மலிவான விலையில் வரும் அடுத்த எலக்ட்ரிக் பென்ஸ் கார் இதுதான்!! அடுத்த மாதம் அறிமுகமாகுகிறது

மலிவான விலையில் வெளிவரவுள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் காம்பெக்ட் எஸ்யூவி காரின் உலகளாவிய அறிமுகம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

மலிவான விலையில் வரும் அடுத்த எலக்ட்ரிக் பென்ஸ் கார் இதுதான்!! அடுத்த மாதம் அறிமுகமாகுகிறது

மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூ எலக்ட்ரிக் வாகன லைன்அப்பில் தற்சமயம் இக்யூசி எஸ்யூவி மற்றும் இக்யூவி லக்சரி எம்பிவி என்ற இரு மாடல்கள் உள்ளன. ஆனால் இதனை 2022ஆம் ஆண்டிற்கு உள்ளாக 6-ஆக அதிகரிக்க மெர்சிடிஸ் தயாராகி வருவதாக முன்பே கூறியிருந்தோம்.

மலிவான விலையில் வரும் அடுத்த எலக்ட்ரிக் பென்ஸ் கார் இதுதான்!! அடுத்த மாதம் அறிமுகமாகுகிறது

இந்த வகையில் மெர்சிடிஸ் பிராண்டில் இருந்து அடுத்ததாக வெளிவரவுள்ள எலக்ட்ரிக் கார், இக்யூஏ. இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி கார் அடுத்த 2021 ஜனவரி மாதத்தில் உலகளவில் அறிமுகமாகவுள்ளது என்ற விபரம்தான் தற்போது வெளியாகியுள்ளது.

மலிவான விலையில் வரும் அடுத்த எலக்ட்ரிக் பென்ஸ் கார் இதுதான்!! அடுத்த மாதம் அறிமுகமாகுகிறது

மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்ஏ-வின் எலக்ட்ரிக் வெர்சனான இக்யூஏ அதே அடிப்படை கட்டமைப்பை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. 2019 பிராங்பேர்ட் மோட்டார் கண்காட்சியில் முதன்முதலாக வாடிக்கையாளர்களுக்கு முன்பு காட்சிப்படுத்தப்பட்ட இந்த எலக்ட்ரிக் காரில் இரட்டை எலக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன.

மலிவான விலையில் வரும் அடுத்த எலக்ட்ரிக் பென்ஸ் கார் இதுதான்!! அடுத்த மாதம் அறிமுகமாகுகிறது

இவை மொத்த காரையும் எப்போதும் அனைத்து சக்கரங்களின் உதவியுடன் இயக்குகின்றன. விற்பனைக்கு வரும் மாடல் அதிகப்பட்சமாக எவ்வளவு என்ஜின் ஆற்றலில் இயங்கும் என்பது தெரியவில்லை, ஆனால் கான்செப்ட் மாடல் அதிகப்பட்சமாக 271 பிஎஸ் பவரில் இயங்கும் என குறிப்பிடப்பட்டு மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

மலிவான விலையில் வரும் அடுத்த எலக்ட்ரிக் பென்ஸ் கார் இதுதான்!! அடுத்த மாதம் அறிமுகமாகுகிறது

இரு எலக்ட்ரிக் மோட்டார்களும் சிங்கிள்-முழு சார்ஜில் அதிகப்பட்சமாக 400கிமீ தூரம் வரையில் இயக்கக்கூடியவை என தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்யூசி-ஐ போல் இக்யூஏ-வின் தோற்றம் பெரும்பாலும் ஜிஎல்ஏ-வைதான் ஒத்திருக்கும்.

மலிவான விலையில் வரும் அடுத்த எலக்ட்ரிக் பென்ஸ் கார் இதுதான்!! அடுத்த மாதம் அறிமுகமாகுகிறது

மாற்றம் எங்கும் இருக்கும் என்று பார்த்தால், காரின் முன்பக்கத்தில் இருக்கலாம். ஏனெனில் புதிய இக்யூஏ முன்பக்கத்தில் முற்றிலும் திருத்தியமைக்கப்பட்ட க்ரில் மற்றும் ஃபான்சியான டிஆர்எல்களை பெற்றுள்ளது. அதேபோல் பின்பக்கத்தில் பம்பரில் நம்பர் ப்ளேட் பொருத்தப்படும் முறையும் மாற்றப்பட்டிருக்கலாம்.

மலிவான விலையில் வரும் அடுத்த எலக்ட்ரிக் பென்ஸ் கார் இதுதான்!! அடுத்த மாதம் அறிமுகமாகுகிறது

ஆனால் உட்புறம் இரண்டிற்கும் இடையே பெரிய அளவில் வித்தியாசப்படாது. மெர்சிடிஸின் எம்பக்ஸ் பயனர் இண்டர்ஃபேஸ் உடன் இரு-திரை செட்அப் போன்ற தொழிற்நுட்ப அம்சங்களிலும் இரண்டும் ஒரே மாதிரியே இருக்கும்.

மலிவான விலையில் வரும் அடுத்த எலக்ட்ரிக் பென்ஸ் கார் இதுதான்!! அடுத்த மாதம் அறிமுகமாகுகிறது

மலிவான விலையில் விற்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டு வருவதால் இந்தியாவிற்கு இந்த எலக்ட்ரிக் கார் 2022-ற்குள் வருகை தருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. மெர்சிடிஸ் இக்யூஏ-விற்கு போட்டியாக வால்வோ எக்ஸ்சி40 அடுத்த 2021ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

Most Read Articles

English summary
Mercedes-Benz Compact Electric SUV Has A Debut Date (Mercedes-Benz EQA).
Story first published: Wednesday, December 23, 2020, 15:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X