கியா கார்னிவலுக்கு போட்டியாக அறிமுகமாகும் எம்ஜி ஜி10 எம்பிவி கார்!

கியா கார்னிவல் காருக்கு நேரடி போட்டியாக வரும் எம்ஜி ஜி10 கார் இந்தியர்கள் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது. இந்த கார் எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் என்ற விபரத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கியா கார்னிவலுக்கு போட்டியாக அறிமுகமாகும் எம்ஜி ஜி10 எம்பிவி கார்!

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் ஹெக்டர் மற்றும் இசட்எஸ் எலெக்ட்ரிக் கார்களை தொடர்ந்து விரைவில் ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியை களமிறக்க உள்ளது. அத்துடன், இந்திய சந்தையில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், வெவ்வேறு பட்ஜெட்டில், பல்வேறு வகையான மாடல்களையும் வரிசை கட்ட உள்ளது.

கியா கார்னிவலுக்கு போட்டியாக அறிமுகமாகும் எம்ஜி ஜி10 எம்பிவி கார்!

அந்த வகையில், வாடிக்கையாளர் மத்தியில் பேராவலை ஏற்படுத்தி உள்ள எம்ஜி மாடலாக ஜி10 எம்பிவி கார் உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த எம்பிவி காரின் படங்கள், தகவல்களை அப்போதே வெளியிட்டு இருந்தோம்.

கியா கார்னிவலுக்கு போட்டியாக அறிமுகமாகும் எம்ஜி ஜி10 எம்பிவி கார்!

இந்த நிலையில், ஹெக்டர் ப்ளஸ் மற்றும் க்ளோஸ்டர் எஸ்யூவி கார்களுக்கு அடுத்து ஜி10 எம்பிவி கார் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பிரச்னையால் இந்த ஆண்டு இறுதியில் எதிர்பார்க்கப்பட்ட இந்த கார் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.

கியா கார்னிவலுக்கு போட்டியாக அறிமுகமாகும் எம்ஜி ஜி10 எம்பிவி கார்!

இந்த புதிய ஜி10 எம்பிவி கார் மாடலானது கியா கார்னிவல் காருக்கு போட்டியாக பிரிமீயம் ரக எம்பிவி கார் மாடலாக நிலைநிறுத்தப்படும். சீனாவில் விற்பனையாகும் மேக்சஸ் ஜி10 எம்பிவி கார்தான் எம்ஜி பிராண்டில் ரீபேட்ஜ் செய்து வர இருக்கிறது.

கியா கார்னிவலுக்கு போட்டியாக அறிமுகமாகும் எம்ஜி ஜி10 எம்பிவி கார்!

இந்த கார் 5,618 மிமீ நீளமும், 1,980 மிமீ அகலமும், 1,928 மிமீ உயரமும் கொண்டது. இதன் வீல்பேஸ் நீளம் 3,210 மிமீ என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால், இந்த கார் மிக பிரம்மாண்டமான மாடலாகவும், அதிக உட்புற இடவசதியை வழங்கும் மாடலாகவும் இருப்பது திண்ணம்.

கியா கார்னிவலுக்கு போட்டியாக அறிமுகமாகும் எம்ஜி ஜி10 எம்பிவி கார்!

இப்போது சொகுசு கார்களையே மிஞ்சும் அளவுக்கு கியா கார்னிவல் பரிமாணம் குறிப்பிடப்படுகிறது. ஆனால், கியா கார்னிவல் எம்பிவி காரைவிட எம்ஜி ஜி10 காரின் வீல் பேஸ் நீளம் 150 மிமீ கூடுதல் என்பதும் கவனிக்கத்தக்க விஷயமாக கூறலாம்.

கியா கார்னிவலுக்கு போட்டியாக அறிமுகமாகும் எம்ஜி ஜி10 எம்பிவி கார்!

கியா கார்னிவல் கார் போன்றே, இந்த காரும் 6 சீட்டர், 7 சீட்டர், 8 சீட்டர், 9 சீட்டர் மாடல்களில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆட்டோ எக்ஸ்போவில் 9 சீட்டர் மாடல்தான் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

கியா கார்னிவலுக்கு போட்டியாக அறிமுகமாகும் எம்ஜி ஜி10 எம்பிவி கார்!

எம்ஜி ஜி10 எம்பிவி காரில் ஃபியட் நிறுவனத்திடம் இருந்து சப்ளை பெறப்படும் 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் எஞ்சின் தேர்வு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் 218 பிஎச்பி பவரையும், 480 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துவதாக இருக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் இந்த கார் எதிர்பார்க்கலாம்.

கியா கார்னிவலுக்கு போட்டியாக அறிமுகமாகும் எம்ஜி ஜி10 எம்பிவி கார்!

புதிய எம்ஜி ஜி10 எம்பிவி காரில் எச்டி தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சிம் கார்டு மூலமாக நேரடி இன்டர்நெட் வசதி, மல்டி ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், எலெக்ட்ரிக் பனோரமிக் சன்ரூஃப், டிவி திரை ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

Most Read Articles
English summary
MG Motor is now planning to introduce the MG G10 premium MPV car India by early next year.
Story first published: Thursday, April 30, 2020, 15:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X