எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் அசத்தல் நுட்பம்... எவ்வளவு தூரம் ஓட்டினாலும் அலுப்பு தெரியாது?

எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் இடம்பெற்றிருக்கும் தொழில்நுட்பங்கள் தொடர்பான வீடியோக்களை எம்ஜி மோட்டார் நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் அசத்தல் நுட்பம்... எவ்வளவு தூரம் ஓட்டினாலும் அலுப்பு தெரியாது?

இந்தியாவில் ஒவ்வொரு கார் மாடலையும் முத்தாய்ப்பாக இருக்க வேண்டும் என்பதில் எம்ஜி மோட்டார் நிறுவனம் அதீத கவனம் செலுத்தி வருகிறது. இன்டர்நெட் வசதியுடன் வந்த அந்நிறுவனத்தின் முதல் கார் மாடலான எம்ஜி ஹெக்டர் இந்தியர்களை வசியம் செய்துவிட்டது. அதைத்தொடர்ந்து, இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கும் குறிப்பிடத்தக்க வரவேற்பு கிடைத்தது.

எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் அசத்தல் நுட்பம்... எவ்வளவு தூரம் ஓட்டினாலும் அலுப்பு தெரியாது?

இந்த நிலையில், அடுத்ததாக அசத்தலான பிரிமீயம் எஸ்யூவி மாடலை இந்தியாவில் களமிறக்க உள்ளது எம்ஜி மோட்டார். போட்டியாளர்களை ஒரு கை பார்க்கும் விதத்தில் இதன் ரக கார்களில் இல்லாத பல அற்புதமான தொழில்நுட்ப வசதிகளை க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் கொடுத்து அசத்த உள்ளது எம்ஜி மோட்டார் நிறுவனம்.

எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் அசத்தல் நுட்பம்... எவ்வளவு தூரம் ஓட்டினாலும் அலுப்பு தெரியாது?

பொதுவாக, புதிதாக அறிமுகம் செய்யப்படும் கார்களில் இடம்பெற்றிருக்கும் வசதிகள் குறித்து கார் நிறுவனங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வரை வாய் திறக்காது. ஆனால், எம்ஜி மோட்டார் நிறுவனம் மாற்றி யோசித்து, க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் இருக்கும் தொழில்நுட்ப வசதிகளையும், அது செயல்படும் விதத்தையும் அழகாக எடுத்து வீடியோவாக தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் அசத்தல் நுட்பம்... எவ்வளவு தூரம் ஓட்டினாலும் அலுப்பு தெரியாது?

அந்த வகையில், தற்போது க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் இடம்பெற்றிருக்கும் 'அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம்' குறித்த செயல்விளக்க வீடியோவை வெளியிட்டுள்ளது. நீண்ட தூரப் பயணங்களின்போது, நெடுஞ்சாலைகளில் ஓட்டுனர் தொடர்ந்து ஆக்சிலரேட்டரை மிதித்துக் கொண்டே செல்வது கடும் அயற்சியை ஏற்படுத்துகிறது.

எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் அசத்தல் நுட்பம்... எவ்வளவு தூரம் ஓட்டினாலும் அலுப்பு தெரியாது?

இதனை தவிர்த்து, ஓட்டுனர் சற்று ஆசுவாசமாக காரை ஓட்டுவதற்கான வாய்ப்பை தருவதே க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம். குறிப்பிட்ட வேகத்தில் காரை தொடர்ந்து நெடுஞ்சாலையில் செலுத்தும். ஆனால், முன்னால் செல்லும் வாகனங்கள் வேகத்தை குறைத்தாலோ அல்லது திடீரென பிரேக் பிடிக்கும்போதும் ஓட்டுனர்கள் கவனித்துக் கொண்டே சென்று பிரேக் பிடிக்க வேண்டும்.

ஆனால், எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தில் மிக முக்கியமான வசதி, முன்னால் செல்லும் வாகனத்திற்கு தக்கவாறு, தானியங்கி முறையில் வேகத்தை கார் குறைத்துக் கொள்ளும்.

எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் அசத்தல் நுட்பம்... எவ்வளவு தூரம் ஓட்டினாலும் அலுப்பு தெரியாது?

ரேடார் மற்றும் சென்சார்கள் உதவியுடன் முன்னால் செல்லும் வாகனங்களின் வேகத்தை துல்லியமாக கணித்து அதற்கு தக்கவாறு தானியங்கி முறையில் வேகத்தை கூட்டிக் குறைக்கும் வசதியை இந்த அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் வழங்கும். இது அடிக்கடி வியாபாரம் அல்லது அலுவலக விஷயமாக வெளியூர் செல்பவர்களுக்கு சிறந்த வசதியாக அமையும். மேலும், நெடுஞ்சாலைகளில் செல்லும்போது ஓட்டுனர்களுக்கு ஓய்வான பயண அனுபவத்தை தரும்.

எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் அசத்தல் நுட்பம்... எவ்வளவு தூரம் ஓட்டினாலும் அலுப்பு தெரியாது?

அண்மையில் க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் இருக்கும் தானியங்கி பார்க்கிங் தொழில்நுட்பம் குறித்த செயல்விளக்க வீடியோ வெளியிடப்பட்டது. இந்த நிலையில், அடுத்ததாக அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் பற்றிய வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் அசத்தல் நுட்பம்... எவ்வளவு தூரம் ஓட்டினாலும் அலுப்பு தெரியாது?

எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் இருக்கும் வசதிகள் போட்டியாளர்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும். இந்த ரகத்தில் பல புதிய தொழில்நுட்பங்கள் வருவதற்கான நிர்பந்தத்தை எம்ஜி க்ளோஸ்ட்டர் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் அசத்தல் நுட்பம்... எவ்வளவு தூரம் ஓட்டினாலும் அலுப்பு தெரியாது?

டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவிகள் வலிமையான போட்டியாளர்களாக உள்ளன. மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 மற்றும் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடல்களுக்கும் இது போட்டியாக அமையும்.

Most Read Articles
English summary
MG Motor has released Gloster adaptive cruise control demonstrative video ahead of it's launch in India.
Story first published: Wednesday, September 16, 2020, 17:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X