இந்தியாவில் கார் ஹோம் டெலிவிரி திட்டத்தை கையில் எடுத்தது பென்ஸ்!

ஊரடங்கு நிலையை கருத்தில்கொண்டு கார்களை ஹோம் டெலிவிரி செய்யும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம். கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கார் ஹோம் டெலிவிரி திட்டத்தை கையில் எடுத்தது பென்ஸ்!

கொரோனா நெருக்கடி காரணமாக, தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒரு மாத காலமாக நீடித்து வரும் இந்த ஊரடங்கு வரும் மே 3ந் தேதி வரை அமலில் இருக்கும். தேசிய ஊரடங்கு காரணமாக, கார் நிறுவனங்களின் ஆலைகள், ஷோரூம்கள் என அனைத்துமே ஒட்டுமொத்தமாக மூடப்பட்டுள்ளதால், வர்த்தகம் ஸ்தம்பித்துள்ளது.

கார் ஹோம் டெலிவிரி திட்டத்தை கையில் எடுத்தது பென்ஸ்!

இந்த சூழலில், கார் விற்பனையை ஓரளவாவது செய்வதற்கான திட்டத்தை கார் நிறுவனங்கள் கையில் எடுத்துள்ளன. அந்த வகையில், இந்தியாவின் முன்னணி சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

கார் ஹோம் டெலிவிரி திட்டத்தை கையில் எடுத்தது பென்ஸ்!

இதன்படி, வாடிக்கையாளர்கள் ஷோரூமிற்கு வராமலேயே அனைத்து விதமான நடைமுறைகளையும் முடித்து காரை வீட்டிலே் இருந்தபடியே. ஹோம் டெலிவிரி பெற முடியும்.

கார் ஹோம் டெலிவிரி திட்டத்தை கையில் எடுத்தது பென்ஸ்!

ஆன்லைன் முறையில் கார் விற்பனை செய்யும் இந்த திட்டத்தின் மூலமாக, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அனைத்து சொகுசு கார்களும், அந்நிறுவனத்தின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கின்றன. இந்த கார்களின் விபரங்களை வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தபடியே, முழுமையாக பார்த்து தேர்வு செய்ய முடியும்.

கார் ஹோம் டெலிவிரி திட்டத்தை கையில் எடுத்தது பென்ஸ்!

முன்பணம் செலுத்துவது, வங்கிக் கடன் பெறுவது, ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான அனைத்து வசதிகளும் இணையதளம் மூலமாக செய்ய முடியும். அதேநேரத்தில், கார்களை டெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பது மற்றும் ஆஃபர்களை தெரிந்து கொள்வதற்கு அருகாமையிலுள்ள டீலரை விற்பனை பிரதிநிதி சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு உதவி புரிவார்.

கார் ஹோம் டெலிவிரி திட்டத்தை கையில் எடுத்தது பென்ஸ்!

அனைத்து நடைமுறைகளும் முடிந்த பின்னர், வாடிக்கையாளர் விருப்பப்பட்டால், காரை வீட்டிலேயே டெலிவிரி தருவதற்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் வசதி செய்து தருகிறது.

கார் ஹோம் டெலிவிரி திட்டத்தை கையில் எடுத்தது பென்ஸ்!

இதுகுறித்து மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு துணைத் தலைவர் சந்தோஷ் ஐயர் ஆட்டோகார் இந்தியா தளத்திடம் பகிர்ந்து கொண்ட தகவலில்," இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாக கார் விபரங்களை பெறுவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். ஷோரூமிற்கு வரும்போதே, அவர்கள் திடமான முடிவுடனே வருகின்றனர்.

கார் ஹோம் டெலிவிரி திட்டத்தை கையில் எடுத்தது பென்ஸ்!

இதனை மனதில் வைத்தே ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் மூலமாக கார் விற்பனையை செய்வதற்கு விழைந்துள்ளோம். பிற நிறுவனங்களை போல அல்லாமல், ஆவணைங்களை கூட ஆன்லைனில் சமர்ப்பிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், வெளிப்படைத்தன்மையுடன் கார் விற்பனை செய்வதற்கும் இது உதவும்," என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சொகுசு கார் மார்க்கெட்டில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்தான் நம்பர்-1 ஆக இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் பிஎம்டபிள்யூ கார் நிறுவனத்தின் மூலமாக கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

கார் ஹோம் டெலிவிரி திட்டத்தை கையில் எடுத்தது பென்ஸ்!

இதனை மனதில் வைத்தே இந்த இரண்டாவது காலாண்டில் விற்பனையில் எப்படியாவது நம்பர்-1 இடத்தை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளது. அத்துடன், ஷோரூம்கள் மூடப்பட்டு இருப்பதால், ஏற்பட்டுள்ள இழப்பை ஓரளவு குறைப்பதற்கு இந்த ஆன்லைன் கார் வர்த்தகம் உதவும்.

Most Read Articles
English summary
The COVID-19 pandemic has struck the globe hard. India is currently facing a nationwide lockdown until May 3. To keep businesses running a lot of automobile manufacturers have moved to the online sales platforms. Mercedes-Benz India earlier used to retail only pre-owned cars online, but now they will be selling new cars as well. The entire portfolio is now available online.
Story first published: Friday, April 24, 2020, 10:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X