சந்தைக்கு வந்த இரு புதிய பென்ஸ் கார்கள்... ஜிஎல்இ ரேஞ்ச்சில் புதியதாக பெட்ரோல் வேரியண்ட்...

ஜிஎல்இ வரிசை கார்களில் புதியதாக பெட்ரோல் வேரியண்டை சேர்க்கும் விதமாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய ஜிஎல்இ 450 மாடலை ஜிஎல்இ 400டி மாடலுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. எக்ஸ்ஷோரூமில் முறையே ரூ.88.80 மற்றும் ரூ.89.90 லட்சங்களை விலையாக பெற்றுள்ள இந்த இரு புதிய பென்ஸ் கார்களை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

சந்தைக்கு வந்த இரு புதிய பென்ஸ் கார்கள்... ஜிஎல்இ ரேஞ்ச்சில் புதியதாக பெட்ரோல் வேரியண்ட்...

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புத்தம் புதிய ஜிஎல்இ மாடலை கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது பெட்ரோல் வேரியண்ட் உள்பட இந்த இரு புதிய மாடல்கள் இந்திய சந்தைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இதனால் இனி இந்நிறுவனத்தில் இருந்து ஜிஎல்இ ரேஞ்சில் ஜிஎல்இ 300டி (ரூ.73.70 லட்சம்), ஜிஎல்இ 450 (ரூ.88.80 லட்சம்), ஜிஎல்இ 400டி (ரூ.89.90 லட்சம்) மற்றும் ஜிஎல்இ 400டி ஹிப்ஹாப் எடிசன் (ரூ.1.25 கோடி) உள்ளிட்டவை விற்பனை செய்யப்படவுள்ளன. புதிய 400டி மாடலில் மிகவும் கவனிக்கத்தக்க விஷயமே அதன் விலை தான்.

சந்தைக்கு வந்த இரு புதிய பென்ஸ் கார்கள்... ஜிஎல்இ ரேஞ்ச்சில் புதியதாக பெட்ரோல் வேரியண்ட்...

ஏனெனில் புதிய 400டி மாடல் அதன் ஹிப்பாப் வெர்சனை காட்டிலும் சுமார் ரூ.36 லட்சம் வரையில் மலிவானதாகும். இதற்கு காரணம் ஜிஎல்இ 400டி ஹிப்பாப் எடிசன் சிபியூ முறையில் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. அதுவே புதிய 400டி மாடல் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

சந்தைக்கு வந்த இரு புதிய பென்ஸ் கார்கள்... ஜிஎல்இ ரேஞ்ச்சில் புதியதாக பெட்ரோல் வேரியண்ட்...

இது மட்டுமின்றி ஹிப்பாப் எடிசனில் மெர்சிடிஸின் இ-ஆக்டிவ் பாடி கண்ட்ரோல் சஸ்பென்ஷன், 13-ஸ்பீக்கர், 590 வாட்ஸ் பர்மிஸ்டர் சவுண்ட் சிஸ்டம், ஹெட்-அப் திரை மற்றும் 9 காற்றுப்பைகள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. அதுவே புதிய 400டி மாடலில் 7 காற்றுப்பைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதுவும் இந்த அதிகப்படியான விலை வேறுபாட்டிற்கு காரணம்.

சந்தைக்கு வந்த இரு புதிய பென்ஸ் கார்கள்... ஜிஎல்இ ரேஞ்ச்சில் புதியதாக பெட்ரோல் வேரியண்ட்...

இருப்பினும் மல்டி-பீம் எல்இடி ஹெட்லைட்கள், 20-இன்ச் அலாய் சக்கரங்கள், பவர் அட்ஜெஸ்டபிள் பின்புற இருக்கைகள், முன்புற இருக்கைகளுக்கு மெமரி தொகுப்பு, 4-நிலை க்ளைமேட் கண்ட்ரோல், இன்போடெயின்மெண்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்டேஷனிற்கு லேட்டஸ்ட் எம்பியுஎக்ஸ், ஆக்டிவ் ஏர் சஸ்பென்ஷன், பனோராமிக் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற வசதிகள் இரண்டு மாடல்களிலும் உள்ளன.

