Just In
- 1 hr ago
தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்... எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!
- 2 hrs ago
2021 டொயோட்டா ஃபார்ச்சூனரை முன்பதிவு செய்தவர்களுக்கு ஓர் இன்ப செய்தி!! கார் ஷோரூம்களை வந்தடைய துவங்கிவிட்டது
- 4 hrs ago
மாருதி டீசல் எஞ்சின் ரெடி... எர்டிகா, சியாஸ் கார்களில் விரைவில் அறிமுகம்?
- 5 hrs ago
போச்சு... மாருதி கார்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன!! புதிய விலைகளை பார்த்துவிட்டு கார்களை வாங்குங்கள்!
Don't Miss!
- Movies
பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ் பயன்படுத்திய இந்த வார்த்தை ரொம்ப தவறு.. கரெக்ஷன் செய்யும் பிரபலம்!
- News
டாக்டர் வி. சாந்தாவின் மறைவு மருத்துவத் துறைக்கு பேரிழப்பு... ஜவாஹிருல்லா இரங்கல்!
- Finance
உச்சத்தில் பெட்ரோல் டீசல் விலை.. உற்பத்தி குறைவு தான் காரணம்.. தர்மேந்திர பிரதான்..!
- Lifestyle
நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் வேணுமா? அப்ப இந்த பொருளை நெத்தில தேய்ங்க போதும்...
- Sports
உங்க கோட்டைக்கு வர சொன்னியாமே?.. தமிழக வீரர் அஸ்வின் செய்த வித்தியாசமான டிவிட்.. நெத்தியடி பதிலடி!
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
குவிந்த புக்கிங்... நேக்காக க்ளோஸ்ட்டர் எஸ்யூவி விலையை உயர்த்தியது எம்ஜி மோட்டார்!
வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் விலை கணிசமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஒரு மாதத்திற்குள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் கார் மாடல்களுக்கு இந்தியர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தியர்கள் எதிர்பார்க்கும் பிரம்மாண்ட தோற்றம், டிசைன் அம்சங்கள், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மிக சவாலான விலையில் களமிறக்கப்படுவதால், உடனடியாக வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகின்றன.

இந்த வரிசையில், கடந்த மாதம் எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்த க்ளோஸ்ட்டர் பிரிமீயம் எஸ்யூவி இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துவிட்டது.

போட்டியாளர்களை விஞ்சும் பிரம்மாண்டத் தோற்றம், விசாலமான கேபின், நவீன தொழில்நுட்பங்கள் வாடிக்கையாளர்களை எளிதில் ஈர்த்துள்ளன. இதனால், 2,000 முன்பதிவுகளை அதிரடியாக பெற்றுவிட்டது. டிசம்பர் வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட க்ளோஸ்ட்டர் கார்களுக்கு முன்பதிவு முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இனி புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்கள் ஜனவரிக்கு பின்னரே டெலிவிரி பெறும் நிலை உள்ளது. இந்த நிலையில், க்ளோஸ்ட்டர் எஸ்யூவி அறிமுகம் செய்தபோது ரூ.28.98 லட்சம் முதல் ரூ.35.38 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இது அறிமுகச் சலுகை விலையாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதன்படியே முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 2,000 க்ளோஸ்ட்டர் எஸ்யூவிகளுக்கு முன்பதிவு முடிந்துவிட்டதால், விலை ரூ.20,000 முதல் ரூ.1 லட்சம் வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, ரூ.28.98 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட சூப்பர் (7 சீட்டர்) வேரியண்ட் விலை ரூ.1 லட்சம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், பேஸ் வேரியண்ட் இனி ரூ.29.98 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும்.

அடுத்து நடுத்தர வகையிலான ஸ்மார்ட் 7 சீட்டர் வேரியண்ட் விலை ரூ.50,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், ரூ.30.98 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்ட இந்த வேரியண்ட் இனி ரூ.31.48 லட்சம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.

ஷார்ப் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் வேரியண்ட்டுகள் விலை ரூ.30,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. இனி 6 சீட்டர் வேரியண்ட் ரூ.34.28 லட்சத்திலும், 7 சீட்டர் ரூ.33.98 லட்சம் விலையிலும் கிடைக்கும். சாவி என்ற வேரியண்ட் விலை ரூ.20,000 உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.35.38 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட இந்த வேரியண்ட் இனி ரூ.35.58 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

விலை உயர்த்தப்பட்டாலும், அதிக மதிப்பை தரும் பல விஷயங்களுடன் தொடர்ந்து சந்தையில் க்ளோஸ்ட்டர் கலக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் இரண்டு விதமான பவரை வெளிப்படுத்தும் வகைகளில் கிடைக்கிறது. பேஸ் வேரியண்ட்டுகளில் இருக்கும் இந்த எஞ்சின் 161 பிஎச்பி பவரையும், 375 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ட்வின் டர்போ வேரியண்ட் 216 பிஎச்பி பவரையும், 470 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியின் டாப் வேரியண்ட்டில் லெவல் 1 நிலையில் இயங்கும் ஆட்டோனாமஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் டிபார்ச்சர் வார்னிங் சிஸ்டம், முன்புற மோதலை தவிர்க்கும் தானியங்கி பிரேக் சிஸ்டம் ஆகியவை உள்ளன. புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி மஹிந்திரா அல்டுராஸ் ஜி4, டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.