இரு கதவுகளை கொண்ட எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காராக உருமாறும் எம்ஜி சைபர்ஸ்டர் கான்செப்ட்...

எம்ஜி மோட்டார்ஸின் சைபர்ஸ்டர் இரு-கதவு மாற்றத்தக்க வகையிலான எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரின் தோற்றம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நமக்கு கிடைத்துள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இரு கதவுகளை கொண்ட எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காராக உருமாறும் எம்ஜி சைபர்ஸ்டர் கான்செப்ட்...

எம்ஜி நிறுவனத்தின் சைபர்ஸ்டர் கான்செப்ட் மாடல், மென்மையான மற்றும் வளைவுகளான பாகங்களை கொண்ட ஸ்போர்ட்ஸ் காராக மாற்றப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி எம்ஜி நிறுவனத்தில் இருந்து விரைவில் வெளியாகவுள்ள இந்த புதிய மாடலில் காற்று இயக்கவியலையும் சிறப்பானதாக எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

இந்த படங்களில் கார் கூர்மையான மூக்கு வடிவிலான முன்புறம், காம்பெக்ட் கேபின் மற்றும் சிறிய ஓவர்ஹேங்க்கை கொண்டுள்ளது. இதில் இருந்து இந்த புதிய மாடலை எம்ஜி நிறுவனம் கிளாசிக் ஸ்போர்ட்ஸ் கார்களான ஜாகுவார் இ-டைப், ஃபெராரி 250ஜிடி மற்றும் அதன் எம்ஜிபி மாடல்களை போல் உருவாக்க திட்டமிட்டுள்ளதை அறிய முடிகிறது.

எலக்ட்ரிக் மோட்டாருடன் காரின் முன்புறத்தை வடிவமைப்பாளர்கள் மிகவும் தாழ்வாக வடிவமைத்துள்ளதால் காற்று இயக்கவியல் சிறப்பாக இருக்கும் என்பது உறுதி. தற்போது வெளியாகியுள்ள படத்தில் காரின் முன்புறம் பாதம் கொட்டை வடிவிலான எல்இடி ஹெட்லேம்ப்கள், ஒளிரக்கூடிய எம்ஜி லோகோ, பெரிய அளவிலான ஏர்-இண்டேக்குகளை கொண்டுள்ளது.

இரு கதவுகளை கொண்ட எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காராக உருமாறும் எம்ஜி சைபர்ஸ்டர் கான்செப்ட்...

இவற்றுடன் இதன் முன்புறத்தில் கருப்பு நிறத்தில் ரேசிங் ஸ்ட்ரிப்பும் உள்ளது. மற்றப்படி காரின் உட்புறத்தில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களை அறிய முடியவில்லை. இருப்பினும் இந்த படங்கள் மூலமாக பார்க்கும்போது ஒருங்கிணைங்கப்பட்ட ரோல் வளையங்களுடன் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு உண்டான இருக்கைகள் மற்றும் அவற்றிற்கு பின்புறத்தில் ஏர் இண்டேக்குகள் உள்ளிட்டவை இருப்பது தெரிகிறது.

முன்புறம் வளைவான பாகங்களை அதிகம் கொண்டவையாக இருப்பினும், காரின் பின்புறம் ஒளிரக்கூடிய அவுட்லைன்கள் மற்றும் அம்பு வடிவிலான டர்ன் இண்டிகேட்டர்களுடன் காட்சியளிக்கிறது. இந்த கார் குறித்து சீன ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலில் எம்ஜியின் இந்த புதிய ஸ்போர்ட்ஸ் கார் 5ஜி தொழிற்நுட்பத்துடன் இணைக்கக்கூடிய இணைப்பு வசதிகளை கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சைபர்ஸ்டர் கான்செப்ட் மாடல், நிலை-3 தன்னிச்சையான ட்ரைவிங் திறனை கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் இந்த திறனை புதிய ஸ்போர்ட்ஸ் மாடலிலும் எதிர்பார்க்கலாம் என தகவல்கள் கூறுகின்றன. சைபர்ஸ்டர் கான்செப்ட் முழுக்க முழுக்க இந்நிறுவனத்தின் தொழிற்நுட்ப திறனை வெளிப்படுத்தும் நோக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்ட மாடலாகும்.

இரு கதவுகளை கொண்ட எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காராக உருமாறும் எம்ஜி சைபர்ஸ்டர் கான்செப்ட்...

இதனால் இந்த கான்செப்ட் கொண்டிருந்த தொழிற்நுட்பங்களுடன் எதிர்காலத்தில் இந்நிறுவனத்தின் கார்களை வெளியாகவுள்ளன. மற்றப்படி சைபர்ஸ்டர் கான்செப்ட்டின் இயக்க ஆற்றல் குறித்த தகவல் எதுவும் இதுவரை கிடைக்க பெறவில்லை. ஆனால் நிச்சயம் அதிக திறன் கொண்ட லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு உடன் அனைத்து சக்கரங்களிலும் ஏசி மின்தூண்டல் மோட்டார் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இத்தகைய சிறப்பம்சங்களை கொண்ட எலக்ட்ரிக் மாடலின் படங்கள் தற்போதைய சூழ்நிலையில் ஏன் வெளியாகிறது என நீங்கள் யோசிக்கலாம். இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரை பற்றிய முழு விபரங்களை சீனாவில் நடைபெறவிருந்த ஆட்டோ கண்காட்சியில் தான் முதலில் வெளியிட எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. ஆனால் அதற்குள்ளாக கொரோனா வைரஸ் பரவலினால் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டது.

Most Read Articles
English summary
MG Cyberster Concept is a 2 door convertible electric sports car
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X