சந்தைக்கு வந்த இரு புதிய பென்ஸ் கார்கள்... ஜிஎல்இ ரேஞ்ச்சில் புதியதாக பெட்ரோல் வேரியண்ட்...

பயணிகளின் பாதுகாப்பிற்கு ஹேண்ட்ஸ்-ப்ரீ பார்க்கிங் செயல்பாட்டுடன் 360-டிகிரி பார்க்கிங் கேமிரா, ப்ளைண்ட் ஸ்பாட் மானிடரிங் மற்றும் ஆக்டிவ் ப்ரேக் அசிஸ்ட் உள்ளிட்டவையும் ஹிப்பாப் எடிசனில் இருந்து புதிய 400டி மாடலுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு மாடல்களிலும் இயக்க ஆற்றலை வழங்குவதற்கு ஒரே 3.0 லிட்டர் 6-சிலிண்டர் டீசல் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 330 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

சந்தைக்கு வந்த இரு புதிய பென்ஸ் கார்கள்... ஜிஎல்இ ரேஞ்ச்சில் புதியதாக பெட்ரோல் வேரியண்ட்...

மெர்சிடிஸின் 4மேட்டிக் ஆல்-வீல் ட்ரைவ் சிஸ்டத்துடன் உள்ள புதிய 400டி மாடல் 0-விலிருந்து 100kmph வேகத்தை வெறும் 5.7 வினாடிகளில் அடைந்துவிடும். புதிய ஜிஎல்இ 450 மாடலை பொறுத்தவரையில் மெர்சிடிஸ் நிறுவனம் ஜிஎல்இ வரிசை கார்களில் முதன்முறையாக பெட்ரோல் வேரியண்ட்டை கொண்டுவரும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்ட மாடலாகும்.

சந்தைக்கு வந்த இரு புதிய பென்ஸ் கார்கள்... ஜிஎல்இ ரேஞ்ச்சில் புதியதாக பெட்ரோல் வேரியண்ட்...

இந்த மாடலில் 367 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 3.0 லிட்டர், 6-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின், 48 வோல்ட் மில்ட்-ஹைப்ரீட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக கூடுதலாக 22 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை பெற முடியும்.

சந்தைக்கு வந்த இரு புதிய பென்ஸ் கார்கள்... ஜிஎல்இ ரேஞ்ச்சில் புதியதாக பெட்ரோல் வேரியண்ட்...

ஆற்றலை இந்த என்ஜின் ஆனது 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாக அனைத்து சக்கரங்களுக்கும் வழங்கும். மெர்சிடிஸின் இந்த புதிய பெட்ரோல் வேரியண்ட்டும் 0-விலிருந்து 100kmph என்ற வேகத்தை 5.7 வினாடிகளில் தான் அடையும். தொழிற்நுட்ப வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை புதிய 450 மாடல் 400டி மாடலுடன் ஒத்து பெற்றுள்ளது.

சந்தைக்கு வந்த இரு புதிய பென்ஸ் கார்கள்... ஜிஎல்இ ரேஞ்ச்சில் புதியதாக பெட்ரோல் வேரியண்ட்...

இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ மாடலுக்கு போட்டியாக பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (ரூ.82.90- 84.40 லட்சம்), ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (ரூ.87.02 லட்சம்- ரூ.1.01 கோடி), டிஸ்கவரி (ரூ.75.59- 87.99 லட்சம்) மற்றும் வால்வோ எக்ஸ்சி90 (ரூ.80.90 லட்சம்- ரூ.1.31 கோடி) உள்ளிட்ட மாடல்கள் உள்ளன.

இதில் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளிலும், ரேஞ்ச் ரோவரின் இரு கார்களும் பெட்ரோல் வேரியண்ட்டில் மட்டும், வால்வோ எக்ஸ்சி90 பெட்ரோல்-எலக்ட்ரிக் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளிலும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

Most Read Articles
English summary
Mercedes-Benz GLE 450 launched at Rs 88.80 lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X