இந்த வசதிகளை இந்தியாவில் வெறெந்த கார்களிலும் பார்க்க முடியாது... அசர வைக்கும் எம்ஜி குளோஸ்டர்...

விரைவில் விற்பனைக்கு களமிறங்க இருக்கும் குளோஸ்டர் எஸ்யூவி காரின் சிறப்பு வசதிகள் பற்றிய தகவலை எம்ஜி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்த வசதிகளை இந்தியாவில் வெறெந்த கார்களிலும் பார்க்க முடியாது... அசர வைக்கும் எம்ஜி குளோஸ்டர்...

இந்தியாவிற்கான மூன்றாம் மாடலாக எம்ஜி நிறுவனம் குளோஸ்டர் எனும் அதி நவீன எஸ்யூவி காரை களமிறக்க இருக்கின்றது. தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் அனைத்து கார்களைக் காட்டிலும் அதிக தொழில்நுட்ப வசதியுடன் இக்கார் காட்சியளிக்கின்றது. இதை உறுதிப்படுத்தக்கூடிய தகவலையே எம்ஜி நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்த வசதிகளை இந்தியாவில் வெறெந்த கார்களிலும் பார்க்க முடியாது... அசர வைக்கும் எம்ஜி குளோஸ்டர்...

தற்போது விற்பனையில் இருக்கும் எந்தவொரு காரிலும் இல்லாத வசதியை எம்ஜி குளோஸ்டர் பெற்றிருப்பது இந்த புதிய தகவலின் வாயிலாக தெரிய வந்துள்ளது. தன்னாட்சி தொழில்நுட்பம் எனும் புதிய வசதியே இக்காருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதியே மிக முக்கியமான அம்சமாகவும் உள்ளது. இதுவே இந்தியாவின் எந்தவொரு காரும் இப்போது வரை பெறாத ஓர் அம்சமாக இருக்கின்றது.

இந்த வசதிகளை இந்தியாவில் வெறெந்த கார்களிலும் பார்க்க முடியாது... அசர வைக்கும் எம்ஜி குளோஸ்டர்...

இந்த அம்சத்தின் மூலமாக தானியங்கி பிரேக் வசதியை நம்மால் பெற முடியும். இத்துடன் பல்வேறு அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் எம்ஜி நிறுவனம், ஹெக்டர் எஸ்யூவி ரக காரின் மூலமாகவே இந்தியாவில் கால் தடம் பதித்தது. இதையடுத்தே, இரண்டாவது மாடலாக இசட்எஸ் எனும் மின்சாரக் காரை களமிறக்கியது.

இந்த வசதிகளை இந்தியாவில் வெறெந்த கார்களிலும் பார்க்க முடியாது... அசர வைக்கும் எம்ஜி குளோஸ்டர்...

இதைத்தொடர்ந்து இந்தியச் சந்தையை மேலும் விரிவாக்கம் செய்யும் விதமாகவே தற்போது அதிக சொகுசு மற்றும் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட பிரமாண்ட குளோஸ்டர் எஸ்யூவி காரை அது விரைவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த வசதிகளை இந்தியாவில் வெறெந்த கார்களிலும் பார்க்க முடியாது... அசர வைக்கும் எம்ஜி குளோஸ்டர்...

முன்னதாக இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில்தான் இக்கார் முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது. அப்போதே இக்கார் அநேகேரின் மனதைக் கொள்ளையடித்துவிட்டது. இதைத் தொடர்ந்து, இந்தியர்களின் கவனத்தைக் கூடுதலாகக் கவரும் வகையில் குளோஸ்டரின் சிறப்பம்சங்கள் பற்றிய தகவலை வீடியோ வாயிலாக எம்ஜி நிறுவனம் தொடர்ச்சியாக இணையத்தில் பரவவிட்டு வந்தது.

இந்த வசதிகளை இந்தியாவில் வெறெந்த கார்களிலும் பார்க்க முடியாது... அசர வைக்கும் எம்ஜி குளோஸ்டர்...

இந்த நிலையிலேயே ஒட்டுமொத்தமாக இக்காரில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற இருக்கின்றன என்பது பற்றிய வியப்பூட்டும் தகவலை அது வெளியிட்டுள்ளது. இத்துடன், அதிகாரப்பூர்வமாக இக்காருக்கான முன் பதிவையும் அது தொடங்கியிருக்கின்றது. ப்ரீ புக்கிங்கிற்கான கட்டணமாக ரூ. 1 லட்சத்தை அது நிர்ணயித்துள்ளது. விற்பனையாளர்கள் அல்லது அதிகாரப்பூர்வ வலைதளம் வாயிலாக புக்கிங் தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்த வசதிகளை இந்தியாவில் வெறெந்த கார்களிலும் பார்க்க முடியாது... அசர வைக்கும் எம்ஜி குளோஸ்டர்...

எம்ஜி குளோஸ்டர் காரில் இடம்பெறும் மிக முக்கியமான அம்சமாக ஏடிஏஎஸ் (Advanced Driver Assistance System) மற்றும் ஏசிசி (Adaptive Cruise Control) வசதிகள் இருக்கின்றன. இவை தானியங்கி திறனைக் காருக்கு வழங்கும். இத்துடன், தானாக பார்க் மற்றும் பிரேக் பிடித்தல் உள்ளிட்ட திறனையும் இக்கார் பெற்றிருக்கின்றது. இவற்றுடன், பிளைண்ட் ஸ்பாட் மற்றும் மோதல் குறித்த எச்சரிக்கை உள்ளிட்டவற்றை வழங்கும் திறனையும் குளோஸ்டர் பெற்றுள்ளது.

