சூப்பர் குட் நியூஸ்... கைக்கு எட்டும் தூரத்தில் வந்த எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி!

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய கார் மாடல்கள் இந்தியர்களின் நாடித் துடிப்பை எகிற வைத்து வருகின்றன. அசரடிக்கும் தொழில்நுட்ப அம்சங்கள், பிரம்மாண்டம் ஆகியவை எம்ஜி கார்கள் மீதான ஈர்ப்பை வெகுவாக உயர்த்தி இருக்கின்றன.

அந்த வரிசையில், தற்போது க்ளோஸ்ட்டர் என்ற பெரிய வகை எஸ்யூவி மாடலை இந்தியாவில் களமிறக்க ஆயத்தமாகி விட்டது எம்ஜி மோட்டார் நிறுவனம். கடந்த மாதம் முதல் க்ளோஸ்ட்டர் எஸ்யூவியின் தொழில்நுட்ப அம்சங்களை விளக்கும் வீடியோக்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது எம்ஜி மோட்டார் நிறுவனம்.

சூப்பர் குட் நியூஸ்... கைக்கு எட்டும் தூரத்தில் வந்த எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி!

இந்த நிலையில், நாளை மறுதினம் (அக்டோபர் 8) இந்த புதிய எஸ்யூவி மாடலை இந்தியாவில் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வருவதற்கு நாள் குறித்துள்ளது எம்ஜி மோட்டார் நிறுவனம்.

சூப்பர் குட் நியூஸ்... கைக்கு எட்டும் தூரத்தில் வந்த எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி!

புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியானது லெவல் 1 என்ற நிலையிலான தானியங்கி தொழில்நுட்பத்துடன் வர இருக்கிறது. தானியங்கி முறையில் பார்க்கிங் செய்யும் வசதி, தானியங்கி முறையில் வேகக்கட்டுபாடு வசதி கொண்ட க்ரூஸ் கன்ட்ரோல் தொழில்நுட்பம் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக உள்ளன.

சூப்பர் குட் நியூஸ்... கைக்கு எட்டும் தூரத்தில் வந்த எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி!

இந்த எஸ்யூவி 5 மீட்டருக்கும் அதிகமான நீளத்தையும், 2 மீட்டர் அகலமும், 2 மீட்டர் உயரமும் பெற்றிருக்கிறது. இதன் வீல் பேஸ் 3 மீட்டர் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம். இதனால், உட்புறத்தில் மிகச் சிறப்பான இடவசதியை அளிக்கும்.

சூப்பர் குட் நியூஸ்... கைக்கு எட்டும் தூரத்தில் வந்த எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி!

புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி சூப்பர், ஷார்ப், ஸ்மார்ட் மற்றும் சாவி ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. மேலும், இந்த எஸ்யூவி 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் கிடைக்கும்.

சூப்பர் குட் நியூஸ்... கைக்கு எட்டும் தூரத்தில் வந்த எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி!

புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 18 அங்குல அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள், 12.3 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8.0 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை வழங்கப்பட உள்ளன.

சூப்பர் குட் நியூஸ்... கைக்கு எட்டும் தூரத்தில் வந்த எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி!

முன்புற, பக்கவாட்டு பகுதிகளுக்கான ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ஹில்ஹோல்டு அசிஸ்ட், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், இபிடி உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு வசதிகளும் உள்ளன.

சூப்பர் குட் நியூஸ்... கைக்கு எட்டும் தூரத்தில் வந்த எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி!

புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் இரண்டு விதமான தேர்வுகளில் வர இருக்கிறது. இதில், டாப் வேரியண்ட்டுகளில் 215 பிஎச்பி பவரையும், 480 என்எம் டார்க் திறனையும் வழங்கும் எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளது 4 வீல் டிரைவ் சிஸ்டம் இடம்பெறுகிறது. இந்த கார் டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
MG Motor is all set to launch the all new MG Gloster SUV in India on October 8, 2020.
Story first published: Tuesday, October 6, 2020, 17:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X