டெஸ்லா கார்களுக்கு இணையான வசதியுடன் புதிய மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸ் செடான் கார்...

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் புதிய 2021 எஸ்-க்ளாஸ் மாடலின் டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது. நாளை (ஜூலை 8) அறிமுகமாகவுள்ள இந்த பென்ஸ் கார் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டெஸ்லா கார்களுக்கு இணையான வசதியுடன் புதிய மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸ் செடான் கார்...

மெர்சிடிஸின் இந்த லக்சரி செடான் காரின் அறிமுகம் ஜெர்மனியில் உள்ள ஸ்டட்கர்ட் பகுதியில் இருந்து டிஜிட்டல் மூலமாக நடைபெறவுள்ளது. ஆனால் எப்படியிருந்தாலும் காரை பற்றிய விபரங்கள் அனைத்தும் வரும் செப்டம்பர் மாதம் வரையில் வெளிவர வாய்ப்பில்லை.

டெஸ்லா கார்களுக்கு இணையான வசதியுடன் புதிய மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸ் செடான் கார்...

காரை பற்றிய தகவல்களை மூன்று பிரிவுகளாக வெளியிட திட்டமிட்டுள்ள மெர்சிடிஸ் நிறுவனம் அதனை நாளையில் இருந்து துவங்கவுள்ளது. இதன்படி அடுத்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி இந்த செடான் காரின் உட்புற கேபினில் வழங்கப்பட்டுள்ள அம்சங்கள் வெளியிடவுள்ளன.

இதற்கிடையில் தற்போது புதிய மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸ் மாடலில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ள வசதிகளை வெளிக்காட்டும் விதமாக ஸ்னீக் பீக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ முழுக்க முழுக்க காரின் முன்பக்கம் மற்றும் டேப்லெட் வடிவிலான எம்பக்ஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை மட்டும் தான் காட்டுகிறது.

டெஸ்லா கார்களுக்கு இணையான வசதியுடன் புதிய மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸ் செடான் கார்...

இந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் தான் மிக முக்கிய சிறப்பம்சமாக பெரிய அளவிலான தொடுத்திரை உடன் டேஸ்போர்ட்டை அதிகளவில் ஆக்கிரமிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி காரின் கேபினுள் ஓட்டுனர் ஹெட்-அப் திரை வசதியையும் பெறலாம்.

டெஸ்லா கார்களுக்கு இணையான வசதியுடன் புதிய மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸ் செடான் கார்...

இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கான தொடுத்திரை எந்த அளவில் வழங்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. இது டெஸ்லா மாடல் எக்ஸ் மற்றும் எஸ் மாடல்களின் அளவில் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதன் மூலமாக ஒட்டுனர் எச்விஏசி அமைப்புகள், மல்டிமீடியா, நாவிகேஷன் மற்றும் மற்ற லக்சரி வசதிகளை பெற முடியும்.

டெஸ்லா கார்களுக்கு இணையான வசதியுடன் புதிய மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸ் செடான் கார்...

இதனுடன் இந்த டீசர் வீடியோவில் காட்டப்பட்டுள்ள புதிய ஏஆர் ஹெட்-அப் யூனிட் ஆனது நாவிகேஷன் வழிகாட்டுதல்களை திரையின் மூலமாக ஒட்டுனருக்கு வழங்கும். இந்த வழிகாட்டுதல் அறிவுரைகளை டேஸ்போர்டில் உள்ள பெரிய திரை மூலமாகவும் ஓட்டுனர் பார்க்கலாம். ஆனால் அதனை பார்த்து கொண்டே வாகனத்தை ஓட்டுவது கடினமானதாகும்.

டெஸ்லா கார்களுக்கு இணையான வசதியுடன் புதிய மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸ் செடான் கார்...

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் புதிய எஸ்-க்ளாஸ் மாடலை ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட்டில் வழங்க திட்டமிட்டுள்ளது. எஸ்-க்ளாஸ் காரின் ஹைப்ரீட் வெர்சன் 100கிமீ வரையிலான ரேஞ்சை வழங்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Mercedes teases new S-Class, three-phase launch begins on July 8
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X