இந்த வசதிகளை இந்தியாவில் வெறெந்த கார்களிலும் பார்க்க முடியாது... அசர வைக்கும் எம்ஜி குளோஸ்டர்...

தொழில்நுட்ப வசதிகளைப் போலவே அதிநவீன எஞ்ஜினையும் எம்ஜி குஸோஸ்டர் பெற்றிருக்கிறது. இக்காரின் அனைத்து வீல்களும் இயங்கும் திறனைக் கொண்டிருக்கின்றன. இந்த திறனானது அனைத்து விதமான சாலை பரப்பிலும் கார் ஸ்மூத்தாக செல்ல உதவும். இதற்கேற்ப மணல், மண், பனி, மலை, ஈகோ, ஸ்போர்ட் மற்றும் வழக்கமான இயக்கம் ஆகிய மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த வசதிகளை இந்தியாவில் வெறெந்த கார்களிலும் பார்க்க முடியாது... அசர வைக்கும் எம்ஜி குளோஸ்டர்...

இதுபோதாதென்று, இக்காரில் ஐ-ஸ்மார்ட் எனும் 2.0 இணைப்பு தொழில்நுட்ப வசதி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இது காரில் இருக்கும் சில அம்சங்களை செல்போன் வாயிலாக கட்டுப்படுத்த மற்றும் காரின் குறிப்பிட்ட தகவல்களை அறிந்து கொள்ள உதவும். குறிப்பாக கார் திருட்டைத் தடுக்க இந்த இணைப்பு தொழில்நுட்பம் சிறப்பாக உதவுகின்றது. மேப் மற்றும் ஜிபிஎஸ் ஆகிய தொழில்நுட்பங்களுடன் இணைந்தே இந்த வசதியை குளோஸ்டர் வழங்க உள்ளது.

இந்த வசதிகளை இந்தியாவில் வெறெந்த கார்களிலும் பார்க்க முடியாது... அசர வைக்கும் எம்ஜி குளோஸ்டர்...

இதுதவிர, மேப் மை இந்தியா செல்போன் செயலி வாயிலாக கோவிட்-19 பரிசோதனை மையம், பள்ளம் நிறைந்த சாலை பற்றிய அறிவிப்பு, ஸ்பீடு அலர்ட் உள்ளிட்ட தகவல்களை வழங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து குரல் கட்டளை மூலம் கட்டுப்படுத்தக்கூடிய கானா பாடல் ஆப் வசதியும் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்த வசதிகளை இந்தியாவில் வெறெந்த கார்களிலும் பார்க்க முடியாது... அசர வைக்கும் எம்ஜி குளோஸ்டர்...

மேலும், கூடுதல் வசதியாக எம்ஜி குளோஸ்டர் காரில் மிகப்பெரிய 8 இன்ச் அளவிலான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், 12.3 இன்ச் அளவிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன், காரை கவர்ச்சியானதாக தோற்றுவிக்கும் விதமாக எல்இடி மின் விளக்கு காரின் முகப்பு பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த வசதிகளை இந்தியாவில் வெறெந்த கார்களிலும் பார்க்க முடியாது... அசர வைக்கும் எம்ஜி குளோஸ்டர்...

தொடர்ந்து, இக்காரில் பனோரமிக் சன் ரூஃப், 19 இன்ச் அலாய் வீல், லெதர் போர்த்தப்பட்ட இருக்கை (இந்த இருக்கை அதிக காற்றோட்டத்தை வழங்கக்கூடியது மற்றும் சூடான உணர்வை வழங்கும் வசதியும் கொண்டது), ஒயர்லெஸ் சார்ஜிங், ஆம்பிசியன்ட் மின் விளக்கு உள்ளிட்ட பிரீமியம் வசதிகளும் இடம்பெற செய்யப்பட்டுள்ளன.

இந்த வசதிகளை இந்தியாவில் வெறெந்த கார்களிலும் பார்க்க முடியாது... அசர வைக்கும் எம்ஜி குளோஸ்டர்...

எம்ஜி குளோஸ்டர் எஞ்ஜின்:

எம்ஜி குளோஸ்டர் காரில் 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட இருக்கின்றது. இது அதிகபட்சமாக 216 பிஎச்பி மற்றும் 480 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் இயங்கும். இது தற்போது எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு வழங்கும் பிற கார்களைக் காட்டிலும் அதிக திறனை வெளிப்படுத்தக் கூடியது.

இந்த வசதிகளை இந்தியாவில் வெறெந்த கார்களிலும் பார்க்க முடியாது... அசர வைக்கும் எம்ஜி குளோஸ்டர்...

இக்கார் இன்னும் ஒரு சில மாதங்களுக்கு உள்ளாகவே விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது, அகடா சிவப்பு, மெட்டல் கருப்பு, மெட்டல் சாம்பல் மற்றும் வார்ம் வெள்ளை ஆகிய நிறத்தேர்வுகளில் கிடைக்கும். ஏற்கனவே வீடியோ வாயிலாக இந்தியர்களைக் கவர்ந்து வந்த எம்ஜி குளோஸ்டர், தற்போதைய அதிகாரப்பூர்வ தகவலினால் கூடுதல் எதிர்பார்ப்பைப் பெறத் தொடங்கியுள்ளது.

Most Read Articles
English summary
MG Motors Unveils Advanced-Features List On Upcoming Gloster SUV: Bookings Now Open. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X