார்... விற்பனைக்கு வந்தது மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் EQC சொகுசு எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவின் மின்சார சொகுசு கார் மார்க்கெட்டில் புதிய அத்யாயத்தை எழுதும் வகையில், முதல் மாடலாக வந்திருக்கும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQC காரின் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியாவின் முதல் சொகுசு எலெக்ட்ரிக் கார்...விற்பனைக்கு வந்தது மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் EQ என்ற மின்சார கார்களுக்கான பிரக்யேக பிராண்டில் இந்தியாவுக்கான முதல் கார் மாடலாக EQC களமிறக்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் நிறுவனத்தின் பிரபலமான GLC (X253) எஸ்யூவி அடிப்படையிலான கட்டமைப்புக் கொள்கைகளை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் சொகுசு எலெக்ட்ரிக் கார்...விற்பனைக்கு வந்தது மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி!

ஆனால், ஜிஎல்சி காரிலிருந்து முற்றிலும் வேறுபட்ட டிசைன் அம்சங்களுடன் மிக மிக கவர்ச்சியாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி காரின் முகப்பை அலங்கரிக்கும் வகையில் அசத்தலான க்ரில் அமைப்பு, பானட்டையும், க்ரில் அமைப்புக்கும் மேலாக கொடுக்கப்பட்டுள்ள எல்இடி லைட், அலாய் வீல்கள், டெயில் லைட்டுகள் ஆகியவை வசீகரத்தை கூட்டுகின்றன.

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் காரில் 12.3 அங்குலத்திலான இரண்டு திரைகள் டேஷ்போர்டை ஆக்கிரமித்துள்ளன. ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும் மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டராகவும் இடம்பெற்றுள்ளன.

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் 85kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, இரண்டு மின் மோட்டார்கள் இணைந்து அதிகபட்சமாக 408 பிஎச்பி பவரையும், 765 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரின் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு மூன்று சார்ஜர்கள் ஆப்ஷன் உள்ளன. இதில், 2.4kW சார்ஜர் மூலமாக 21 மணிநேரத்திலும், 7.5kW வீட்டு சார்ஜர் மூலமாக பேட்டரியை சார்ஜ் செய்ய 10 மணிநேரம் பிடிக்கும். 50kW டிசி சார்ஜர் மூலமாக சார்ஜர் பயன்படுத்தினால் 90 நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் செய்யலாம்.

இந்தியாவின் முதல் சொகுசு எலெக்ட்ரிக் கார்...விற்பனைக்கு வந்தது மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி!

முதல்கட்டமாக புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் கார் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி, புனே ஆகிய நகரங்களில் விற்பனைக்கு கிடைக்கும். நாடுமுழுவதும் 48 நகரங்களில் 100க்கும் அதிகமான சார்ஜ் ஏற்றும் நிலையங்களை நிறுவி உள்ளதாக மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் வீட்டில் சார்ஜரை கட்டணமில்லாமல் வீட்டில் சார்ஜரை பொருத்தி தரப்படும் என்று பென்ஸ் தெரிவித்துள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

ரூ.99.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ.க்யூ.சி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வந்துள்ளது. முதல் 50 யூனிட்டுகளுக்கு மட்டுமே இந்த விலை பொருந்தும். புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் காருக்கு 5 ஆண்டுகளுக்கான வாரண்டி, சாலை அவசர உதவித் திட்டம் மற்றும் பராமரிப்புத் திட்டங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த புதிய சொகுசு எலெக்ட்ரிக் காரை மெர்சிடிஸ் இணையதளம் மூலமாகவும், டீலர்களிலும் புக்கிங் செய்து கொள்ளலாம். புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஜாகுவார் ஐ-பேஸ், ஆடி இ-ட்ரான் ஆகிய கார் மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
English summary
Mercedes Benz EQC Electric Luxury Car Launched In India Range, Features, Price Details.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X