அக்டோபர் மாத அறிமுகத்திற்கு முன்னதாக, இந்திய ஷோரும்களை வந்தடைந்தது புத்தம் புதிய எம்ஜி க்ளோஸ்டர்...

எம்ஜி நிறுவனத்தின் முழு-அளவு எஸ்யூவி காராக விரைவில் அறிமுகமாகவுள்ள க்ளோஸ்டர் டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு சென்றடைய துவங்கியுள்ளது. இதுகுறித்த வெளியாகியுள்ள படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

அக்டோபர் மாத அறிமுகத்திற்கு முன்னதாக, இந்திய ஷோரும்களை வந்தடைந்தது புத்தம் புதிய எம்ஜி க்ளோஸ்டர்...

எம்ஜி மோட்டாரின் புதிய அறிமுகமாக க்ளோஸ்டர் வருகிற அக்டோபர் மாதத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்த எஸ்யூவி காருகான முன்பதிவுகளை ரூ.1 லட்சம் என்ற முன் தொகையுடன் எம்ஜி மோட்டார் நிறுவனம் ஏற்று கொண்டுவருகிறது.

அக்டோபர் மாத அறிமுகத்திற்கு முன்னதாக, இந்திய ஷோரும்களை வந்தடைந்தது புத்தம் புதிய எம்ஜி க்ளோஸ்டர்...

இந்த நிலையில்தான் தற்போது க்ளோஸ்டர் எஸ்யூவி கார் டீலர்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இது தொடர்பான ஸ்பை படங்களை கார்தேகோ செய்திதளம் வெளியிட்டுள்ளது. சூப்பர், ஷார்ப், ஸ்மார்ட் மற்றும் சேவி என்ற நான்கு விதமான வேரியண்ட்களில் க்ளோஸ்டர் இந்தியாவில் சந்தைப்படுத்தப்படவுள்ளது.

அக்டோபர் மாத அறிமுகத்திற்கு முன்னதாக, இந்திய ஷோரும்களை வந்தடைந்தது புத்தம் புதிய எம்ஜி க்ளோஸ்டர்...

அதேபோல் 6 மற்றும் 7 இருக்கை தேர்வுகளில் இந்த எஸ்யூவி காரை எம்ஜி நிறுவனம் விற்பனை கொண்டுவரவுள்ளது. இந்த இருக்கை அமைப்புகளில் என்ஜின் தேர்வுகளாக 2.0 லிட்டர் டர்போ-டீசல், 2.0 லிட்டர் இரட்டை-டர்போ டீசல் என்ற இரு என்ஜின் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன.

அக்டோபர் மாத அறிமுகத்திற்கு முன்னதாக, இந்திய ஷோரும்களை வந்தடைந்தது புத்தம் புதிய எம்ஜி க்ளோஸ்டர்...

இதில் 2.0 லிட்டர் டர்போ-டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 163 பிஎச்பி மற்றும் 373 என்எம் டார்க் திறனையும், இரட்டை-டர்போ டீசல் என்ஜின் 218 பிஎச்பி மற்றும் 480 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. இவற்றுடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படவுள்ளது.

அக்டோபர் மாத அறிமுகத்திற்கு முன்னதாக, இந்திய ஷோரும்களை வந்தடைந்தது புத்தம் புதிய எம்ஜி க்ளோஸ்டர்...

இந்த என்ஜின் சிங்கிள்-டர்போ என்ஜின் ஆற்றலை பின் சக்கரங்களுக்கும், இரட்டை-டர்போ என்ஜின் ஆற்றலை அனைத்து சக்கரங்களுக்கும் வழங்கும். க்ளோஸ்டர், எஸ்யூவி பிரிவில் முதல் மாடலாக தானியங்கி அவசரகால ப்ரேக்கிங், ஆட்டோமேட்டிக் பார்க்கிங் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றை பெற்று வரவுள்ளது.

அக்டோபர் மாத அறிமுகத்திற்கு முன்னதாக, இந்திய ஷோரும்களை வந்தடைந்தது புத்தம் புதிய எம்ஜி க்ளோஸ்டர்...

இவை மட்டுமின்றி பவர் டெயில்கேட், பிஎம் 2.5 வடிக்கட்டி உடன் மூன்று-நிலை க்ளைமேட் கண்ட்ரோல், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் 12.3 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், மசாஜ் செயல்பாட்டுடன் 12 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை மற்றும் பனோராமிக் சன்ரூஃப் முதலியவற்றையும் இந்த எஸ்யூவி காரில் எதிர்பார்க்கலாம்.

அக்டோபர் மாத அறிமுகத்திற்கு முன்னதாக, இந்திய ஷோரும்களை வந்தடைந்தது புத்தம் புதிய எம்ஜி க்ளோஸ்டர்...

பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்பக்க மோதலுக்கான எச்சரிக்கை, ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதிகளை கண்காணிக்கும் வசதி, பயணம் ஆரம்பிக்கும் முன் காரில் உள்ள குறைகளை எச்சரிக்கும் அமைப்பு, ஓட்டுனரின் உடல் சோர்வை நினைவூட்டும் சிஸ்டம் மற்றும் 360 கோண கேமிரா போன்றவற்றை இந்த எம்ஜி கார் பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அக்டோபர் மாத அறிமுகத்திற்கு முன்னதாக, இந்திய ஷோரும்களை வந்தடைந்தது புத்தம் புதிய எம்ஜி க்ளோஸ்டர்...

இவை மட்டுமின்றி 6 காற்றுப்பைகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், மலை பாதைகளுக்கான கண்ட்ரோல் மற்றும் இபிடி உடன் ஏபிஎஸ் உள்ளிட்டவற்றையும் இந்த எஸ்யூவி காரில் எம்ஜி நிறுவனம் வழங்கியிருக்கும். எம்ஜி க்ளோஸ்டர் முழு-அளவு எஸ்யூவியின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.35 லட்சம் அளவில் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் மாத அறிமுகத்திற்கு முன்னதாக, இந்திய ஷோரும்களை வந்தடைந்தது புத்தம் புதிய எம்ஜி க்ளோஸ்டர்...

விற்பனையில் இந்த எம்ஜி தயாரிப்புக்கு ஃபோர்டு எண்டேவியர், டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோக்ஸ்வேகன் டிகுவாம் ஆல்ஸ்பேஸ், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள ஸ்கோடா கோடியாக் பெட்ரோல் முதலியவை போட்டியாக விளங்கவுள்ளன.

Most Read Articles
English summary
MG Gloster Starts Arriving At Dealerships Ahead Of October Launch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X