Just In
- 1 hr ago
மாருதி அரேனா கார்களுக்கு ஆன்லைன் மூலமாக எளிதாக கடன் பெறும் திட்டம்!
- 1 hr ago
ரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா?
- 1 hr ago
2021 சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்125 பைக் சர்வதேச சந்தையில் அறிமுகம்!! 125சிசி பைக்கிற்கு இவ்வளவு விலையா?!
- 4 hrs ago
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
Don't Miss!
- Movies
'எனக்கு கொரோனா இல்லை, இல்லவே இல்லை, அதை நம்பாதீங்க..' பிரபல நடிகை திடீர் மறுப்பு!
- News
தடுப்பூசிகள் இரண்டுமே பாதுகாப்பானவைதான்.. வதந்திகளை நம்பாதீங்க... மோடி வேண்டுகோள்!
- Sports
அவ்ளோ ஈஸியா விட்டுற மாட்டோம்.. ஆஸி.வை சுருட்டிய 2 தமிழக வீரர்கள்!
- Lifestyle
இந்தியாவில் போடப்படும் கோவிட்-19 தடுப்பூசி பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!
- Education
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகளை எட்டியது எம்ஜி க்ளோஸ்டர்... விரைவில் சந்தையில் அறிமுகம்...
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் அடுத்த அறிமுக மாடலான க்ளோஸ்டர் எஸ்யூவி மாடலின் மாதிரி கார் ஒன்று சில்வர் நிறத்தில் 6-ஸ்போக் அலாய் சக்கரங்களுடன் சாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த எம்ஜியின் இந்த எஸ்யூவி மாடல் 7-இருக்கை அமைப்பை கொண்ட வாகனமாகும். ஆட்டோ எக்ஸ்போவை தொடர்ந்து இந்த 2020 மாடல் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையிலும் மறைக்கப்படாத நிலையிலும் சோதனையில் உட்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஸ்பை படங்கள் ஒவ்வொரு முறையும் நமக்கு புது புது விபரங்களை வெளிப்படுத்தியுள்ளன. இந்த வகையில் தற்போது ‘தி ஸ்பை ஆட்டோநியுஸ்' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள ஸ்பை படங்களில் க்ளோஸ்டரின் சோதனை கார் முன்பு போல் இல்லாமல் தயாரிப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் உள்ளது.

சில்வர் நிறத்தில் ஜொலிக்கும் இந்த சோதனை எம்ஜி க்ளோஸ்டர் காரில் 19 இன்ச்சில் 6-ஸ்போக் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது தவிர்த்து மற்ற ஹைல்லைட் பாகங்களாக குவாட் எக்ஸாஸ்ட், ரன்னிங் போர்ட்ஸ், சற்று பெரியதான சஸ்பென்ஷன் (மேக்ஸஸ் 90-ல் உள்ளதை போன்று), எல்இடி லைட்டிங் உள்ளிட்டவை நம் கண்களுக்கு காட்சியளிக்கின்றன.

உட்புறத்தில் குறிப்பிடத்தக்க அம்சங்களாக லெதர் இருக்கைகள், மடக்கும் வசதி கொண்ட முன்புற இருக்கைகள், நடு வரிசையில் கேப்டன் இருக்கைகள் (டாப் ட்ரிம்களுக்கு மட்டுமே), பனோராமிக் சன்ரூஃப், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், யாச்ட் த்ரோட்டல் போன்ற கியர் லிவர், 12.3 இன்ச்சில் தொடுத்திரை, பல-நிலை ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

இதன் சர்வதேச மாடல் ஹீட்டட் & கூல்டு இருக்கைகளையும் கொண்டுள்ளது. சர்வதேச சந்தையில் விற்பனையில் உள்ள மேக்ஸஸ் டி90 மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகின்ற க்ளோஸ்டர் எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 221 பிஎச்பி மற்றும் 360 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் என்ற கியர்பாக்ஸ் தேர்வுகளை ஏற்கவுள்ள இந்த எஸ்யூவி கார் ஆனது பின்-சக்கர ட்ரைவ் மற்றும் அனைத்து சக்கர ட்ரைவ் என்ற வடிவங்களில் விற்பனை செய்யப்படவுள்ளது.

நமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி எம்ஜி க்ளோஸ்டருக்கு இரட்டை-டர்போ 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜின் தேர்வும் வழங்கப்பட வாய்ப்புள்ளது. அதிகப்பட்சமாக 215 பிஎச்பி மற்றும் 480 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு பொருத்தப்படவுள்ள இந்த பெட்ரோல் என்ஜின் தொகுப்பில் ஆட்டோமேட்டிக் மற்றும் அனைத்து-சக்கர ட்ரைவ் சிஸ்டங்களும் அடங்கலாம்.

இந்திய சந்தையில் ஃபோர்டு எண்டேவியர், டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 உள்ளிட்டவற்றின் விற்பனை போட்டியினை சமாளிக்கவுள்ள க்ளோஸ்டர் எஸ்யூவி மாடலின் எக்ஸ்ஷோரூம் விலையில் தான் எம்ஜி நிறுவனம் கவனமாக செயல்படும். ஏனெனில் அதன் மூலமாக தான் வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும் என்று அந்நிறுவனத்திற்கு தெரியும்.