டொயோட்டா பார்ச்சூனருக்கு சவால்... விற்பனைக்கு வந்தது எம்ஜி க்ளோஸ்ட்டர்... விலை எவ்ளோனு தெரியுமா?

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை உள்ளிட்ட விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டொயோட்டா பார்ச்சூனருக்கு சவால்... விற்பனைக்கு வந்தது எம்ஜி க்ளோஸ்ட்டர்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்திய சந்தையில் தனது நான்காவது தயாரிப்பான க்ளோஸ்ட்டர் பிரீமியம் எஸ்யூவி காரை எம்ஜி மோட்டார் நிறுவனம் இன்று (அக்டோபர் 8) விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஹெக்டர், இஸட்எஸ் எலெக்ட்ரிக் மற்றும் ஹெக்டர் ப்ளஸ் ஆகிய கார்களுக்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து, இந்திய சந்தையில் எம்ஜி நிறுவனம் களமிறக்கும் நான்காவது தயாரிப்பு இதுவாகும்.

டொயோட்டா பார்ச்சூனருக்கு சவால்... விற்பனைக்கு வந்தது எம்ஜி க்ளோஸ்ட்டர்... விலை எவ்ளோனு தெரியுமா?

க்ளோஸ்ட்டர் எஸ்யூவி காருக்கான முன்பதிவுகளை எம்ஜி நிறுவனம் கடந்த செப்டம்பர் 24ம் தேதியில் இருந்து ஏற்று கொண்டுள்ளது. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 1 லட்ச ரூபாய் செலுத்தி, எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியை முன்பதிவு செய்து கொள்ளலாம். சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சேவி என மொத்தம் 4 வேரியண்ட்களில் எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி கிடைக்கும்.

டொயோட்டா பார்ச்சூனருக்கு சவால்... விற்பனைக்கு வந்தது எம்ஜி க்ளோஸ்ட்டர்... விலை எவ்ளோனு தெரியுமா?

அதேபோல் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் என இரண்டு இருக்கை அமைப்புகளுடன் எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியின் ஷார்ப் வேரியண்ட் இந்த இரண்டு இருக்கை அமைப்புகளுடனும் கிடைக்கும். இந்த எஸ்யூவியில், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன், 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

டொயோட்டா பார்ச்சூனருக்கு சவால்... விற்பனைக்கு வந்தது எம்ஜி க்ளோஸ்ட்டர்... விலை எவ்ளோனு தெரியுமா?

ஆனால் இந்த இன்ஜின் இரு வெர்ஷன்களில் வழங்கப்படுகிறது. விலை குறைவான சூப்பர் மற்றும் ஸ்மார்ட் வேரியண்ட்கள், ஒரே ஒரு டர்போசார்ஜரை மட்டுமே கொண்டிருக்கும். எனவே இந்த இன்ஜின் 163 ஹெச்பி பவரையும், 375 என்எம் டார்க் திறனையும் மட்டுமே உருவாக்கும். அத்துடன் ரியர்-வீல் டிரைவ் அமைப்பு வழங்கப்பட்டிருக்கும்.

டொயோட்டா பார்ச்சூனருக்கு சவால்... விற்பனைக்கு வந்தது எம்ஜி க்ளோஸ்ட்டர்... விலை எவ்ளோனு தெரியுமா?

அதே சமயம் விலை உயர்ந்த ஷார்ப் மற்றும் சேவி ஆகிய வேரியண்ட்கள், இரண்டு டர்போசார்ஜர்கள் உடன் இந்த இன்ஜினை பெற்றிருக்கும். எனவே இந்த இன்ஜின் அதிகபட்சமாக 218 ஹெச்பி பவரையும், 480 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்க கூடியதாக இருக்கும். அத்துடன் இந்த வேரியண்ட்களில், ஆன்-டிமாண்ட் 4 வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டிருக்கும்.

டொயோட்டா பார்ச்சூனருக்கு சவால்... விற்பனைக்கு வந்தது எம்ஜி க்ளோஸ்ட்டர்... விலை எவ்ளோனு தெரியுமா?

