எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவியின் உட்புற ஸ்பை படங்கள் முதன்முறையாக வெளிவந்தன...

2020ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகின்ற எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவி காரின் உட்புற ஸ்பை புகைப்படங்கள் முதன்முறையாக இணையத்தில் கசிந்துள்ளன. இந்த புகைப்படங்களின் மூலம் இந்த புதிய எஸ்யூவி மாடலின் உட்புற வசதிகள் குறித்து வெளிவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவியின் உட்புற ஸ்பை படங்கள் முதன்முறையாக வெளிவந்தன...

எம்ஜி மோட்டார் நிறுவனம் அறிமுகத்திற்கு முன்னதாக கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியிலும் க்ளோஸ்டர் மாடலை காட்சிப்படுத்தியிருந்தது. இருப்பினும் இந்த கண்காட்சியில் காரின் உட்புறம் பார்வையாளருக்கு தெளிவாக தெரியாத வண்ணம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவியின் உட்புற ஸ்பை படங்கள் முதன்முறையாக வெளிவந்தன...

மேலும் தற்போது கண்டறியப்பட்டுள்ள க்ளோஸ்டர் எஸ்யூவி மாடலின் உட்புறமும் இதன் விற்பனை காரில் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் ஸ்டேரிங் சக்கரத்தின் டிசைன் கிட்டத்தட்ட இதன் வெளிநாட்டு சந்தைக்களுக்கான மாடலான மேக்ஸஸ் டி90 உடன் ஒத்து காணப்படுகிறது.

எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவியின் உட்புற ஸ்பை படங்கள் முதன்முறையாக வெளிவந்தன...

சோதனை காரின் டேஸ்போர்டு மற்றும் மைய கன்சோல் உள்ளிட்டவை எளிமையாகவும் கவர்ச்சிக்கரமான வசதிகளையும் கொண்டுள்ளன. இவற்றை தவிர்த்து எம்ஜி க்ளோஸ்டர் மாடலின் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் வேரியண்ட்டில் ஆடி-ஸ்டைலில் கியர் தேர்ந்தெடுப்பான் கொடுக்கப்பட்டிருப்பது இந்த ஸ்பை புகைப்படங்களின் மூலம் தெரியவருகிறது.

எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவியின் உட்புற ஸ்பை படங்கள் முதன்முறையாக வெளிவந்தன...

இந்த கியர் தேர்ந்தெடுப்பானை 'யாச்ட் லிவர்' என அழைக்கும் ஆடி நிறுவனம், த்ரோட்டிள் லிவரின் திருத்தியமைக்கப்பட்ட வடிவமாக யாச்ட் லிவரை கொண்டு வந்தது. இந்த லிவர் முதன்முதலாக ஆடி ஏ8 மாடலில் தான் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவியின் உட்புற ஸ்பை படங்கள் முதன்முறையாக வெளிவந்தன...

ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியின்போது எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவி மாடல் அதன் வெளிநாட்டு மாடலில் இருந்து இருந்து வித்தியாசப்படுவதற்காக மிக குறைவான எண்ணிக்கையிலேயே ஸ்டைலிங் பாகங்களை கொண்டிருந்தது. இதனால் அப்போது க்ளோஸ்டர் காரில் மேக்ஸஸ் டி90 மாடலின் அதே கியர் லிவரை தான் எம்ஜி நிறுவனம் வழங்கி இருந்தது.

எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவியின் உட்புற ஸ்பை படங்கள் முதன்முறையாக வெளிவந்தன...

எம்ஜி க்ளோஸ்டரின் பரிமாண அளவுகள் 5005x1932x1875மிமீ ஆகும். 6-இருக்கை மற்றும் 7-இருக்கை தேர்வுகளில் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டுவரும் இந்த எஸ்யூவி காரின் 7-இருக்கை வெர்சன் தான் இந்த சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சோதனை க்ளோஸ்டர் மாடல் அதன் மிடில் வேரியண்ட் என தெரிகிறது.

எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவியின் உட்புற ஸ்பை படங்கள் முதன்முறையாக வெளிவந்தன...

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட க்ளோஸ்டர் மாடலில் இருந்து இந்த கார் கலவையான சிறப்பம்சங்களை பெற்றுள்ளது. குறிப்பாக முந்தைய க்ளோஸ்டர் மாடலில் ஸ்டைலான தோற்றத்தில் காட்சியளித்த பி மற்றும் சி பில்லர்கள் இந்த சோதனை காரில் மிகவும் சாதாரணமானதாக தெரிகின்றன.

எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவியின் உட்புற ஸ்பை படங்கள் முதன்முறையாக வெளிவந்தன...

அதேபோல் பின்புறத்தில் உள்ள எக்ஸாஸ்ட் குழாய்களும் இதன் ஆட்டோ எக்ஸ்போ மாடலை பார்த்தவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளன. இந்த சோதனையின் மூலம் இந்த புதிய எஸ்யூவி மாடலின் உட்புற கேபின் நமக்கு முதன்முதலாக தெரியவந்தாலும், இதன் உட்புறத்தில் பெரும்பான்மையான பாகங்கள் மறைப்பால் மறைக்கப்பட்ட நிலையில் தான் உள்ளன.

எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவியின் உட்புற ஸ்பை படங்கள் முதன்முறையாக வெளிவந்தன...

மேக்ஸஸ் டி90 என்ற பெயரில் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 217 பிஎச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்கும் திறன் கொண்டது.

எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவியின் உட்புற ஸ்பை படங்கள் முதன்முறையாக வெளிவந்தன...

இந்த என்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் (பின்சக்கரங்கள் மூலம் இயங்கும்) மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் (அனைத்து சக்கரங்களையும் இயக்க முடியும்) என்ற ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவியின் உட்புற ஸ்பை படங்கள் முதன்முறையாக வெளிவந்தன...

ஆனால் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள க்ளோஸ்டர் எஸ்யூவி மாடல் இந்த பெட்ரோல் என்ஜினுடன் 2.0 லிட்டர் மல்டிஜெட்2 டீசல் என்ஜினின் ட்வின்-டர்போ வெர்சனையும் பெற்றுவரும் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த டீசல் என்ஜின் 218 பிஎச்பி பவரையும், 480 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவல்லது. ஆனால் இதனுடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மட்டும் தான் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக இணைக்கப்படவுள்ளது.

எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவியின் உட்புற ஸ்பை படங்கள் முதன்முறையாக வெளிவந்தன...

ஏற்கனவே கூறியதுபோல், மேக்ஸஸ் டி90 மாடலின் ரீபேட்ஜ் வெர்சன் காராக இந்திய சந்தைக்கு வரும் எம்ஜி க்ளோஸ்டர் மாடல் எக்ஸ்ஷோரூமில் ரூ.40-45 லட்சத்தை விலையாக பெறவுள்ளது. சர்வதேச சந்தையில் மேக்ஸஸ் டி90 மாடலுக்கு டொயோட்டா க்ரூஸர் ப்ராடோ மற்றும் ஜீப் க்ராண்ட் செரோக்கி உள்ளிட்டவை போட்டி மாடல்களாக உள்ளன.

Source: Rushlane

Most Read Articles
English summary
MG Gloster Interiors spied for the first time
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X