41 வருடங்களாக விற்பனையில் இருக்கும் விலைமிக்க பென்ஸ் எஸ்யூவி கார்- ஆனால் தயாரிக்கப்பட்டதோ வெறும் 4 லட்சம்

ஜி-க்ளாஸ் எஸ்யூவி மாடலின் தயாரிப்பில் 4 லட்ச யூனிட்களை மெர்சிடிஸ்-பென்ஸ் கடந்துள்ளது. இந்த பென்ஸ் காரை பற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

41 வருடங்களாக விற்பனையில் இருக்கும் விலைமிக்க பென்ஸ் எஸ்யூவி கார்- ஆனால் தயாரிக்கப்பட்டதோ வெறும் 4 லட்சம்

மெர்சிடிஸ் நிறுவனம் உலகளவில் விற்பனை செய்துவரும் தயாரிப்புகளுள் ஒன்று ஜி-க்ளாஸ் சர்பஸ்ஸேஸ். இந்திய சந்தையிலும் இந்த பென்ஸ் மாடல் விற்பனையில் உள்ளது.

41 வருடங்களாக விற்பனையில் இருக்கும் விலைமிக்க பென்ஸ் எஸ்யூவி கார்- ஆனால் தயாரிக்கப்பட்டதோ வெறும் 4 லட்சம்

முதன்முதலாக 1979ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஜி-க்ளாஸ் தற்சமயம் ஆஸ்திரியாவில் உள்ள நிறுவனத்தின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த கார் மாடலின் தயாரிப்பில் 3 லட்சம் என்ற மைக்கல்லை 2017ல் மெர்சிடிஸ் அடைந்திருந்தது.

41 வருடங்களாக விற்பனையில் இருக்கும் விலைமிக்க பென்ஸ் எஸ்யூவி கார்- ஆனால் தயாரிக்கப்பட்டதோ வெறும் 4 லட்சம்

அதனை தொடர்ந்து தற்போது 4 லட்சத்தை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் இந்த காரின் தயாரிப்பில் இந்த நிறுவனம் கடந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக ஜி400டி என்ற ஸ்பெஷல் வேரியண்ட் விற்பனைக்கு கொண்டுவர மெர்சிடிஸ் திட்டமிட்டுள்ளது.

41 வருடங்களாக விற்பனையில் இருக்கும் விலைமிக்க பென்ஸ் எஸ்யூவி கார்- ஆனால் தயாரிக்கப்பட்டதோ வெறும் 4 லட்சம்

வழக்கமான ஜி-க்ளாஸ் சர்ப்ஸ்ஸேஸ் மாடலில் சற்று வசதிகளை சற்று அப்கிரேடாகவே பெற்றுவரும் என கூறப்படும் இந்த ஸ்பெஷல் வேரியண்ட் வெறும் 20 மாதிரிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளது.

41 வருடங்களாக விற்பனையில் இருக்கும் விலைமிக்க பென்ஸ் எஸ்யூவி கார்- ஆனால் தயாரிக்கப்பட்டதோ வெறும் 4 லட்சம்

இந்தியாவில் மெர்சிடிஸ் ஜி-க்ளாஸ் ஜி63 ஏஎம்ஜி மற்றும் ஜி350டி என்ற இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.1.55 கோடி மற்றும் ரூ.2.31 கோடி ஆகும். இந்த பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்கள் இரண்டிலும் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் தான் இணைக்கப்படுகிறது.

41 வருடங்களாக விற்பனையில் இருக்கும் விலைமிக்க பென்ஸ் எஸ்யூவி கார்- ஆனால் தயாரிக்கப்பட்டதோ வெறும் 4 லட்சம்

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் ஜி-க்ளாஸின் எலக்ட்ரிக் வெர்சனிலும் ஈடுப்பட்டு வருகிறது. இக்யூ துணை பிராண்டின் மூலம் வெளிவரும் எலக்ட்ரிக் ஜி-க்ளாஸின் கான்செப்ட் மாடல் வெளிவருவதற்கே இன்னும் சில வருடங்கள் ஆகுமாம். இதனால் விற்பனை மாடலில் அறிமுகம் நிச்சயம் 2025க்கு மேல் தான் இருக்கும்.

Most Read Articles

English summary
Mercedes-Benz G-Class surpasses 4 lakh units production milestone
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X