விலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃபை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...

ஏற்கனவே லக்சூரி அம்சங்களின் மன்னனாக காட்சியளிக்கும் பென்ஸ் எஸ் கிளாஸ் காரை இளைஞர் ஒருவர் கூடுதல் ஆடம்பர அம்சத்திற்கு மாடிஃபிகேஷன் மூலம் அப்கிரேட் செய்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

விலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃபை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் என்ற வார்த்தையை உச்சரிக்கும்போது முதலில் நம்மில் பலருக்கு நினைவுக்கு வருவது அக்காரின் ஆடம்பரம் மற்றும் சொகுசு வசதிகள் மட்டுமே ஆகும். இந்தியாவில் ஜெர்மன் உற்பத்தியாளரால் விற்கப்படும் மிகவும் ஆடம்பரமான கார்களில் இதுவும் ஒன்று.

விலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃபை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...

ஆனால், இந்த காரில் ஒரு போதுமான ஆடம்பர வசதி இல்லை என நினைக்கின்றனர். இதுபோன்று நினைப்பவர்களுக்கு, வழக்கமான எஸ்-கிளாஸை விட கூடுதல் வசதியை வழங்கும் மாடலாக மேபேக் பதிப்பு உள்ளது.

விலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃபை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...

எனவேதான் அதிக லக்சூரி அம்சத்தை விரும்பும் தொழிலதிபர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் மெர்சிடிஸ் பென்ஸின் மேபேக் பதிப்பை அதிகம் விரும்புகின்றனர்.

அந்தவகையில், குறிப்பிட்ட சில அம்ச மாறுபாட்டை மேற்கொண்டு இளைஞர் ஒருவர் வழக்கமான எஸ்500 மாடலை மேபேக் வெர்ஷனாக மாற்றியமைத்துள்ளார்.

விலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃபை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...

இதற்காக, பென்ஸ் எஸ்500 மாடலின் பல ஒரிஜினல் பாகங்கள் நீக்கப்பட்டு கூடுதல் சொகுசு வசதிகளை வழங்குகின்ற வகையிலான வேறு பாகங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன.

இளைஞரின் இந்த நடவடிக்கையால் நாட்டின் முதல் மாறுபாட்டைப் பெற்ற மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் 500 என்ற பட்டத்தை அக்கார் சூடியிருக்கின்றது. இதுகுறித்த வீடியோவைடர்போ எக்ஸ்ட்ரீம் என்னும் யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.

விலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃபை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...

இந்த வீடியோவில் காரின் சொகுசு அம்சம் மாற்றத்திற்கு என்னென்வெல்லாம் செய்யப்பட்டுள்ளது என்பதனை விளக்குகின்ற வகையிலான காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.

தொடர்ந்து, மாடிஃபைக்கு பின்னர் அக்கார் இயக்குவதற்கு எப்படி இருக்கின்றது என்பதையும் அவர்கள் அந்த வீடியோ வாயிலாக வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

அதாவது, வழக்கமான மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்500 கார், மாடிஃபிகேஷன் முன் மற்றும் பின் ஆகியவற்றில் எம்மாதிரியான சொகுசு அனுபவங்களை வெளிப்படுத்துகின்றது என்பதனை விளக்கும் வகையில் அந்த வீடியோ உள்ளது.

விலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃபை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...

இந்த வீடியோவின்படி, ஏற்கனவே சொகுசு கார்களின் தலைவனாக காணப்பட்ட எஸ் 500 கார் தற்போது புது பிறவி எடுத்த தலைவனாக மாறியிருக்கின்றது. இதற்கேற்ப காரின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் பல்வேறு மாற்றங்களை அது பெற்றிருக்கின்றது. வெளிப்புறத்தில் பம்பர் மற்றும் கிரில் உள்ளிட்டவை மாற்றப்பட்டிருக்கின்றன. அவை, மேபேக் தொற்றத்தை வழங்கும் வகையில் இருக்கின்றது.

விலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃபை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...

இந்த தோற்றத்தை வழங்குவதில் இவைகளின் பங்கு மிகவும் பெரிதாக இருக்கின்றது. இத்துடன், ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி மின் விளக்கு உள்ளிட்டவையும் அப்கிரேட் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த அப்கிரேஷன் காரின் முன் பக்கம் மட்டுமின்றி பின் பக்கத்திலும் செய்யப்பட்டிருக்கின்றது.

விலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃபை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...

இதுபோன்ற செய்கைகளினாலயே எஸ்500 மாடல் மேபேக் தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது.

அதேசமயம், காரின் வெளிப்புறத்தைக் கூடுதல் கவர்ச்சியானதாக காட்ட பழைய அலாய் வீல்கள் நீக்கப்பட்டு புதிதாக மேபேக் கார்களில் இருப்பதைப் போன்ற 20 இன்ச் அலாய் வீல் நிறுவப்பட்டிருக்கின்றது.

விலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃபை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...

அது அக்காருக்கு கண் கவர் தோற்றத்தை வழங்கும் வகையில் உள்ளது. இவை ஒரிஜினல் என்பதை வெளிப்படுத்தும் வகையில் மெர்சிடிஸ் பென்ஸ் லோகோக்களை ஏந்தியிருக்கின்றன.

இதைத்தொடர்ந்து, காரின் இன்டீரியரில் கூடுதல் லக்சூரி அம்சத்தைச் சேர்க்கும் விதமாக மேலும் ஏசி வெண்டுகள் புதிதாக நிறுவப்பட்டிருக்கின்றன.

விலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃபை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...

இத்துடன், ஆம்பிசியண்ட் மின் விளக்கு, ரொட்டேட்டிங் ஸ்பீக்கர் உள்ளிட்ட ஒரு சிலவும் அதில் அப்கிரேட் செய்யப்பட்டிருக்கின்றது. இவற்றை மற்ற அனைத்தும் அப்படியே விடப்பட்டிருக்கின்றன.

வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் மாற்றத்தைச் செய்ததைப் போலவே எஞ்ஜின் விஷயத்திலும் எஸ்500 காரின் உரிமையாளர் லேசான மாற்றங்களை வழங்கியிருக்கின்றனர்.

விலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃபை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...

இதனால், முன்பை விட கூடுதல் திறனை வெளிப்படுத்தும் ஓர் காராக அது மாறியிருக்கின்றது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் எஸ்500 மாடலில் 4,663 சிசி திறனை வெளிப்படுத்தும் வி8 எஞ்ஜினைப் பயன்படுத்துகின்றது. இது அதிகபட்சமாகக 453 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும்.

விலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃபை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...

அந்த திறனானது மணிக்கு 160 கிமீ வேகத்தை தொட உதவும். மேலும், ஸ்போர்ட்ஸ் மோடில் வைத்து காரை இயக்கும்போது பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை எட்டவும் அது உதவும்.

Most Read Articles
English summary
Mercedes Benz S Class Converted To Maybach. Read In Tamil.
Story first published: Monday, June 1, 2020, 18:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X