மாருதி சுசுகியே பின்வாங்குது.. ஆனா மெர்சிடிஸ் பென்ஸுக்கு கொஞ்சம் கூட இல்ல... என்ன விஷயம்னு தெரியுமா?

இந்திய சந்தையில் தொடர்ந்து டீசல் கார்களை விற்பனை செய்யவுள்ளதாக மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மாருதி சுசுகியே பின்வாங்குது.. ஆனா மெர்சிடிஸ் பென்ஸுக்கு கொஞ்சம் கூட இல்ல... என்ன விஷயம்னு தெரியுமா?

இந்தியாவில் புதிய மாசு உமிழ்வு விதி கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அமலுக்கு வந்தது. இதனால் நம் நாட்டில் தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வரும் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான வாகனங்களை விற்பனை செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளன.

மாருதி சுசுகியே பின்வாங்குது.. ஆனா மெர்சிடிஸ் பென்ஸுக்கு கொஞ்சம் கூட இல்ல... என்ன விஷயம்னு தெரியுமா?

ஆனால் புதிய மாசு உமிழ்வு விதிக்கு இணக்கமாக டீசல் மாடல்களை அப்டேட் செய்வது செலவு மிகுந்த பணியாகவும், அதற்காக தயாரிப்புகளின் விலைகளை உயர்த்த வேண்டும் என்பதாலும் மாருதி சுசுகி உள்பட பெரும்பான்மையான தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது டீசல் கார்களின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தி வருகின்றன.

மாருதி சுசுகியே பின்வாங்குது.. ஆனா மெர்சிடிஸ் பென்ஸுக்கு கொஞ்சம் கூட இல்ல... என்ன விஷயம்னு தெரியுமா?

இந்த நிலையில் தான் டீசல் கார்களை தொடர்ந்து சந்தையில் விற்பனை செய்யவுள்ளதாக மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் கூறியுள்ளதாக ஆட்டோகார் இந்தியா செய்தி தளம் செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் துணை இயக்குனர் சந்தோஷ் ஐயரின் கருத்து பதிவிடப்பட்டுள்ளது.

மாருதி சுசுகியே பின்வாங்குது.. ஆனா மெர்சிடிஸ் பென்ஸுக்கு கொஞ்சம் கூட இல்ல... என்ன விஷயம்னு தெரியுமா?

அதன்படி பார்க்கும்போது சந்தோஷ் ஐயர், உமிழ்வு வரையில், பிஎஸ்6 டீசல் என்ஜின்கள் நவீன தொழிற்நுட்பத்தை போல சிறந்தவையே. ஆனால் தற்சமயம் டீசல் என்ஜின் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் சில வாயுக்களை வெளியிடுகிறது.

மாருதி சுசுகியே பின்வாங்குது.. ஆனா மெர்சிடிஸ் பென்ஸுக்கு கொஞ்சம் கூட இல்ல... என்ன விஷயம்னு தெரியுமா?

இருப்பினும் பெட்ரோல் என்ஜின்களுடன் ஒப்பிடும்போது டீசல் என்ஜின்கள் கார்பன் மோனாக்ஸைடு, கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் ஹைட்ரோகார்பனை போன்றவற்றை குறைவாகவே உமிழ்கிறது. ஆனால் டீசல் என்ஜினில் இருந்து வெளிவரும் நைட்ரஜன் ஆக்ஸைடுகள் தான் கருப்பு நிற புகைக்கு காரணம். இதனை அட்வான்ஸ்டு சிகிச்சைக்கு பிறகான தொழிற்நுட்பத்தின் மூலமாக தீர்க்க முடியும் என கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மாருதி சுசுகியே பின்வாங்குது.. ஆனா மெர்சிடிஸ் பென்ஸுக்கு கொஞ்சம் கூட இல்ல... என்ன விஷயம்னு தெரியுமா?

மெர்சிடிஸ் நிறுவனம் அடுத்ததாக ஃபேஸ்லிஃப்ட் வெர்சனாக 2021 இ63 காரை இந்திய சந்தைக்கு கொண்டுவரவுள்ளது. செடான் மற்றும் எஸ்டேட் இரு விதமான உடற் அமைப்புகளில் அறிமுகமாகும் இந்த ஃபேஸ்லிஃப்ட் காரில் சிறப்பான எலக்ட்ரானிக் தொகுப்புடன் புதிய டிசைன் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாருதி சுசுகியே பின்வாங்குது.. ஆனா மெர்சிடிஸ் பென்ஸுக்கு கொஞ்சம் கூட இல்ல... என்ன விஷயம்னு தெரியுமா?

ஏஎம்ஜி இ63 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் முந்தைய தலைமுறையின் 4.0 லிட்டர் வி8 பைடர்போ என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 596 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 9-ஸ்பீடு ட்யூல்-க்ளட்ச் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசுகியே பின்வாங்குது.. ஆனா மெர்சிடிஸ் பென்ஸுக்கு கொஞ்சம் கூட இல்ல... என்ன விஷயம்னு தெரியுமா?

கடைசியாக இந்நிறுவனத்தில் இருந்து முற்றிலும் புதிய 2020 ஜிஎல்எஸ் எஸ்யூவி மாடல் ரூ.99.90 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மிக பெரிய எஸ்யூவி மாடல்கள் மற்றும் டீசல் கார்களை தான் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்ய நவீன தொழிற்நுட்பத்தை மெர்சிடிஸ்-பென்ஸ் பயன்படுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Mercedes-Benz to remain committed to diesels in India
Story first published: Wednesday, June 24, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X