ஆட்டோ எக்ஸ்போ 2020: மிக மிக விலையுயர்ந்த பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி 63எஸ் சொகுசு கார் அறிமுகம்...

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அதிக விலைக்கொண்ட ஏஎம்ஜி ஜிடி 63எஸ் சொகுசு காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஆட்டோ எக்ஸ்போ 2020: மிக மிக விலையுயர்ந்த பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி 63எஸ் சொகுசு கார் அறிமுகம்...

ஜெர்மன் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் லக்சூரி வாகன தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ், அதன் மிக மிக விலையுயர்ந்த ஏஎம்ஜி ஜிடி 63எஸ் என்ற பவர்ஃபுல்லான காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் 4 டூர்கள் கொம்ட கூப் ரக மாடலாகும்.

ஆட்டோ எக்ஸ்போ 2020: மிக மிக விலையுயர்ந்த பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி 63எஸ் சொகுசு கார் அறிமுகம்...

இது தற்போது விற்பனையில் இருக்கும் நான்கு டூர்கள் கொண்ட கார்களைக் காட்டிலும் மிக அதிக வேகத்தில் செல்லும் திறன் கொண்ட காராகும்.

இந்த காரின் அதீத திறன் மற்றும் சொகுசு வசதிகளுக்கு ஏற்ப இதன் விலையும் மிக மிக அதிகமானதாக உள்ளது. இந்த ஏஎம்ஜி ஜிடி 63எஸ் காருக்கு ரூ. 2.42 கோடி என்ற விலையை பென்ஸ் நிறுவனம் நிர்ணயித்திருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

ஆட்டோ எக்ஸ்போ 2020: மிக மிக விலையுயர்ந்த பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி 63எஸ் சொகுசு கார் அறிமுகம்...

இந்த கார் உச்சபட்சமாக மணிக்கு 305 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டுள்ளது. இதேபோன்று, மணிக்கு 0-த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை வெறும் 3.2 விநாடிகளிலேயே தொட்டுவிடும். இந்த கார், போர்ஷே நிறுவனத்தின் மிக அதிதிறன் கொண்ட மாடலாக காட்சியளிக்கும் பனமேரா டர்போ மாடலுக்கு போட்டியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ 2020: மிக மிக விலையுயர்ந்த பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி 63எஸ் சொகுசு கார் அறிமுகம்...

போர்ஷேவின் இந்த காரும் நான்கு டூர்கள் கொண்ட பவர்ஃபுல் பெர்ஃபார்மன்ஸ் காராகும். ஆனால், இதைக்காட்டிலும் பென்ஸ் புதிய கார் அதீத திறனை வெளிப்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. இதற்காக 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 639 எச்பி பவரையும், 900 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. மேலும், இந்த எஞ்ஜின் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸில் இயங்கும்.

ஆட்டோ எக்ஸ்போ 2020: மிக மிக விலையுயர்ந்த பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி 63எஸ் சொகுசு கார் அறிமுகம்...

இதுமட்டுமின்றி, இந்த எஞ்ஜினின் அதிவேக திறன் காரின் அனைத்து வீல்களுக்கும் கடத்தப்படுகின்றன. ஆகையால் இந்த கார், அனைத்து வீல்களும் இயங்கும் தன்மைப் பெற்றிருக்கின்றது.

மெர்சிடிஸ் நிறுவனத்தின் இந்த கார் திறனில் மட்டுமின்றி சொகுசு மற்றும் தொழில்நுட்ப அம்சத்திலும் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ 2020: மிக மிக விலையுயர்ந்த பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி 63எஸ் சொகுசு கார் அறிமுகம்...

குறிப்பாக, 12.3 இன்ச் கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் மற்றும் இன்ஃபோடெயிண்மென்ட் சிஸ்டம் தொழில்நுட்பத்தின் சிகரமாக காட்சியளிக்கின்றது. இது பல்வேறு பயன்பாட்டை பயணிகள் மற்றும் வாகன ஓட்டிக்கு வழங்கும் திறனைப் பெற்றிருக்கின்றது.

ஆட்டோ எக்ஸ்போ 2020: மிக மிக விலையுயர்ந்த பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி 63எஸ் சொகுசு கார் அறிமுகம்...

இதுமட்டுமின்றி, பல்வேறு சொகுசு மற்றும் பிரிமியம் வசதிகளும் இந்த காரில் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அதிதிறன் வாய்ந்த கூப் ரக காருடன் ஏஎம்ஜி ஏ35 மற்றும் காம்பேக்ட் எஸ்யூவி மாடலான ஜிஎல்ஏ ஆகிய இருகார்களையும் மெர்சிடிஸ் பென்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருக்கின்றது.

Most Read Articles
English summary
Mercedes Launches AMG GT 63S In India At Rs. 2.42 Crore. Read In Tamil.
Story first published: Wednesday, February 5, 2020, 17:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X