நான்காவது தயாரிப்பை களமிறக்க தயாராகும் எம்ஜி... க்ளோஸ்டர் பொது சாலையில் சோதனை...

எம்ஜி மோட்டார் நிறுவனம் சமீபத்தில் தனது மூன்றாவது தயாரிப்பு மாடலாக ஹெக்டர் ப்ளஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இந்நிறுவனம் தனது நான்காவது அறிமுகமாக க்ளோஸ்டரை சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தியுள்ளது.

நான்காவது தயாரிப்பை களமிறக்க தயாராகும் எம்ஜி... க்ளோஸ்டர் பொது சாலையில் சோதனை...

இதுகுறித்து 91 வீல்ஸ் என்ற செய்தி தளம் வெளியிட்டுள்ள ஸ்பை படங்களில் இரு விதமான நிறங்களில் சோதனை க்ளோஸ்டர் மாடல்கள் காட்சியளிக்கின்றன. ஆனால் இதற்கு முந்தைய சோதனை ஓட்டங்கள் கார் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையிலேயே காட்சியளித்தது.

நான்காவது தயாரிப்பை களமிறக்க தயாராகும் எம்ஜி... க்ளோஸ்டர் பொது சாலையில் சோதனை...

இந்த சோதனை ஓட்டம் எம்ஜியின் ஹலோல் தொழிற்சாலைக்கு அருகே நடைபெற்றுள்ளது. எம்ஜி க்ளோஸ்டர் முழு-அளவு எஸ்யூவி மாடலாகும். மேக்ஸஸ் டி90 மாடலின் ரீபேட்ஜ்டு வெர்சனாக சந்தைக்கு வரும் இந்த கார் டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

நான்காவது தயாரிப்பை களமிறக்க தயாராகும் எம்ஜி... க்ளோஸ்டர் பொது சாலையில் சோதனை...

தற்போதைய சோதனை ஓட்டத்தில் க்ரே மற்றும் மெரூன் சிவப்பு நிறங்களில் க்ளோஸ்டர் மாடல்கள் உள்ளன. கிட்டத்தட்ட தயாரிப்பு பணிகளை நிறைவு செய்தாற்போல் தோற்றமளிக்கும் இவை இரண்டிலும் எந்தவொரு சோதனை கருவியும் பொருத்தப்பட்டில்லை.

நான்காவது தயாரிப்பை களமிறக்க தயாராகும் எம்ஜி... க்ளோஸ்டர் பொது சாலையில் சோதனை...

தோற்றத்தை பற்றி கூற வேண்மென்றால், இந்த சோதனை எம்ஜி க்ளோஸ்டர் மாடல்கள் முன்புறத்தில் எம்ஜி முத்திரையுடன் பெரிய அளவிலான 3-ஸ்லாட் க்ரோம் க்ரிலை கொண்டுள்ளன. இதன் இரு புறங்களிலும் எல்இடி ஹெட்லைட்கள் உள்ளன.

நான்காவது தயாரிப்பை களமிறக்க தயாராகும் எம்ஜி... க்ளோஸ்டர் பொது சாலையில் சோதனை...

கம்பீரமான தோற்றத்திற்காக சற்று உயரமான பெனெட், பாடி க்ளாடிங் உடன் சக்கர ஆர்ச்கள் மற்றும் ரூஃப் ரெயில்கள் உள்ளிட்டவற்றையும் இந்த கார் கொண்டுள்ளது. ஜன்னல்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள க்ரோம் ரூஃப் ரெயில்களுடன் இணைவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நான்காவது தயாரிப்பை களமிறக்க தயாராகும் எம்ஜி... க்ளோஸ்டர் பொது சாலையில் சோதனை...

இந்த க்ளோஸ்டர் மாடல்களின் பின்புறம் எல்இடி டெயில்லைட்கள் மற்றும் குவாட் எக்ஸாஸ்ட் துளைகளால் மிகவும் ஸ்போர்ட்டியான தோற்றத்தில் உள்ளது. மொத்த தோற்ற அளவில் எம்ஜி க்ளோஸ்டர் மாடல் பெரியது. எந்த அளவிற்கு என்றால், சர்வதேச சந்தைகளில் இந்த காருக்கு விற்பனையில் போட்டியாக பெரிய உருவத்தை கொண்ட டொயோட்டா எல்சி ப்ராடோ போன்ற எஸ்யூவி கார்கள் உள்ளன.

நான்காவது தயாரிப்பை களமிறக்க தயாராகும் எம்ஜி... க்ளோஸ்டர் பொது சாலையில் சோதனை...

இந்த வகையில் இந்தியாவில் இதற்கு போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டேவியர் உள்ளிட்டவை விளங்கும். எம்ஜி க்ளோஸ்டரின் உட்படங்கள் எதுவும் தற்போதைக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் இதன் கேபினில் ஐஸ்மார்ட் தொழிற்நுட்பத்துடன் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பனோராமிக் சன்ரூஃப், இரு-நிலை க்ளைமேட் கண்ட்ரோல், எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன்புற இருக்கைகள் உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கலாம்.

நான்காவது தயாரிப்பை களமிறக்க தயாராகும் எம்ஜி... க்ளோஸ்டர் பொது சாலையில் சோதனை...

இயக்க ஆற்றலுக்கு இந்த கார் 2.0 லிட்டர் டீசல் என்ஜினை பெற்றுள்ளது. அதிகப்பட்சமாக 218 பிஎச்பி மற்றும் 480 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் பகுதி-நேர 4-சக்கர ட்ரைவ் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது.

நான்காவது தயாரிப்பை களமிறக்க தயாராகும் எம்ஜி... க்ளோஸ்டர் பொது சாலையில் சோதனை...

எம்ஜி க்ளோஸ்டர் மாடலின் சோதனை ஓட்டம் மறைப்பு எதுவுமின்றி மேற்கொள்ளப்பட்டுள்ளதால் இதன் அறிமுகத்தை வரும் பண்டிக்கை காலத்தில் எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது. இந்த காரின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.30-35 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

Most Read Articles
English summary
MG Gloster Spied In Two New Colours
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X