எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியின் முதல் வீடியோ டீசர் வெளியீடு... அசத்தும் தொழில்நுட்ப அம்சங்கள்!

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியின் முதல் டீசர் வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில், இந்த காரில் அசத்தலான தொழில்நுட்பங்கள் இடம்பெற இருப்பது தெரிய வந்துள்ளது.

எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியின் முதல் வீடியோ டீசர் வெளியீடு!

இந்தியாவில் எம்ஜி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்நிறுவனம் முதலாவதாக களமிறக்கிய ஹெக்டர் எஸ்யூவிக்கும், அடுத்து வந்த இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியும் குறிப்பிடத்தக்க விற்பனையுடன் பெரும் வாடிக்கையாளர் வட்டம் கிடைத்துள்ளது. இந்தியாவின் முதல் இன்டர்நெட் வசதி கொண்ட கார் மாடல்களாக நிலைநிறுத்த்தப்பட்டதும் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்தது. எம்ஜி ஹெக்டர் அடிப்படையிலான 6 சீட்டர் மாடலாக ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியும் அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியின் முதல் வீடியோ டீசர் வெளியீடு!

இந்த வரிசையில், நான்காவதாக க்ளோஸ்ட்டர் என்ற உயர் வகை பிரிமீயம் எஸ்யூவி மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது எம்ஜி மோட்டார் நிறுவனம். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த புதிய எஸ்யூவி மாடலானது, பண்டிகை கால ரிலீஸ் பட்டியலில் உள்ளது.

எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியின் முதல் வீடியோ டீசர் வெளியீடு!

இந்த நிலையில், இந்த புதிய எஸ்யூவியின் வரவை உறுதிப்படுத்தி, வாடிக்கையாளர் மத்தியில் ஆவலைத் தூண்டும் விதமாக முதல் டீசர் வீடியோவை எம்ஜி மோட்டார் வெளியிட்டுள்ளது. இதில், இந்த காரில் இடம்பெற இருக்கும் சில முக்கிய அம்சங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியின் முதல் வீடியோ டீசர் வெளியீடு!

ஹெக்டர் எஸ்யூவி மற்றும் இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் போன்றே இந்த காரிலும் இன்டர்நெட் வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிப்பது தெரிய வந்துள்ளது. இதன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரை ஓரளவு காண்பதற்கான வாய்ப்பும் இந்த டீசரில் உள்ளது.

மேலும், பிற வாகனங்களுடன் முன்புற மோதலை தடுப்பதற்கான விசேஷ பாதுகாப்பு வசதியும் இந்த காரில் இடம்பெற இருப்பதாக டீசர் மூலமாக தெரிகிறது. இது நிச்சயம் இந்தியர்களை கவரும் தொழில்நுட்பமாகவும், அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் இருக்கும்.

எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியின் முதல் வீடியோ டீசர் வெளியீடு!

இந்த காரின் தோற்றம் மிக பிரம்மாண்டமாக தெரிகிறது. அத்துடன், எல்இடி ஹெட்லைட்டுகள், பிரம்மாண்ட வீல் ஆர்ச்சுகளுடன், ரூஃப் ரெயில்களுடன் இந்த கார் வர இருக்கிறது. இந்த காரில் எல்இடி டெயில்லைட்டுகள், நான்கு குழல் அமைப்புடன் சைலென்சர் ஆகியவையும் மிக முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியின் முதல் வீடியோ டீசர் வெளியீடு!

புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் 12.3 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், கூல்டு மற்றும் ஹீட்டடு வசதி கொண்ட இருக்கைகள், ஐ-ஸ்மார்ட் கனெக்டெட் செயலி ஆகியவற்றுடன் இந்திய வாடிக்கையாளர்களை சுண்டி இழுப்பதற்கான அனைத்து அம்சங்களையும் பெற்றுள்ளது.

எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியின் முதல் வீடியோ டீசர் வெளியீடு!

புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியின் எஞ்சின் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 221 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியின் முதல் வீடியோ டீசர் வெளியீடு!

டீசல் மாடலில் இடம்பெறும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் 216 பிஎச்பி பவரையும், 480 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். இந்த காரில் 8 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது.

எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியின் முதல் வீடியோ டீசர் வெளியீடு!

புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி ரூ.35 லட்சம் முதல் ரூ.45 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் ஆகிய எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக வரலாம். ஆனால், தற்போது எமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, டொயோட்டா லேண்ட்க்ரூஸர், ஜீப் செரோக்கீ ஆகிய உயர்வகை பிரிமீயம் எஸ்யூவி மாடல்களுக்கு இணையாக நிலைநிறுத்தப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Most Read Articles
English summary
எம்ஜி க்ளோஸ்ட்டர், எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி டீசர், எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி முக்கிய அம்சங்கள்
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X