டொயோட்டா பார்ச்சூனர், ஃபோர்டு எண்டேவர் மற்றும் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 ஆகிய கார்களுக்கு, எம்ஜி க்ளோஸ்ட்டர் பிரீமியம் எஸ்யூவி கடும் சவாலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ப, எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி கார், அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் சந்தையில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா பார்ச்சூனருக்கு சவால்... விற்பனைக்கு வந்தது எம்ஜி க்ளோஸ்ட்டர்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்தியாவின் முதல் அட்டானமஸ் லெவல்-1 பிரீமியம் எஸ்யூவி என்ற பெருமையுடன் எம்ஜி க்ளோஸ்ட்டர் கார் விற்பனைக்கு வந்துள்ளது. ஆட்டோமேட்டிக் பார்க்கிங் அஸிஸ்ட், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்ஸி பிரேக்கிங், ஃபார்வார்டு கொலிஷன் வார்னிங், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஸன் மற்றும் லேன் டிபார்ச்சர் வார்னிங் உள்ளிட்ட வசதிகள் இந்த காரில் இடம்பெற்றுள்ளன.

டொயோட்டா பார்ச்சூனருக்கு சவால்... விற்பனைக்கு வந்தது எம்ஜி க்ளோஸ்ட்டர்... விலை எவ்ளோனு தெரியுமா?

அத்துடன் எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் இன்னும் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், பனரோமிக் சன் ரூஃப், 19 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், முன் மற்றும் பின் பகுதியில் பனி விளக்குகள் ஆகியவை முக்கியமானவை. இதேபோல் உட்புறத்திலும் வசதிகளுக்கு சற்றும் பஞ்சமில்லை.

டொயோட்டா பார்ச்சூனருக்கு சவால்... விற்பனைக்கு வந்தது எம்ஜி க்ளோஸ்ட்டர்... விலை எவ்ளோனு தெரியுமா?

எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி காரில், லெதர் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் 2வது வரிசையில், தனித்தனியான கேப்டன் இருக்கைகளும் இடம்பெற்றுள்ளன. மேலும் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் வசதிகளுடன் 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தையும், எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி பெற்றுள்ளது.

டொயோட்டா பார்ச்சூனருக்கு சவால்... விற்பனைக்கு வந்தது எம்ஜி க்ளோஸ்ட்டர்... விலை எவ்ளோனு தெரியுமா?

இதுதவிர எம்ஜி நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஜென்ரேஷன் ஐ-ஸ்மார்ட் கனெக்டட் டெக்னாலஜியும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் 8 இன்ச் எம்ஐடி இடம்பெற்றுள்ளது. பேடில் ஷிஃப்டர்கள், 3-ஜோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஜ் சார்ஜிங் என க்ளோஸ்ட்டர் எஸ்யூவி காரில் இடம்பெற்றுள்ள வசதிகளை அடுக்கி கொண்டே செல்லலாம்.

டொயோட்டா பார்ச்சூனருக்கு சவால்... விற்பனைக்கு வந்தது எம்ஜி க்ளோஸ்ட்டர்... விலை எவ்ளோனு தெரியுமா?

எம்ஜி க்ளோஸ்ட்டர் காரின் வசதிகள், தொழில்நுட்ப அம்சங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்ட நிலையில், விலை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை 28.98 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலை 35.38 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வேரியண்ட் வாரியாக விலை விபரத்தை கீழே உள்ள பட்டியலில் காணலாம்.

Variant Price
Super 7 Seater ₹28,98,000
Smart 7 Seater ₹30,98,000
Sharp 7 Seater ₹33,68,000
Sharp 6 Seater ₹33,98,000
Savvy 6 Seater ₹35,38,000
டொயோட்டா பார்ச்சூனருக்கு சவால்... விற்பனைக்கு வந்தது எம்ஜி க்ளோஸ்ட்டர்... விலை எவ்ளோனு தெரியுமா?

விசாலமான இட வசதி மற்றும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ஒரு பிரம்மாண்டமான எஸ்யூவி காரை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற தேர்வாக எம்ஜி க்ளோஸ்ட்டர் இருக்கும். பிரீமியம் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களை குறிவைத்து களமிறக்கப்பட்டிருக்கும் நிலையில், எம்ஜி நிறுவனத்திற்கு க்ளோஸ்ட்டர் கணிசமான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
MG Gloster Premium SUV Launched In India: Price, Variants, Engine Specs, Features, All Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X