ஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் கூட செலவு ஆகாது... அதனால்தான் இந்த எலெக்ட்ரிக் காரை வாங்க இவ்வளவு போட்டி...

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரின் டெலிவரி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் கூட செலவு ஆகாது... அதனால்தான் இந்த எலெக்ட்ரிக் காரை வாங்க இவ்வளவு போட்டி...

கேரள மாநிலம் கொச்சியில் இருக்கும் ஒரு எம்ஜி டீலர்ஷிப், ஒரே நாளில் மொத்தம் 11 இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்துள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் ஒன்று, ஒரே நாளில் ஒரே டீலரால் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் டெலிவரி செய்யப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.

ஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் கூட செலவு ஆகாது... அதனால்தான் இந்த எலெக்ட்ரிக் காரை வாங்க இவ்வளவு போட்டி...

இதற்கு முன்பாகவும் எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் இதுபோன்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், இந்தியா முழுவதும் ஒரே நாளில் 700க்கும் மேற்பட்ட ஹெக்டர் எஸ்யூவி கார்களை எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் டெலிவரி செய்திருந்தது.

ஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் கூட செலவு ஆகாது... அதனால்தான் இந்த எலெக்ட்ரிக் காரை வாங்க இவ்வளவு போட்டி...

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்திய மார்க்கெட்டில் நடப்பாண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எக்ஸைட் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் என மொத்தம் இரண்டு வேரியண்ட்களில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் விற்பனைக்கு கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே 20.88 லட்ச ரூபாய், 23.58 லட்ச ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

ஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் கூட செலவு ஆகாது... அதனால்தான் இந்த எலெக்ட்ரிக் காரை வாங்க இவ்வளவு போட்டி...

ஃபெரிஸ் ஒயிட், கர்ரண்ட் ரெட் மற்றும் கோபென்ஹான் ப்ளூ ஆகிய கலர் ஆப்ஷன்களில், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் கிடைக்கிறது. தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்ட அம்சங்களுடன் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் கார்களில் எம்ஜி இஸட்எஸ் முதன்மையானது. இதில், மழை வந்தால் தானாக இயங்க கூடிய வைப்பர்கள் இடம்பெற்றுள்ளன.

ஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் கூட செலவு ஆகாது... அதனால்தான் இந்த எலெக்ட்ரிக் காரை வாங்க இவ்வளவு போட்டி...

அத்துடன் ஆட்டோமெட்டிக் ஹெட்லேம்ப்கள், மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளக்கூடிய முன் இருக்கைகள், பனரோமின் சன்ரூஃப் ஆகிய வசதிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த காரில், 44.5 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 340 கிலோ மீட்டர் பயணம் செய்ய முடியும்.

ஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் கூட செலவு ஆகாது... அதனால்தான் இந்த எலெக்ட்ரிக் காரை வாங்க இவ்வளவு போட்டி...

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை, 8.5 வினாடிகளில் எட்டி விடக்கூடிய திறனை எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி பெற்றுள்ளது. எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் கூற்றுப்படி, இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு 1 ரூபாய்க்கும் குறைவாகதான் செலவாகும்.

ஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் கூட செலவு ஆகாது... அதனால்தான் இந்த எலெக்ட்ரிக் காரை வாங்க இவ்வளவு போட்டி...

இதற்கு இணையான பெட்ரோல், டீசல் கார் என்றால் ஒரு கிலோ மீட்டர் இயக்க 8-15 ரூபாய் வரை செலவாகும். ஃபாஸ்ட் சார்ஜர் மற்றும் ரெகுலர் சார்ஜர் மூலம் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை சார்ஜ் செய்து கொள்ள முடியும். ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனை பயன்படுத்தினால், வெறும் 50 நிமிடங்களில், பேட்டரியை சுமார் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும்.

ஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் கூட செலவு ஆகாது... அதனால்தான் இந்த எலெக்ட்ரிக் காரை வாங்க இவ்வளவு போட்டி...

அதுவே ஏசி சார்ஜர் என்றால், பேட்டரி 100 சதவீதம் சார்ஜ் ஆவதற்கு 6-8 மணி நேரம் வரை ஆகும். இந்தியாவில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் தவிர, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆகிய மின்சார கார்களும் கிடைக்கின்றன. தற்போதைய நிலையில் இந்தியாவில் கிடைக்கும் எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம்.

ஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் கூட செலவு ஆகாது... அதனால்தான் இந்த எலெக்ட்ரிக் காரை வாங்க இவ்வளவு போட்டி...

ஆனால் இந்திய மார்க்கெட்டில் தற்போதுதான் எலெக்ட்ரிக் கார்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமடைந்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னையும், வாடிக்கையாளர்களை எலெக்ட்ரிக் கார்களின் பக்கம் திருப்பியுள்ளது. எனவே வரும் காலத்தில் இன்னும் அதிக அளவிலான எலெக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
MG Dealership In Kerala Delivers 11 ZS Electric Cars On A Single Day. Read in Tamil
Story first published: Wednesday, July 8, 2020, 2:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X